spot_img
July 20, 2025, 2:59 pm
spot_img

முன்பதிவு தொகையை பெற சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டும்?, அறையில் தங்கினால் கட்டாயமாக உணவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சேவை குறைபாடு – நுகர்வோர் நீதிமன்றம்

திருமண மண்டபம் முன்பதிவு தொகையை பெற சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டும் என்று கூற முடியாது

டெல்லி அருகே உள்ள சாப்ரா பாம்ஸ் (Chhabra Farms-Farmhouse) என்ற பண்ணை தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் 2018 பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடத்துவதற்காக டெல்லியில் வசிக்கும் மனிஷ் கண்டேல்வால் என்பவர் என்ற பண்ணை தோட்ட நிர்வாகத்தை அணுகியுள்ளார். திருமணத்தின் போது பண்ணை தோட்டம் முழுவதும் அலங்கார விளக்குகளை அமைக்க உள்ளதால் போதுமான மின் இணைப்பு (electricity load) வசதி உள்ளதா? என்று பண்ணை தோட்ட நிர்வாகத்திடம் அவர் கேட்டுள்ளார்.  அதற்கு போதுமான வசதிகள் செய்து தரப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2017 மே மாதத்தில் ரூபாய் 2 லட்சம் கொடுத்து முன்பதிவு (booking) செய்துள்ளார். 

திருமணம் நடத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பண்ணை தோட்டத்தை பார்வையிட்டபோது அலங்கார விளக்குகளை அமைக்க போதுமான வசதிகள் அங்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பண்ணை தோட்ட நிர்வாக தினம் கேட்டபோது உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளதோடு மாற்று ஏற்பாடுகளை செய்து தர முன்வரவில்லை. இதனால் மண்டபத்தை முன் பதிவு செய்தவர் திருமண   நிகழ்வு அங்கு நடப்பதை ரத்து செய்து விட்டார். இதன் பின்னர் முன்பணத்தை (advance amount) திரும்ப கேட்டுள்ளார் நிர்வாகியிடம் முன்பணத்தை திரும்ப கேட்டுள்ளார் ஆனால் நிர்வாகம் தரப்பில் எழுதப்பட்ட முன்பணத்தை திரும்பத் தரவில்லை. 

இதன் காரணமாக முன்பதிவு செய்தவர் பண்ணை தோட்ட நிர்வாகம் மீது டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் (Consumer Complaint NO. DC/84/CC/19/8 at Delhi Consumer Disputes Redressal Commission). இந்த வழக்கு விசாரணையின் போது பணத்தை திரும்ப பெற சிவில் நீதிமன்றத்தில்தான் வழக்கு தாக்கல் செய்ய தவிர வேண்டுமே தவிர நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று பண்ணை தோட்ட நிர்வாகம் விசாரணையின் போது நுகர்வோர்  நீதிமன்றத்தில் வாதிட்டது.. இரு தரப்பு விசாரணைக்கு பின்னர் கடந்த 17 ஏப்ரல் 2025 அன்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டிரான்ஸ் மெடிட்டரேனியன் ஏர்வேஸ் /எதிர்/ மெஸ்ஸஸ். யுனிவர்சல் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் அன். VIII (2011) SLT 339 (Trans Mediterranean Airways vs M/s. Universal Exports and Anr. VIII (2011) SLT 339)  என்ற வழக்கில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தீர்வு என்பது கூடுதல் தீர்வு என கூறப்பட்டுள்ளது என்றும் எனவே, புகார்தாரர் தனது தொகையை மீட்டெடுப்பதற்காக சிவில் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று வாதிட முடியாது என்றும் இதனால் புகார்தாரரின் வழக்கு ஏற்புடையது என்றும் தீர்ப்பளித்துள்ளது. 

வழக்கு தாக்கல் செய்தவருக்கு பண்ணை தோட்ட நிர்வாகம் சார்பில் முன்பணமாக பெற்ற ரூபாய் இரண்டு லட்சத்தை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறையில் தங்கினால் கட்டாயமாக உணவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சேவை குறைபாடு

புதுடில்லியில் வசிக்கும் அனுஜ் மகாஜன் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா மகாஜன் ஆகியோர் 8 நபர்கள் கொண்ட தமது குடும்பத்துடன் 2018 டிசம்பர் 30 ஆம் தேதி முதல் 2019 ஜனவரி முதல் தேதி வரை ஜெய்ப்பூரில் (Jaipur) உள்ள ஒரு ஹோட்டலில் (Clarks Hotel) தங்குவதற்காக மேக் மை ட்ரிப் நிறுவனம் மூலமாக முன்பதிவு செய்துள்ளனர்.  இணையதளத்தில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக மேக் மை ட்ரிப் (Make My Trip) நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட தினத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அந்த ஹோட்டலில் தங்க இரவு உணவுக்கான கட்டணத்தை கூடுதலாக செலுத்துவது கட்டாயமான விதி என்று கூறப்பட்டுள்ளது குடும்பத்துடன் சென்றதால் வேறு வழி இன்றி உணவு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர் ஆனால் பெறப்பட்ட உணவு கட்டணம் ஆனது அபரிமிதமான (extraordinary) ஒன்றாக இருந்துள்ளது. இதுகுறித்து மேக் மை ட்ரிப் நிறுவனத்தில் கேட்டபோது சரியான பதில் தரப்படவில்லை.

அனுஜ் மகாஜன் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் மேக் மை ட்ரிப் நிறுவனம் மீதும் ஹோட்டல் நிர்வாகம் மீதும் டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் (Case No.CC/98/2018-577). ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் யாரும் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. தங்களது விதிகளில் கட்டாய உணவு கட்டணம் குறித்து கூறப்பட்டுள்ளது என்று மேக் மை ட்ரிப் நிறுவனம் வாதிட்டது. ஆனால், இது குறித்து நிறுவனத்தின் இணையதளத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொண்ட டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2025 ஏப்ரல் 1 அன்று வழங்கிய தீர்ப்பில் மேக்மை நிர்வாகத்தின் வாதத்தை நிராகரித்துள்ளது. 

வழக்கு தாக்கல் செய்தவரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை ரூ 8965/- மற்றும் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ 40,000/- ஆகியவற்றை வட்டியுடன் 45 நாட்களுக்குள் ஹோட்டல் நிர்வாகமும் மேக் மை ட்ரிப் நிறுவனமும் வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: தீர்ப்புகள் நுகர்வோருக்கு சாதகமாக இருந்தாலும் இதனை வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் முழுவோரை பாதிக்கக் கூடியது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்