செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
அனுப்புநர் பெயர்ல… என் எதிரியோட பெயரை போட்டு வச்சேன் + மீள் பதிவு: விண்ணைத் தொடும் காலி மனை...
என்னோட கேஸ்ல தீர்ப்பு கொடுக்க போற ஜட்ஜோட பெயர் என்ன சார்?' கேள்வி கேட்ட ஆனந்தனை வியப்பாய் பார்த்தார் வக்கீல் ராமமூர்த்தி. 'ஜட்ஜோட பெயர் உனக்கு எதுக்கு?' எதிர் கேள்வி கேட்ட வக்கீலிடம் நிதானமாக பதில் சொன்னான் ஆனந்தன், 'என்கிட்ட ரொம்ப பழமையான 20 பாட்டில் ஒயின் இருக்கு. ரேர் பீஸ். யாருக்கும் அவ்வளவு ஈஸியா கிடைச்சுராது. அதை அவருக்கு பரிசா அனுப்பி வைக்கணும்'
பூட்டை உடைத்து கழிப்பறையை உபயோகிக்க வழி செய்த போலீசார். அனுமதி மறுத்த பெட்ரோல் பங்கை அலறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்....
வேறு வழியின்றி காவல்துறைக்கு மொபைல் மூலம் ஜெயக்குமாரி உடனடியாக புகார் செய்துள்ளார், உடனே அங்கு வந்த காவல் துறையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கழிப்பறையின் சாவியை கேட்டபோது தங்களிடம் இல்லை என்றும் பங்க் உரிமையாளரிடம் சாவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இதனால் காவல்துறையினர் கழிப்பறையின் பூட்டை உடைத்து அதனை பயன்படுத்த ஜெயக்குமாரிக்கு உதவி செய்துள்ளனர்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை லோக்...
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன்படி தண்டனைக்குரிய குற்றம் என்று வரையறை செய்யப்பட்டுள்ள குற்றம் ஒன்றை புரிந்த பொது ஊழியருக்கு எதிரான புகார்களை தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்யலாம். இந்த வரையறைக்குள் அடங்காத புகார்களை தமிழ்நாடு லோக் ஆயுக்தா விசாரிப்பதில்லை. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 – ல் தண்டனைக்குரிய குற்றம் என்று வரையறை எவை என்று இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் கவனக்குறைவான சிகிச்சைக்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 10லட்சம் மருத்துவமனை நிர்வாகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
காமினேனி மருத்துவமனையில் சிவ பிரசாத்தை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெபிஎஸ் வித்தியாசாகர் என்பவர் பரிசோதனை செய்து 2006 டிசம்பர் 7ஆம் தேதி அன்று அவருக்கு எலும்பு முறிவை சரி செய்ய அறுவை சிகிச்சை (surgery) செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் மருத்துவ சிகிச்சையில் சிவப்பிரசாத் இருந்த நிலையில் கடந்த 2006 டிசம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு இறந்து விட்டதாக அன்று மாலை 5 மணிக்கு சிவபிரசாத்தின் தந்தையிடம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களை சமாளிக்க நேர்மையாளர்கள் ஒருங்கிணைய வேண்டும் – லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்
இத்தகைய தன்னார்வ சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் சாதி, மதம் போன்ற வட்டங்களுக்கு அப்பாற்பட்டும் இயங்குவதாக இருக்க வேண்டும். இவற்றை வழிநடத்த நேர்மையான இளைஞர்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க இயலும்.