சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும் மருத்துவர் கட்டாயப்படுத்தி இயற்கையான வகையில் வைத்தியம் பார்த்து பிரசவம் பார்த்தார் என்றும் குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் தலையில் மிகுந்த காயங்கள் இருந்தன (causing scalp injuries) என்றும் இதற்கு மருத்துவரின் அலட்சியமான மருத்துவ சிகிச்சையே காரணம் என்றும் மருத்துவர் மீது ஆந்திர பிரதேச நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மருத்துவர் அலட்சியமாக (medical negligence) செயல்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளார் என்பதை உறுதி செய்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
வாங்கிய ஷூக்களை உடனே காலில் மாட்டி பயன்படுத்த தொடங்கியுள்ளார் தேஷ்முக். ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இரண்டு காலுக்கும் வழங்கப்பட்ட ஒவ்வொரு ஷூக்கும் இடையில் சற்று உயர வேறுபாடு இருப்பதை கண்டறிந்ததுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக தடுமாறி பொது இடத்திற்கு கீழே விழுந்துள்ளார். உடனடியாக ஷூக்களை வாங்கிய குஸ்ஸி ஷூஸ் நிறுவன விற்பனை நிலையத்திற்கு அவர் சென்று பிரச்சனையை தெரிவித்துள்ளார். ஒருமுறை விற்பனை செய்யப்பட்டு விட்டால் அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய தங்களது நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு செல்ல வேண்டும் என்று விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனால் இதனால் விற்பனையாளர் தெரிவித்தபடி நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு தேஷ்முக் சென்றுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நுகர்வோர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மற்ற நீதிமன்றங்களை காட்டிலும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது எளிதானது (simple). நுகர்வோர் நீதிமன்றங்களில் 5 லட்சம் வரை நீதிமன்ற கட்டணம் கிடையாது. அதற்கு மேலும் பெயரளவிலேயே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (inexpensive). விரைவில் தீர்வு காணும் வகையில் சுருக்க முறையிலேயே இங்கு விசாரணை (speedy) நடைபெறுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண்பது எப்படி? என்று அறிய தங்களது பொன்னான ஐந்து நிமிடத்தை ஒதுக்கி இந்த கட்டுரையை படிக்குமாறும் தங்களது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புமாறும் நுகர்வோர் பூங்கா தங்களை அன்புடன் வேண்டுகிறது. இந்தக் கட்டுரை தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கட்டாயம் பயன்படக்கூடியதாக இருக்கும்.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் கவுன்சிலை மறுசீரமைத்து கடந்த 30 மே 2025 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த கவுன்சிலுக்கு மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைவராக இருப்பார். மாநில நுகர்வோர் கவுன்சிலின் உறுப்பினர் செயலாளராக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளர் இருப்பார்.
முன்பதிவு செய்யப்பட்ட தினத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அந்த ஹோட்டலில் தங்க இரவு உணவுக்கான கட்டணத்தை கூடுதலாக செலுத்துவது கட்டாயமான விதி என்று கூறப்பட்டுள்ளது குடும்பத்துடன் சென்றதால் வேறு வழி இன்றி உணவு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர் ஆனால் பெறப்பட்ட உணவு கட்டணம் ஆனது அபரிமிதமான (extraordinary) ஒன்றாக இருந்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் (foreign company) என்ற போதிலும் இந்தியாவிலும் அதன் சேவைகளை அந்த நிறுவனம் வழங்குவதால் இந்தியாவில் அமலில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்றும் இரு நபர்களுக்கிடையே தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் தளமாக வாட்ஸ் அப் இருக்கின்ற நிலையில் நுகர்வோரை இருப்பதற்காக வாட்ஸ் அப் பணியாற்றுகிறது என்ற நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சேவை வழங்கும் நிறுவனம் (service provider) ஆகும் என்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார் என்றும்.....
ஜனவரி 9 முதல் ஜனவரி 12, 2015 வரை தேவையான நோயறிதல்களைத் தொடங்க கோகூன் மருத்துவமனை தவறிவிட்டது. இதன் விளைவாக, பூஜா கோயல் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, பூஜா கோயல் ஜனவரி 15, 2015 அன்று இறந்துவிட்டார்......புரோட்டா உடன் குருமா தரவில்லை என்று மாவட்ட சப்ளையர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் உணவு வழங்கல் அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி இருவரும் விசாரணை நடத்தினர், உணவகம் குருமாவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கும் கொள்கையை உணவகம் வைத்துள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
நுகர்வோர் நீதிமன்றங்களை நீதித்துறையின் கீழ் கொண்டு செல்லும்போது நுகர்வோர் நீதிமன்றங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு விலகிவிடும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மத்திய அரசு ஒப்புக் கொண்டால் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.