செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
நுகர்வோரை பல வழிகளிலும் ஏமாற்ற முயற்சிக்கும் இணைய வர்த்தக முறைகளை அறிவோம்!
நுகர்வோர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றார்கள்? அவர்களுடைய மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகிறது? என்பதை பற்றி சரியாக புரிந்து கொண்டோமானல் எதிர்காலத்தில் இணைய வர்த்தகத்தில் நாம் ஏமாறாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கணவரை இழந்த பெண்ணுக்கு ரூபாய் 80 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவிக்கு இன்சூரன்ஸ் தொகையை மறுத்தது சேவை குறைபாடு என தீர்ப்பளித்துள்ளார்கள் (10-09-2024). இன்சூரன்ஸ் செய்திருந்தவருக்கு ஏற்கனவே இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது என்பதை நிரூபிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் போதிய சாட்சியம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இறந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 16 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்து, கடந்த 03 செப்டம்பர் 2024 அன்று தீர்ப்பளித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்தது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தெரிவித்துள்ளது. பர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ் பாலிசியின்படி இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூபாய் 15 இலட்சமும் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு இலட்சமும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது
வணிக நடவடிக்கையாக இருப்பினும் சேவை குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தேசிய நுகர்வோர் ஆணையம்
கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. பங்கு பரிவர்த்தனை பிரச்சனை கம்பெனியில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டியது என்பதாலும் வணிக ரீதியிலான பரிவர்த்தனையை விசாரிக்க நுகர்வோர் சட்டத்தில் இடம் இல்லை என்பதாலும் வழக்கு தாக்கல் செய்தவர்களின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிறுவனம் வாதிட்டது.
விபத்துக்குள்ளான காரின் உரிமையாளருக்கு ரூ 80,000/- வழங்க இன்சூரன்ஸ்நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
காரில் ஏற்பட்ட சேதத்திற்கான முழு தொகையையும் வழங்க தவறியதால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது காரின் உரிமையாளர் கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் முழு தொகையையும் காரின் உரிமையாளருக்கு வழங்காதது சேவை குறைபாடு என்று 2024 செப்டம்பர் 4 அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.