ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் மொபைல் போன் வாங்க பணம் செலுத்தியவருக்கு தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை அனுப்பி வைத்த நிறுவனமும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 டிசம்பர் முதல் நாளில் நாமக்கல், ஆர்பி புதூரில் வசித்து வரும் கே. சரவணகுமார் (36) மொபைல் போன் ஒன்றை வாங்குவதற்காக பிரபலமான ஆன்லைன் விற்பனை இணையதளத்தை (Amazon seller Service Private Limited) பார்வையிட்டுள்ளார். இணையதளத்தில் சரவணகுமார் தேர்வு செய்த மொபைல் போன் விற்பனையாளராக கோயம்புத்தூரில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் (Sarshita Aashiyana(p) Ltd.,) காட்டப்பட்டிருந்தது. தேர்வு செய்த மொபைல் போனை வாங்க ஆன்லைன் விற்பனை இணையதளத்தின் மூலமாக கிரெடிட் கார்டில் அவர் ரூ.24,519/-ஐ செலுத்தியுள்ளார்.
செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
பணம் செலுத்தப்பட்ட மறுநாளே கூரியர் மூலம் சரவணகுமாரின் முகவரிக்கு பார்சல் வந்துள்ளது. அதனை அவர் பிரித்துப் பார்த்தபோது பார்சலுக்குள் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவிய சிறிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இது குறித்து ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனத்தில் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்திற்கான மொபைல் போன் வழங்கப்படவில்லை. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக புகார் தெரிவித்த வாடிக்கையாளரின் கணக்கை ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனம் ரத்து செய்வது விட்டது.
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா ? “ஆன்லைன் உணவு உபயோகத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம். |
இதனால் வேறு வழியின்றி ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனத்தின் மீதும் இணையதளத்தில் விற்பனையாளராக காட்டப்பட்ட நிறுவனத்தின் மீதும் சரவணகுமார் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில் (17-12-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனமும் அதன் விற்பனையாளரும் சேவை குறைபாடு புரிந்துள்ளதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் செலுத்திய ரூ.24,519/- மற்றும் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 20,000/- ஆகியவற்றை நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க ஆன்லைன் இணையதள விற்பனை நிறுவனத்திற்கும் அதன் விற்பனையாளருக்கும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:
ஓரிரு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் பார்சலை பிரித்து காண்பித்து வாடிக்கையாளருக்கு திருப்தி ஏற்படாவிட்டால் திருப்பி அனுப்பும் வகையில் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இத்தகைய வசதிகளை அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் அறிமுகப்படுத்த வேண்டும்.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை தாங்களும் “நுகர்வோர் பூங்கா இணைய இதழுக்கு” [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்