spot_img
December 4, 2024, 8:43 pm
spot_img

நுகர்வோர் பாதுகாப்பு: பொருள் அல்லது சேவையின் தயாரிப்பு பொறுப்பு (product liability) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்!

கடந்த 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் பொருள் அல்லது சேவையின் தயாரிப்பு பொறுப்பு (product liability) குறித்து எதுவும் கூறப்படவில்லை.   இந்த குறையை போக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு  சட்டத்தில் தயாரிப்பு பொறுப்பு குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுகர்வோரும் தயாரிப்பு பொறுப்பு குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாகும்.  இந்த கட்டுரையில் உள்ள அம்சங்கள் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருப்பின்   ஓரிரு முறை படித்து புரிந்து கொண்டால் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

தயாரிப்புகள் (products)

எந்த ஒரு பொருளையும் அல்லது பொருட்களையும் அல்லது மூலப் பொருளையும் அல்லது இத்தகைய பொருட்களை அடிப்படையாக கொண்டவற்றையும் “தயாரிப்பு” (products) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தயாரிப்பு என்பது வாயு (gas) அல்லது திரவ (liquid) அல்லது திடமான (solid) நிலையில் உள்ளதாக இருக்கலாம்.  

இத்தகைய தயாரிப்பு என்பது பல பொருட்களின் மூலம் உருவாக்கப்பட்டதாக (assembled) அல்லது ஒரு பொருளின் அங்கமாக (component) வர்த்தகத்துக்காக விநியோகிக்க தக்க (to be delivered) பொருளாக உள்ளதாகும். மனித திசுக்கள், இரத்தம், இரத்த பொருட்கள் மற்றும் மனித உறுப்புகள்  ஆகியன தயாரிப்பு என்ற பட்டியலில் சேராது.

தயாரிப்பு பொறுப்பு (product liability)

பொருளின் உற்பத்தி குறைபாடு அல்லது வழங்கப்பட்ட சேவையின் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் தீங்கிற்கு  ஈடு செய்ய வேண்டிய கடமை பொருளின் அல்லது வழங்கப்படும் சேவையின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் பொறுப்பாவார் என்பதே தயாரிப்பு பொறுப்பு  என்று அழைக்கப்படுகிறது.

மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது மாநில நுகர்வோர் ஆணையம் அல்லது தேசிய நுகர்வோர் ஆணையத்தில் ஒரு நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட தீங்கிற்காக இழப்பீடு கோருவதற்காக தாக்கல் செய்யும் புகார் என்பது தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கையாகும் (product liability action).

தயாரிப்பு உற்பத்தியாளர் (product manufacturer)

கீழ்க்கண்ட வகையைச் சார்ந்த அனைவரும் “தயாரிப்பு உற்பத்தியாளர்” ஆவார்கள். 

  • ஏதேனும் ஒரு தயாரிப்பை அல்லது அதன் பாகங்களை உருவாக்குபவர். 
  • மற்றவர்களால்  தயாரிக்கப்பட்ட பாகங்களை ஒருங்கிணைத்து (assembling others parts) ஒரு பொருளை உருவாக்குபவர். 
  • வேறு எந்த நபரால் தயாரிக்கப்பட்ட எந்தவொரு தயாரிப்புகளிலும் தனது சொந்த அடையாளத்தை குறியீட்டு விற்பனை செய்பவர்.
  • ஒரு பொருளை உருவாக்கி விற்பனை செய்தல், விநியோகித்தல், குத்தகைக்கு விடுதல், நிறுவுதல் (installs), தயாரித்தல், பேக்கேஜ்கள், லேபிள்கள், சந்தைகள், பழுது பார்த்தல், அத்தகைய தயாரிப்பைப் பராமரித்தல் அல்லது வணிக நோக்கத்திற்காக அத்தகைய தயாரிப்பை பயன்படுத்துதல் முதலான பணிகளை செய்பவர்கள். 
  • எந்தவொரு பொருளையும் அதன் விற்பனைக்கு முன் வடிவமைத்தல் (designs), உற்பத்தி செய்தல் (produces) , புனையுதல் (fabricates), கட்டமைத்தல் (constructs) அல்லது மறு உற்பத்தி செய்தல் (remanufactures) முதலான பணிகளை செய்பவர்கள்.

தயாரிப்பு விற்பனையாளர் (product seller)

ஒரு தயாரிப்பு தொடர்பான சேவையை வழங்குபவர்   (product service provider) என்று அழைக்கப்படுகிறார்.  இறக்குமதி, விற்பனை, விநியோகம், குத்தகை, நிறுவுதல், தயார் செய்தல், பேக்கேஜ்கள், லேபிள்கள், சந்தைகள், பழுது பார்த்தல், பராமரித்தல் அல்லது வேறு விதமாக  வணிக நோக்கத்திற்காக அத்தகைய தயாரிப்பை பயன்படுத்துதல், ஒரு தயாரிப்பு விற்பனையாளராக இருக்கும் ஒரு உற்பத்தியாளர் முதலான பணிகளை வணிகத்தின் போது செய்பவர்கள் “தயாரிப்பு விற்பனையாளர்” ஆவார்கள்.  

வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்பவரை தவிர அசையா சொத்துக்களை விற்பவர்கள் (seller of immoveable property),   எந்தவொரு பரிவர்த்தனையிலும் கருத்து (opinion), திறன் (skill)   சேவைகளை வழங்குவது சாராம்சமாக உள்ள தொழில்முறை சேவைகளை (professional service) வழங்குபவர், பொருளின் விற்பனையைப் பொறுத்த வரையில் நிதியை மட்டும் முதலீடு செய்துள்ளவர் (just investor) ஆகியோர் தயாரிப்பு விற்பனையாளர் என்ற பட்டியலில் இல்லை. 

தயாரிப்பின் உற்பத்தியாளர் மொத்த விற்பனையாளர், விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர், நேரடி விற்பனையாளர் மற்றும் மின்னணு சேவை வழங்குபவர் ஆகியவர்களை தவிர மற்றவர்கள் தயாரிப்பு விற்பனையாளர் என்ற பட்டியலில் இல்லை. 

உற்பத்தியின் தேர்வு, உடைமை, பராமரிப்பு மற்றும் செயல்பாடு (selection, possession, maintenance and operation) ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு வேறு நபர்கள் வசம் உள்ள நிலையில் பொருளை குத்தகைக்கு விடுபவர்   தயாரிப்பு விற்பனையாளர்  என்ற பட்டியலில் இல்லை..

தயாரிப்புகளின் உற்பத்தியாளர், விற்பனையாளர், சேவை வழங்குபவர் ஆகியோரின் கடமைகள் (liabilities) என்ன? அதில் உள்ள விதிவிலக்கு (exceptions) என்ன? என்பது குறித்து விரைவில்   அடுத்த பகுதியாக பார்க்கலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்