மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னர் கடந்த 17 ஏப்ரல் 1997 அன்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக அல்லது நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் தலைமையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகிறது. இதில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு உறுப்பினராகவும் மனித உரிமைகளில் அனுபவம் மற்றும் அறிவு திறன் படைத்த ஒருவர் மற்றொரு உறுப்பினராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழக அரசின் செயலாளர் பதவிக்கு இணையான ஒருவர் பதிவாளராக பணியாற்றுகிறார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவல்துறை தலைவர் (ஐ.ஜி: Inspector General of Police) தலைமையிலான புலனாய்வு குழுவும் உள்ளது. அரசு ஊழியர்கள் அல்லது அரசின் உதவி பெறும் அமைப்பின் ஊழியர்கள் மனித உரிமை மீறல்களை புரியும்போது பொதுமக்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யலாம். வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனிமனித கௌரவம் தொடர்பான உரிமைகள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யலாம்.
புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், 143, திருவரங்கம், குமாரசாமி ராஜா சாலை, சென்னை 600 028. மின்னஞ்சல் முகவரி: [email protected]
மனித உரிமைகள் என்றால் என்ன? எத்தகைய பிரச்சினைகளுக்கு புகார் செய்யலாம்? எத்தகைய பிரச்சினைகளுக்கு புகார் செய்யக்கூடாது? தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புகார் செய்வது எப்படி? போன்ற விவரங்களை அறிந்து கொள்ள “பூங்கா இதழில்” வெளியாகி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசிக்கவும். இதன் இணையதள முகவரி: https://thenewspark.in/national-human-rights-commission/