நுகர்வோர் பூங்கா
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் (Tranquility Strategies) சார்பில் கடந்த 2024 ஜனவரி முதல் நாளில் நுகர்வோர் பூங்கா (www.theconsumerpark.com) தமிழ் இணைய இதழ் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்கான செய்தி கட்டுரைகளும் வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுவான செய்தி கட்டுரைகளும் நுகர்வோர் பூங்காவில் வெளியாகி வருகின்றன.
இந்தக் செய்தி கட்டுரைகளை ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வாசிப்பதையும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் நுகர்வோர் பூங்காவிற்கு வாசகர்கள் இருப்பதையும் தரவுகள் (analytics data) மூலம் அறிந்து நுகர்வோர் பூங்கா மகிழ்ச்சி கொள்கிறது.
பூங்கா இதழ்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் வரும் ஏப்ரல் முதல் நாளில் இருந்து பூங்கா இதழ் என்ற தமிழ் இணைய இதழ் தொடங்கப்படுகிறது. இதன் இணையதள முகவரி: www.thenewspark.in. இதில் தமிழகம், தேசம், சர்வதேசம், அரசியல், நிர்வாகம், புலனாய்வு என்ற தலைப்புகளில் செய்தி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தொழில், வர்த்தகம், விவசாயம் மற்றும் அறிவியல் குறித்த கட்டுரைகளும் குழந்தைகளுக்கும் மகளிருக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான செய்தி கட்டுரைகளும் பூங்கா இதழில் வெளிவர உள்ளன.
பூங்கா இதழில் சுற்றுலா, இயற்கை, கலை, திரை, இலக்கியம், விளையாட்டு, பண்பாடு, ஆன்மீகம், ஆரோக்கியம் சட்டம் உள்ளிட்ட செய்தி கட்டுரைகளும் வெளியிடப்பட உள்ளது. தலைவர்கள், சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரின் நேர்காணல்களும் கருத்துரைகளும் திறனாய்வுகளும் கேள்விகளும் இந்த இதழில் இடம்பெறும். பூங்கா இதழில் தொலைநோக்கு அடிப்படையில் அரசியலமைப்பு, வாக்காளரியல் (voterology), சர்வதேச உறவுகள், சர்வதேச அமைப்புகள், பாதுகாப்பு, அமைதி, போர் மற்றும் மோதல்கள் (war and conflicts) குறித்த செய்தி மற்றும் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன.
ஆய்வு பூங்கா
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் வரும் ஜூலை முதல் நாளில் இருந்து ஆய்வு பூங்கா (ஆங்கிலம்) என்ற இணைய இதழ் (www.researchpark.in) தொடங்கப்படுகிறது. இதில் கலை மற்றும் மனிதவியல் துறை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன.
சர்வதேச அமைதி
வரும் 2025 ஜனவரி முதல் நாளிலிருந்து சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி நிறுவனம் (International Institute of Peace Strategies) தொடங்கப்பட்டு செயல்பட உள்ளது. (www.peacestrategies.in). இந்த நிறுவனத்தின் சார்பில் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகள் சமூக அமைதிக்காகவும் உலக அமைதிக்காகவும் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரவேற்கிறோம்
பூங்கா இதழில் வெளியாக உள்ள தலைப்புகளில் 400 முதல் 600 வகையான வார்த்தைகளுக்குள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் பூங்கா இதழில் வெளியிடப்படும். சர்வதேச நிறுவனத்திலும் இணைய இதழ்களிலும் நல்லெண்ண தூதர்களும் (ambassadors) புரவலர்களும் (patrons) விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதழியல் மற்றும் அமைதிக்கான பணிகளில் நல்லெண்ண தூதுவர்களாகவும் புரவலர்களாகவும் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்கள் தொலைபேசி எண்ணை தெரிவித்தால் அமைதிக்கான நிறுவனத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்படும்.