spot_img
July 27, 2024, 1:27 pm
spot_img

கடன் வழங்க மறுத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டன்பட்டி அருகே உள்ள கொத்தூரில் வசிப்பவர் ராமசாமி மகன் முருகேசன் (46).  இவர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து கடந்த 2019 ஜனவரி மாதத்தில் மைசூரில் உள்ள பிரபலமான தனியார் வங்கி ஹோம் பைனான்சை அணுகி வீடு கட்ட இடம் வாங்குவதற்கு கடன் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார்.  கடன் வழங்குவதாக கூறி கையாள்வதற்கான கட்டணம் ரூ 3,540/- செலுத்துமாறு நிறுவன மேலாளர் முருகேசனிடம் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை செலுத்தி வைத்ததோடு மேலாளர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் முருகேசன் அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதன் பின்னர் பலமுறை கடன் வழங்குமாறு மேலாளரை கேட்டபோது தாமதம் செய்து வந்த ஹோம் பைனான்ஸ் நிர்வாகம் 2019 ஏப்ரல் மாதத்தில் முருகேசன் மேலாளரை சந்தித்து கடன் வழங்குமாறு கேட்டபோது புதிய விதிமுறைகளின் படி கடன் வழங்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாக கேட்டபோது  ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துவிட்டது.  இதன் பிறகு கடன் கேட்டு செய்த விண்ணப்பத்தின் நிலையை தெரிவிக்குமாறு கடிதம் எழுதியும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் எவ்வித பதிலையும் தரவில்லை. பதில் வராததால் தமக்கு கடன் தரவில்லை என்றால்   செலுத்திய கட்டணத்தையும்   சமர்ப்பித்த ஆவணங்களையும் கேட்டு முருகேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 2022 ஜூலை மாதத்தில் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து புதிய விதிமுறைகளின்படி கடன் தர முடியாது என்றும் செலுத்தப்பட்ட கையாள்வதற்கான கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என்றும் தெரிவித்து கடன் கேட்டவருக்கு கடிதம் வந்துள்ளது.

கையாள்வதற்கான   கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து கடன் கேட்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக    ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்தது சேவை குறைபாடு என்று கடன் கேட்டவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

 ஒருவருக்கு கடன் வழங்குவதும் வழங்காததும் நிறுவனத்தின் விருப்பம் என்பதால் கடன் வழங்காததை சேவை குறைபாடு என கூற முடியாது. ஆனால், கடன் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகள் கழித்து கடன் வழங்க இயலாது என்று நிறுவனம் கூறுவது   சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் முருகேசன் செலுத்திய சேவை கட்டணத்தில் ரூ  2000/-த்தையும் சேவை குறைபாட்டிற்கான இழப்பீடாக ரூ  25000/- தையும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(https://cms.nic.in/ncdrcusersWeb/search.do?method=loadSearchPub) என்ற இணையதளத்தில் இருந்து வழக்கு எண்: CC/24/2023 என்பதை பயன்படுத்தி முழுமையான தீர்ப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சம குளம், பவர் ஹவுஸ் சாலையில் வணிகம் செய்து வரும் திருமுருகன் ஸ்பின்னர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் கடந்த 2016 நவம்பர் மாதத்தில் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றை அணுகி தொழிலுக்காக ரூபாய் 2 கோடி கடன் கேட்டுள்ளார். வங்கியின் அறிவுறுத்தலின்படி ரூ 1,15,000/- ஐ   கையாளுவதற்கான கட்டணமாக செலுத்தியுள்ளார். வங்கி கடன் அனுமதி வழங்கிய பின்னர் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு முன்னதாக கடன் அனுமதியை ரத்து செய்து விட்டது.

பாதிப்படைந்த சதீஷ்குமார் வங்கியின் மீது கோயம்புத்தூர்   நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு      விசாரணைக்காக நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.  இந்த வழக்கிலும் வங்கி கையாளுவதற்காக பெற்ற கட்டணம் ரூ 1,15,000/-  மற்றும் இழப்பீடாக ரூ 1,00,000/- மொத்தம் ரூ 2,15,000/-   ஐ  வாடிக்கையாளருக்கு  வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

(https://cms.nic.in/ncdrcusersWeb/search.do?method=loadSearchPub) என்ற இணையதளத்தில் இருந்து வழக்கு எண்: CC/29/2022 என்பதை பயன்படுத்தி முழுமையான தீர்ப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்