spot_img
December 4, 2024, 7:59 pm
spot_img

நுகர்வோர் நீதிமன்ற எச்சரிக்கையால் கணவனை இழந்த பெண்மணிக்கு ரூபாய் 22.76 லட்சம் வழங்கிய இன்சுரன்ஸ் நிறுவனம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிராந்தகத்தில் வசிப்பவர் முருகன் மனைவி செல்வி.  கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவரது கணவர் முருகன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார்.  இறந்து போன முருகன் இரு சக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததோடு அவருக்கும்   தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சத்திற்கு   தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் (Reliance) ஒன்றில் பிரிமியம் செலுத்தியிருந்தார்.

கணவரின் இறப்பிற்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குமாறு செல்வி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார். இன்சூரன்ஸ் பணத்தை வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது கடந்த 2022 ஜூன் மாதத்தில் நாமக்கல் மாவட்ட   நுகர்வோர் நீதிமன்றத்தில் செல்வி வழக்கு தாக்கல்  செய்திருந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் தீர்ப்பு வழங்கினர். இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவிக்கு நான்கு வார காலத்துக்குள் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 15 லட்சத்தையும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும்   விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தீர்ப்புப்படி காப்பீட்டுத் தொகையையும் இழப்பீட்டுத் தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய காலத்துக்குள் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேனேஜரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று   கடந்த ஜூன் 2024 -ல் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குக் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது தீர்ப்புப்படி பணத்தை கணவனை இழந்த பெண்மணிக்கு வழங்கவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேனேஜரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.

இந்நிலையில் தீர்ப்புப்படி வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ரூ 15,000,00/-, சேவை  குறைபாட்டிற்கான இழப்பீட்டுத் தொகை ரூ 1,00,000/-  மற்றும் இந்த 16 லட்சத்திற்கு செல்வியின் கணவன் விபத்தில் இறந்த நாளில் இருந்து தற்போது வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி ஆகியவற்றிற்கான வரைவோலையை இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் இன்று (08-08-2024) சமர்ப்பித்தது. இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட செல்விக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் ரூ 22,76,226/ -க்கான வரைவோலையை வழங்கினார் அப்போது நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் ஆர் ரமோலா என் லட்சுமணன், செல்வியின் வழக்கறிஞர் கே. ராஜு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் பி. ராஜவேலு  ஆகியோர் உடன் இருந்தனர்.  

புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்