spot_img
December 4, 2024, 7:57 pm
spot_img

கடந்த ஏழு நாட்கள்:  மீண்டும் உலகப் போரா? ஒன்பது வயதானால் பெண்களுக்கு திருமணம் செய்யலாம்?  உள்ளிட்ட செய்திகளும் கேள்விகளும் 

மீண்டும் உலகப் போரா?

ஈரான் பிரதமர் படுகொலை செய்யப்பட்டது தொடர்ந்து புதிய பிரதமர் பதவி பதவி ஏற்பு விழாவிற்கு சென்ற ஹமாஸ் அமைப்பின் தலைவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்து உள்ளது. ஹமாஸ், ஹவுதி உள்ளிட்டவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான், லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்கலாம் என்று என்ற நிலை இருந்து வருகிறது. இவ்வாறு போர் தொடங்கப்பட்டால் இஸ்லாமிய நாடுகளில் பல இஸ்ரேலுக்கு எதிரான போரில் அணிவகுத்து நிற்கும். இந்த சூழ்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட   மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கக் கூடும். இவை மூன்றாவது உலகப்போருக்கு அழைத்துச் சென்று விடுமோ? என்ற பயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் அமைதி திரும்புமா?

வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அனைவரும் அறிவோம். இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சருக்கு இணையான அதிகாரத்தை கொண்ட தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் அவர்களை கடந்த வாரம் அந்நாட்டின் குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். முகமது யூனுஸ் யுனுசுடன் ஆலோசகர்களும் அமைச்சர் அந்தஸ்தில் பதவியேற்று கொண்டுள்ளனர். இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைதியை ஏற்படுத்துமா?

பிஜியில் உள்ள இந்தியர்களின் மக்கள் தொகையில் 38 சதவீதம் இந்தியர்களா?

தீவுக் கூட்ட நாடான பிஜிக்கு சென்ற இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ அவர்களுக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதான “கம்பானியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி” என்ற விருதை பிஜி அதிபர் கேடோனி விர் வழங்கியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஜியில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 38 சதவீதம் (3,20,000) இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இவர்கள் இந்திய சுதந்திரத்துக்கு முன்னதாகவே அந்த நாட்டில் உள்ள கரும்பு தோட்டங்களில் விவசாய பணிகளுக்காக சென்ற இந்தியர்களின் வாரிசுகள் ஆவார்கள்.

சர்வதேச அரங்கில் குழந்தை திருமண தடுப்பு அலங்கார வார்த்தைக்காக மட்டுமா?

பெண் குழந்தைகளுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை வெறும் ஒன்பது ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி ஆண் குழந்தைகளுக்கு 15 வயதிலும், பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும். சர்வதேச குழந்தை பாதுகாப்புக்கான அமைப்புகளும் ஐக்கிய நாடுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் முதலிடம் தமிழகம்?

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 221 இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெற்று உள்ளது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 70 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ள இந்தியாவிலேயே அதிக இருதய மாற்று சிகிச்சைகளை கடந்தாண்டு செய்துள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.  இந்த தகவலை கடந்த வாரம் தேசிய உடல் உறுப்பு மாற்றுவதற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை உயர காரணம் என்ன?

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த மே 23 முதல் 25 வரை நடத்தப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் வெளியான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக உயர்ந்துள்ளது. 

திருப்பூரில் தொல்லியல் துறை ஆய்வு – ஏன் தெரியுமா?

திருப்பூரில் உள்ள கல்வெட்டுகளை மை தடவிய காகிதங்களில் நகலெடுக்கும் பயிற்சியை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.  கோவில்பாளையத்தில் உள்ள தாளீஸ்வரர் கோவிலில் 8 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

செய்தி தொகுப்பு:  பல்கீஸ் பீவி. மு & கே. ஸ்ரீ நித்யா – நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் – பயிற்சி கட்டுரையாளர்கள்/ நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்