spot_img
May 15, 2024, 2:43 am
spot_img

வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?

ஒரு பொருளைப் பற்றி அல்லது வழங்கப்படும் சேவையைப் பற்றி தவறாக எடுத்துக் கூறும் விளம்பரமும்  ஒரு பொருள் அல்லது சேவையின் தன்மை,   அளவு, தரம் (nature,   quantity or quality) குறித்து தவறான உத்தரவாதத்தை வழங்கும் விளம்பரமும் விற்பனை செய்யப்படும் பொருள் அல்லது வழங்கப்படும் சேவையை   பற்றிய முக்கியமான தகவல்களை மறைக்கும் விளம்பரமும் 2019, நுகர்வோர் பாதுகாப்பு  சட்டத்தின்படி நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் (misleading advertisement) ஆகும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தவறாக வழி நடத்தும் விளம்பரங்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கில் அபராதமும் அல்லது சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு (Central Consumer Protection Authority) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

பணத்தை செலுத்தி பொருள் அல்லது சேவையை வாங்கும் நுகர்வோருக்கு இத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பணத்தைவிட விலைமதிப்பற்ற   தமது வாக்கை செலுத்தி ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை   தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் வாக்காளர்களுக்கு உள்ளதா?

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவை தேர்தல் திருவிழா அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்  அரசுகள் தாங்கள் ஆட்சிக்கு வந்து   என்ன செய்தோம்? என்ற விளம்பரங்களை அரசு நிதியில் இருந்து வழங்க தொடங்கி விட்டனர்.  தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆளும் அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியில் என்ன செய்தோம்? என்ற சாதனைகளை விளம்பரம் செய்கின்றன.

உதாரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் ஒரு கோடி மக்களுக்கு தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வழங்கினோம் என்று ஆளும் அரசியல் கட்சி தேர்தலில் விளம்பரம் செய்கிறது என்றால் அந்த விளம்பரத்தில் உண்மை தன்மை உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். 

ஆளும் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வழங்கும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவது அவசியமாகும்.  இது மட்டுமல்லாமல் தேர்தல் வருவதற்கு முன்பாக ஆளும் அரசியல் கட்சிகள் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அரசின் பணத்தில் செய்யும் விளம்பரங்களில் உண்மை தன்மை உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் அதிகாரமும் வாக்காளருக்கு இருக்க வேண்டும்.  தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தில் தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?

வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தை பெற முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியுமா? (Can anyone deny that true democracy can only be achieved by empowering the electorate/voters?)

Picture: # Dr.V.Ramaraj, ## Father of Voterology

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்