இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். “டைரக்ட் செல்லிங் (direct selling) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் 17 நேரடி விற்பனை நிறுவனங்கள் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உயர் அமைப்பு (சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்ஷன் அத்தாரிட்டி) நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
“நேரடி விற்பனை என்றால் என்ன? சாமி!” என்றேன் நான். “ஒரு நிறுவனமானது பொருட்கள் அல்லது சேவைகளை கடைகள் வைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக ஆன்லைன் இணையதளங்கள் (online platforms) மூலம் விற்பனை செய்தல் மற்றும் விற்பனை பிரதிநிதிகளை (sales representatives) நியமனம் செய்து, நேரடியாக வாங்க கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியிடங்களில் அல்லது அவர்களது வீடுகளில் சந்தித்து பொருள் அல்லது சேவையை பற்றி விளக்கி விற்பனை செய்வது போன்றவற்றையே நேரடி விற்பனை என்று நுகர்வோர் சட்டம் தெரிவிக்கிறது. ஏமாற்றும் நடைமுறைகள் (deceptive practice) மூலம் நேரடி விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடி விற்பனைக்கான விதிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மத்திய நுகர்வோர் புகார் உயர் அமைப்பு (Central Consumer Protection Authority) நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றார்.
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா ? “ஆன்லைன் உணவு உபயோகத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம். |
“சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்ஷன் அத்தாரிட்டி என்ற அமைப்பைப் பற்றி தாங்கள் கூறுகிறீர்கள் சாமி. இந்த அமைப்புக்கு தவறு செய்யும் நிறுவனங்கள் மீது லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் நுகர்வோரை ஏமாற்றும் நபர்களுக்கு தண்டனை விதிக்கவும் அதிகாரம் உள்ளது என்று கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால், இந்த அமைப்பைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இல்லை. இந்த அமைப்பையும் இந்த அமைப்பின் பணிகளையும் பொதுமக்களுக்கு இடையே தெரியப்படுத்தும் விழிப்புணர்வை மேற்கொள்வது அவசியமானது. இந்த அமைப்பின் இணையதளம் செயல்படுகிறதா? என்று தெரியவில்லை. இணையதளம் மூலமாக இந்த அமைப்பில் புகார் கொடுக்கவும் வழி செய்யப்பட வேண்டும் என்றேன் நான்.”
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை தாங்களும் “நுகர்வோர் பூங்கா இணைய இதழுக்கு” [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
“இந்தியாவில் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தவும் அவற்றின் தரத்தை நிர்ணயம் செய்யவும் உருவாக்கப்பட்ட உயர் அமைப்புதான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI – Food Safety and Standards Authority) ஆகும். பாட்டிலில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டர் (mineral water bottle) விற்பனை என்பது நாடு முழுவதும் பெருமளவில் நடைபெறுகிறது. இதே போலவே 5 லிட்டர், 20 லிட்டர் கேன்களிலும் இந்த விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இத்தகைய குடிநீர் அதிக ஆபத்தை விளைவிக்க கூடிய உணவு வகை (High Risk Food Category) என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது. இந்திய தர நிர்ணய ஆணையம் (The Bureau of Indian Standards – BIS) மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆகிய இரண்டு அமைப்புகளிலுமே பாட்டில் நீர் உற்பத்தி மற்றும் விற்பனையை செய்ய உரிமம் (license) பெற வேண்டும் என்ற விதியை மாற்றி ஏதாவது ஒரு அமைப்பில் அனுமதி வாங்கினால் போதுமானது என்று விதியை உருவாக்குமாறு பாட்டில் நீர் உற்பத்தி துறையினர் வேண்டுகோள் சமீபத்தில் வேண்டுகோள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: குடிநீர் பாதுகாப்பு என்பது மக்களின் உடல்நலத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று நாடு முழுவதும் குடிநீர் விற்பனை என்பது தவிர்க்க இயலாது சூழ்நிலையாக மாறிவிட்ட நிலையில் அதனை நெறிப்படுத்துவது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முக்கிய பணியாகும். அனைவருக்கும் தூய குடிநீர் கிடைக்கச் செய்வது அரசின் பணி என்பதோடு தூய குடிநீர் என்பது மக்களின் உரிமையும் ஆகும்.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |