“நுகர்வோர் பூங்கா” என்ற இணைய இதழ் (visit: theconsumerpark.com) அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. நுகர்வோர் பூங்காவில் மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டம் குறித்த செய்தி கட்டுரைகளும் மூன்றில் ஒரு பங்கு பொதுவான செய்தி கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன. அரசியல், நிர்வாகம், தொழில், விவசாயம், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல தலைப்புகளில் முழுமையான பொது கட்டுரைகளுடன் “பூங்கா இணைய இதழ்” வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வெளியாக உள்ளது. நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆங்கில பதிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் (Tranquility Strategies Pvt Ltd) சார்பில் கீழ்கண்ட மூன்று பிரிவினருக்கான இதழியலாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
01. சட்ட மாணவ இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம் (Law Student Online Journalist Professional Trainee Scheme)
02. முதுநிலை பட்ட மாணவர் இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம் (Post Graduate Students Online Journalist Professional Trainee Scheme)
03. இளம் இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம் (Young Online Journalist Professional Trainee Scheme)
இந்த பயிற்சி திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து செய்தியாளர் (Reporter), கட்டுரையாளர் (Columnist), பட வடிவமைப்பாளர் (Image Designer) என்ற பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சி திட்டம் குறித்த விவரங்களும் விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் பின்வருமாறு:
திட்ட அம்சங்கள்
01. இந்த பயிற்சி திட்டத்தின் கால அளவு: 2024 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2025 மார்ச் இறுதி தேதி வரையாகும். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எவ்வித பயிற்சி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதை போலவே பயிற்சியின் போது எவ்வித ஊக்க தொகையும் வழங்கப்படமாட்டாது. பயிற்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி காலத்தில் ஓரிரு மட்டும் முறை மட்டும் நேரில் அழைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
02. இந்த பயிற்சியின் போது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் வெளியாகும் இணைய இதழ்களுக்கு செய்தியாளர் பயிற்சி பெறுபவர்கள் செய்தியை சேகரித்து சமர்ப்பிக்கவும் கட்டுரையாளர் பயிற்சி பெறுபவர்கள் செய்தி கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் பட வடிவமைப்பாளர் பயிற்சி பெறுபவர்கள் பட வடிவமைப்புகளை சமர்ப்பிக்கவும் தகுந்த பயிற்சியும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.
03. பயிற்சி செய்தியாளர்கள்/கட்டுரையாளர்கள் சமர்ப்பிக்கும் படைப்புகள் தகுதி வாய்ந்தவையாக இருப்பின் இணைய இதழ்களில் படைப்பாளரின் புகைப்படத்துடன் வெளியிடப்படும். பயிற்சி பட வடிவமைப்பாளரின் படைப்பு தகுதி வாய்ந்ததாக இருந்தால் வெளியீட்டுக்கு தேர்வு செய்யப்படும்.
தகுதிகள்
04. பொது தகுதி: தமிழ் மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். மின்னஞ்சல் தகவல் தொடர்பு, இணையதள பயன்பாடு போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகும்.
05. சட்ட மாணவ/முதுநிலை பட்ட மாணவ இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும் அல்லது மூன்றாண்டு சட்ட படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம். ஏ., எம். காம்., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும்.
06. இளம் இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டத்தில் இணைய இதழில் ஆர்வம் உள்ள 25 வயதுக்கு மிகாத சுய தொழில் புரியும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பிரிவுகள்
07. ஒவ்வொரு விண்ணப்பதாரரும் செய்தியாளர், கட்டுரையாளர், பட வடிவமைப்பாளர் என்ற பிரிவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். செய்தியாளர் + பட வடிவமைப்பாளர், கட்டுரையாளர் + பட வடிவமைப்பாளர் என்றும் பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
தேர்வு முறை
08. கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்துடன் செய்தியாளர் பயிற்சி பிரிவை தேர்வு செய்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினை அது அல்லது ஏதேனும் ஒரு வகையில் வினோத தன்மை படைத்த கிராமம் குறித்த செய்தி தொகுப்பையும் கட்டுரையாளர் பயிற்சி பிரிவை தேர்வு செய்பவர்கள் இந்திய அரசியலமைப்பை எழுதியவர்கள் அல்லது தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமம் குறித்த கட்டுரையையும் (500 முதல் 1000 வார்த்தைகளுக்குள்) பட வடிவமைப்பு பிரிவை தனியாகவோ அல்லது கூடுதலாகவோ தேர்வு செய்பவர்கள் width 1720 x height 720 pixels (png type) என்ற அளவில் விவசாயி அல்லது கனவு குறித்த ஒரு படத்தை உருவாக்கியும் அதனையும் சமர்ப்பிக்க வேண்டும். இதிலிருந்து தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இணையதள வழியில் அல்லது நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் வல்லுநர் பயிற்சிக்கான கடிதமும் இணைய இதழின் பெயருடன்அடையாள அட்டையும் வழங்கப்படும்.
இறுதி நாள்
09. கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியில் விண்ணப்பத்தையும் கட்டுரையையும் தயாரிக்கப்பட்ட படத்தையும் 20-03-2024 ஆம் தேதிக்குள் [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது. தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.
10. தங்கள் மின்னஞ்சலில் பெறுநர்: கே. கதிர்வேல், ஆசிரியர், நுகர்வோர் பூங்கா என்றும் மின்னஞ்சல் தலைப்பில் பயிற்சி திட்ட விண்ணப்பம் என்றும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.
சட்ட மாணவர்/ முதுநிலை பட்ட மாணவர்/ இளம்
இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம்
01. பெயர்,
02. பிறந்த தேதி :
(பத்தாம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி) :
03. பாலினம் :
04. தந்தை/காப்பாளர் பெயர், தொழில் :
05. படிக்கும்/படித்த பட்டம் மற்றும் ஆண்டு :
06. படிக்கும்/படித்த கல்லூரியின் பெயர், முகவரி :
07. நிரந்தர முகவரி :
08. வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்பவரா?
இல்லையெனில் எவ்வாறு? :
09. தொலைபேசி எண் :
மின்னஞ்சல் முகவரி :
10. எந்தத் திட்டத்தில் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள்? கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை டிக் (tick) செய்யவும்.
01. சட்ட மாணவர் இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம்
02. முதுநிலை பட்ட மாணவர் இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம்
03. இளம் இணைய இதழியலாளர் தொழில் வல்லுநர் பயிற்சி திட்டம்
11. எந்தத் பிரிவில் விண்ணப்பம் செய்கிறீர்கள்? கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை டிக் (tick) செய்யவும்.
01. செய்தியாளர்
02. கட்டுரையாளர்
03. பட வடிவமைப்பாளர்
04. செய்தியாளர் + பட வடிவமைப்பாளர்
05. கட்டுரையாளர் + பட வடிவமைப்பாளர்
தேதி விண்ணப்பதாரர் கையொப்பம்
பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டால் விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு பெறாதவர் எனில் பெற்றோர் அல்லது காப்பாளரின் சம்மத கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வேண்டுகோள்: இத்திட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் இதனை படிப்பவர்கள் பலருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.