spot_img
July 20, 2025, 3:22 pm
spot_img

ஆறு மணி நேரம் இயங்காததால் வாட்ஸ்அப் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாக்கூர் என்பவர் தற்போது ஆசாத் அதிகார சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவராக இருப்பவர் தற்போது இவர் உத்தர பிரதேசத்தில் வசித்து வருகிறார். தமது மொபைல் போனில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் (whatsapp) ஆறு மணி நேரம் வேலை செய்யவில்லை என்றும் இதனால் தமக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது என்றும் இத்தகைய வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்கை சேவை குறைபாடு (deficiency in the service) என்றும் அதற்கு அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் மீது லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (District Consumer Commission) வழக்கு தாக்கல் அமிதாப் தாக்கூர் செய்துள்ளார்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

அமிதாப் தாக்கூரின் வழக்கை எடுத்துக்கொண்டு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அறிவிப்பு அனுப்பி விசாரணை நடத்த லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு சர்வதேச கம்பெனி என்றும் அதன் சேவைகளை பயன்படுத்த தாக்கூர் எவ்வித கட்டணத்தையும் செலுத்தவில்லை என்றும் கட்டணம் செலுத்தி சேவையை பெறாத நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் மீதான புகார் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஏற்புடையது அல்ல என்றும் லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்தது தெரிவித்திருந்தது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் மீதான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்த லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து   உத்தரப்பிரதேச மாநில நுகர்வோர் ஆணையத்தில் (State Consumer Commission)  அமிதாப் தாக்கூர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணையம் கடந்த 16 ஏப்ரல் 2025 அன்று தீர்ப்பு வழங்கியது. 

வாட்ஸ் அப் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் (foreign company) என்ற போதிலும் இந்தியாவிலும் அதன் சேவைகளை அந்த நிறுவனம் வழங்குவதால் இந்தியாவில் அமலில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்றும் இரு நபர்களுக்கிடையே தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் தளமாக வாட்ஸ் அப் இருக்கின்ற நிலையில் நுகர்வோரை இருப்பதற்காக வாட்ஸ் அப் பணியாற்றுகிறது என்ற நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சேவை வழங்கும் நிறுவனம் (service provider) ஆகும் என்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார் என்றும் இதனால் வாட்ஸ்அப் நிறுவனம்  தாக்கல் செய்த புகாரை விசாரணை எடுக்க அல்லது தவறு என்றும் தீர்ப்பளித்தது. மேலும், தாக்கூரின் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மூன்று மாத காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனமானது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.  உயர்நீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு 6 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு  தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தாக்கல் செய்த வாட்ஸ் அப் நிறுவனம் மீதான வழக்கை லக்னோ மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் விசாரிக்க தடைவித்தும் நேற்று இடைக்கால தடை விதித்து (interim stay) நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளராக தாக்கூர் தனது புகாரை தாக்கல் செய்திருந்தாலும், தகவல் தொடர்பு தளங்கள் (communication platforms) சேவையின் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற ஓவர்-தி-டாப் (OTT) தகவல் தொடர்பு சேவைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI: Telecom Regulatory Authority of India) கீழ் லைசென்ஸ் முறையில் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றன. 

சேவை (service), தரநிலைகள் (standard) உட்பட, தற்போதுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தேவைகள் (requirements) தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பது போல வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் பரிமாற்ற தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாதிட்டு வருகின்றனர்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: கட்டணமில்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவமனை ஒன்றில் கட்டணம் பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை வழங்கும் பிரிவு இருக்குமானால் அந்த மருத்துவமனையில் கட்டணம் இல்லாமல் மருத்துவ சேவை வழங்கி அதனை பெறுவோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடலாம் என்ற ஒரு தீர்ப்பை ஏற்கனவே உயர் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போலவே, தகவல் பரிமாற்ற தளங்கள் அவற்றின் சேவைகளை இலவசமாக நுகர்வோருக்கு வழங்கினாலும் அதே வகை சேவைகளால் பெருத்த லாபம் ஈட்டுகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும் இந்நிலையில் கட்டணமில்லா சேவைகள் மூலமாகவே இந்த நிறுவனங்கள் நுகர்வோரை கவருகின்றன என்பதும்  இதன் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக அதே வகை தேவைகளால் கோடிக்கணக்கில் லாபம் பெறுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்