நாங்கள்

“நுகர்வோர் பூங்கா” (https://theconsumerpark.com/) என்பது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் (Tranquility Strategies Private Ltd.,) வெளியீட்டுப் பிரிவின் ஒரு பிரிவாகும். எங்கள் அமைப்பின் முக்கிய குறிக்கோள் “புதுமையான – உன்னத அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்” (“Creating Innovative – Noble Culture of Peace”) ஆகும். வியூகம் வகுத்து அதற்கேற்ப செயல்படுவதே எங்கள் திட்டம். எங்கள் பணிகளில் ஒன்று அமைதிக்கான விழிப்புணர்வை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்துவதாகும்.

“நுகர்வோர் பூங்கா” என்பது ஒரு செய்தி தளம்/சமூக ஊடகம்/ இணைய இதழ் ஆகும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக அமலில் உள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான கட்டுரைகளையும் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கட்டுரைகளையும் நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் பொதுவான செய்தி கட்டுரைகளையும் பகுப்பாய்வு/விசாரணையுடன் வழங்குகிறோம். பொது நலன் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அர்ப்பணிப்புடன் நேர்மையான நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

“உள்ளபடி சொல்வோம் – ஆய்வும் செய்வோம்” என்பதே எங்களின் முதன்மைக் கொள்கை. நடுநிலை வெளியீடு, அங்கீகரிக்கப்பட்ட தகவல், தகவல் சார்ந்த செய்திகள், தரவு சார்ந்த கட்டுரைகள், எளிமையான படைப்புகள், பகுப்பாய்வு மற்றும் விசாரணையுடன் வெளியீடு ஆகியவையும் எங்கள் கொள்கைகளாகும். “எங்கள் வெளியீடுகளைப் படித்து எங்களை ஆதரிக்கவும்” என்பதே எங்கள் வேண்டுகோள். 

எங்கள் தொடர்பு மின்னஞ்சல் முகவரி: [email protected].  What’s App: 9487665454 (தகவல் அனுப்ப மட்டும்)

திரு கே. பி. மனோகரன், பி.இ., எல்.எல்.பி., 
நிர்வாக இயக்குனர், 
அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

திரு கே. கதிர்வேல், 
ஆசிரியர் & வெளியீட்டாளர் 
“நுகர்வோர் பூங்கா” தமிழ் இணையதள பதிப்பு