spot_img
December 3, 2024, 11:17 pm
spot_img

ஜனவரி 25:  தேசிய வாக்காளர் தினம் – இதனை அனுசரிக்க  வலியுறுத்திய தமிழர் – யார்  தெரியுமா?

தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டின்  தேசிய வாக்காளர் தினக் கருப்பொருள் “ஒவ்வொரு வாக்கையும் கணக்கிடுதல்: எந்த வாக்காளரும் பின்வாங்கக்கூடாது” (Theme: “Making Every Vote Count: No Voter to be Left Behind,”) என்பதாகும்.  

இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையிலும் இளம் வாக்காளர்களை அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதியை “தேசிய வாக்காளர் தினமாக” அனுசரிக்க மத்திய அரசு   கடந்த 2011 ஆம் ஆண்டு முடிவு செய்தது. கடந்த ஜனவரி 1995 ஆம் ஆண்டு முதலே தேசிய வாக்காளர் தினம்   கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் யார் தெரியுமா?  1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு தமிழ் தினசரி பத்திரிகையில் வந்த கீழே உள்ள செய்தியை படியுங்கள்.

# Dr.V.Ramaraj,## Father of Voterolgy, Dinamalar,Madurai Edition,1995

தேர்தல் குறித்த வழக்குகள்  முடிய பல ஆண்டுகள் காலதாமதமானால்   தேர்தலில் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டவர் பதவிக்காலம் முடிந்த பின்பு தோல்வி அடைந்ததாக கூட தீர்ப்பு வரலாம்.  எனவே,  தேர்தல் குறித்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிக்க தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த  2005 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக  சீர்திருத்தத்த ஆணையம் கருத்து தெரிவித்தது பலருக்கு தெரிந்திருக்கலாம்.  தேசிய வாக்காளர் தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய டாக்டர் வீ. ராமராஜ் இரண்டாவது நிர்வாக  சீர்திருத்தத்த ஆணையம் தெரிவித்த கருத்தை கடந்த  மார்ச் 2000-ல் பிரபலமான பத்திரிகையை ஒன்றில் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்டுரையின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Dr.V.Ramaraj,March 1,2000 India Today

வாக்காளரியல் (voterology) என்ற வார்த்தையை வடிவமைத்த ராமராஜ் கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளதைப் போல வாக்காளர்களுக்காக வாக்காளரியல் என்ற கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய பின்னர் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து தற்போது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.  அவரது கூற்றுப்படி விரைவில் வாக்காளரியல் கல்வி நாடு முழுவதும் பரவும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

# Dr.V.Ramaraj, ## Father of Voterology
சி ஈஸ்வரன்
சி ஈஸ்வரன்
சி. ஈஸ்வரன், வணிக ஆலோசகர்/குழந்தைகள் நல ஆர்வலர்

தொடர்புடைய கட்டுரைகள்

1 COMMENT

  1. அரசு, நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் இம்மூன்றும் ஒரு நாட்டின் முக்கிய அங்கமாக உள்ளது. ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று கோணமும் சமம். அதுபோல அரசு நிறுவனங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு இருக்கும்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தக்க சீர்திருத்தம் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும்.
    நன்றி
    பேராசிரியர். V. இராமலிங்கம் (ஓய்வு), பழனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்