spot_img
May 15, 2024, 12:27 am
spot_img

நீங்களும் வாங்க… 100 நாட்கள்…10,000 வாசகர்கள்… டாப் 10 கட்டுரைகள்

அழைக்கிறோம்

2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா இணைய இதழ் தொடங்கப்பட்டது. இதழ் தொடங்கப்பட்டு 100 நாட்கள் கடந்த நிலையில் கூகுள் அனல்டிக்ஸ் மூலமாக கிடைத்த தரவுகளின்படி நுகர்வோர் பூங்காவை பத்தாயிரத்துக்கு மேற்பட்ட  வாசகர்கள் வாசித்துள்ளார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில்  வசிக்கும் தமிழர்களால் நுகர்வோர் பூங்கா வாசிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றியை வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எங்களது பயணத்தில் உங்களுடைய பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம். (விபரங்கள் கீழே)

பூங்கா இதழ்

நுகர்வோர் பூங்கா தொடங்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டபடி கடந்த ஏப்ரல் முதல் நாளில் “பூங்கா இதழ்” https://thenewspark.in/  என்ற பொதுவான செய்தி இணைய  இதழ் தொடங்கப்பட்டு விட்டது.  வரும் ஜூலை முதல் நாளில் இருந்து ஆங்கிலத்தில் ஆய்வு பூங்கா (research park) என்ற இணைய இதழ் வெளிவர உள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் நாளிலிருந்து சர்வதேச அமைதிக்கான உத்திகள்   இணைய கல்வி நிறுவனம் (International Institute of Peace Strategies) தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “உள்ளபடி சொல்வோம்! ஆய்வும் செய்வோம்!” என்பது இந்த சமூக ஊடகத்தின் கொள்கை.   “புதுமையான, உன்னத அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்” என்ற முழக்கத்துடன்  எங்களது பயணத்தில் தாங்களும் பல்வேறு வகைகளில் பங்களிக்கலாம்! ஆதரிக்கலாம்!

தூதுவர்/புரவலர் (Good Will Ambassadors/Patrons) 

செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு   செல்வதை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண தூதர்களை  நியமிக்கவும்     பூங்கா இதழ்   மற்றும்  நுகர்வோர் பூங்காவின் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை புரவலர்களாக நியமிக்கவும் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் இந்த பகுதியில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க  விரும்புவோர் [email protected]/ மற்றும் [email protected].        என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எழுத்தாளராக  பங்களிக்கலாம்

பொதுவான –   உபயோகமான –  விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையிலான கட்டுரைகளும்   சிறப்பு படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் படைப்புகளை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]/ மற்றும் [email protected]. ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் நுகர்வோர் பூங்கா அல்லது பூங்கா இதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வெளியிடப்படும்.  தேர்வு செய்யப்படாத கட்டுரைகளை   திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு எவ்வித சன்மானமும் வழங்கப்படாது. கட்டுரையாளரின் பெயரும் புகைப்படமும் கட்டுரையுடன் வெளியிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி கட்டுரையாளராக பங்களிக்கலாம்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த 25 வயதை மிகாத இளைஞர்களுக்கும் செய்தியாளர்/கட்டுரையாளர் பயிற்சியை நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் வழங்குகிறது. இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected]  மற்றும் [email protected]   என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8 என்ற இணையதள   கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வாளராக பங்களிக்கலாம்

சமூக விழிப்புணர்வு தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் திட்டமிட்டுள்ளது.  இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected]  மற்றும் [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது   https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8  என்ற இணையதள   கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விளம்பரதாரராக பங்களிக்கலாம்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்படும் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் சிறப்பாக செயல்பட நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழில் விளம்பர வருமானம் அத்தியாவசியமானது. எங்களை ஆதரிக்க “பூங்கா இதழில்” விளம்பரம் செய்ய முன் வாருங்கள் மேலும் விவரங்களுக்கு [email protected]/ மற்றும் [email protected]     என்ற   மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.  

விரிவாக்க அலுவலராக பங்களிக்கலாம்

சமூக ஊடக  கட்டுரைகள் மூலம் மக்கள் பயன்பெற நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் சமூக ஊடகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில்   தன்னார்வ விரிவாக்க அலுவலராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கோரப்படாத போது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விரிவாக்க அலுவலர் குழுவில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு தக்க சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு [email protected]/ மற்றும் [email protected]  என்ற       மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். 

அதிகம் வாசிக்கப்பட்ட 10 கட்டுரைகள்

தெங்குமரஹாடா: அழகிய, அதிசய, காண வேண்டிய தமிழக கிராமத்துக்கு செல்ல அனுமதி பெறுவது எப்படி? கிராமம் முழுமையும் இடமாற்றமா?

புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

எந்த வயதினரும் ஐஐடி உள்ளிட்ட   கல்வி நிறுவனங்களில் கட்டணம் இல்லாமல் படிக்கலாம்

விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?

தமிழக மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்புகளில் விஞ்ஞானியாக பணியாற்ற இணைவது எப்படி? – இஸ்ரோ விஞ்ஞானி

ஆளுநரை சட்டமன்றங்களே பதவி நீக்கம் செய்யலாம்

இந்திய தேசம் அதிபர் ஆட்சி, ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா?

இரண்டு வார்த்தைகளை வைத்து இழப்பீடு வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம்

தங்கத்தைப் பற்றிய தெரிந்த மற்றும் தெரியாத உண்மைகளையும் ஏமாற்று வர்த்தக   நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்!

தமிழர்கள் உட்பட இந்தியராயினும் நான்கு இந்திய மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி பெற வேண்டும்.  குறைந்தபட்சம் தமிழகத்தில் நுழையும்   வெளிமாநிலத்தவர்கள் புள்ளி விவரம் பராமரிக்கப்படுமா?

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்