spot_img
January 14, 2025, 6:35 pm
spot_img

மற்றவர் வாகனத்தை ஓட்டுகிறீர்களா? வாகனத்தை மற்றவர்களுக்கு வழங்குகிறீர்களா? விபத்து இழப்பீடு கிடையாதா? பதில் கூறும் உயர்நீதிமன்ற – நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள்.

பொதுவாக, வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்யப்படுவதை இரண்டு வகையாக பார்க்கிறோம். முதலாவதாக, விபத்து ஏற்பட்டால் விபத்தால் பாதிக்கும் மூன்றாம் நபர்களுக்கும் விபத்தால் வாகனத்துக்கு ஏற்படும் சேதத்துக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீடு பெறுகின்ற வகைகளான முழு இன்சூரன்ஸ் பாலிசி (full insurance). இரண்டாவதாக, தேர்டு பார்ட்டி (third party) என ஆங்கிலத்தில் கூறப்படும் மூன்றாம் நபர் விபத்து காப்பீடு. இந்த வகையான விபத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகும் போது பாதிக்கப்படும் மூன்றாம் நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கும். இந்த பாலிசியில் வாகனத்தில் ஏற்படும் சேதங்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது. 

இன்சூரன்ஸ் பாலிசி

முழு இன்சூரன்ஸ் பாலிசி, மூன்றாம் நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி இரண்டு பாலிசிகளிலும் விபத்து நடக்கும்போது வாகனத்தை ஓட்டுபவருக்கு இறப்பு ஏற்பட்டாலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற நேரிட்டாலும் அதற்கான இழப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவதில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது   தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் (personal accident policy).

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

தனிநபர் பாலிசி

முழு இன்சூரன்ஸ் பாலிசி அல்லது மூன்றாம் நபர் விபத்து இன்சூரன்ஸ் வாகனத்துக்கு பெறுகின்ற போது தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக குறிப்பிட்ட பிரிமிய தொகையை செலுத்தினால் நாம் பெறுகின்ற பாலிசியிலேயே தனிநபர் காப்பீட்டு திட்ட வசதியும் வழங்கப்படுகிறது. வாகனம் விபத்துக்குள்ளானால் வாகனத்தை ஓட்டும்   வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுனருக்கு இறப்பு ஏற்பட்டால் இழப்பீடும் மருத்துவ சிகிச்சை பெற நேரிட்டால் அதற்கான இழப்பீடும் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும்.

இழப்பீடு மறுப்பு

இந்த வகையான தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து இருந்தால், வாகன உரிமையாளர் வாகனத்தில் பயணிக்காத போது மூன்றாம் நபர்கள் வாகனத்தை ஓட்டி  விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாகனத்தை ஒட்டிய மூன்றாம் நபர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன. இந்நிலையில் வாகன உரிமையாளர் வாகனத்தில் இல்லாத போதும் மூன்றாம் நபர்கள் வாகனத்தை ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்ப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)

2024, பிப்ரவரியில் 

நாமக்கல்  அருகே உள்ள சின்னன்னம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அவரது   தந்தைக்கு சொந்தமான காரை ஆந்திர பிரதேசத்தில் ஓட்டி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார்.  இறந்தவரின் தந்தை பழனிச்சாமி தனிநபர்   விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதன்படி ரூபாய் 15 லட்சத்தை வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டதில் உரிமையாளரே வாகனத்தை ஓட்டிச் சென்று இறந்தால்தான் காப்பீட்டுத் தொகை கொடுக்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம்   பணத்தை தர மறுத்து விட்டது.

இதனால் இறந்து போன சதீஷ்குமாரின் மனைவி சந்தியா, மைனர் குழந்தைகள் சௌமித், செல்வி   ஆகியோர் நாமக்கல் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கில் 2024 பிப்ரவரி முதல் வாரத்தில் நுகர்வோர் மாவட்ட நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், தலைமையிலான அமர்வு தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இறந்து போன சதீஷ்குமார் மனைவிக்கும் இரண்டு மைனர் குழந்தைகளுக்கும் நான்கு வார காலத்துக்குள் தனி நபர் விபத்து காப்பீட்டு விபத்து காப்பீட்டு தொகை ரூபாய் 15 லட்சமும் இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சமும் இந்த தொகைக்கு விபத்து நடந்த நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9% வட்டியும் இன்சூரன்ஸ் நிறுவனம்   என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

2024 டிசம்பரில் 

புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளி பட்டியில் வசித்து வருபவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பிரிமியம் செலுத்தி இன்சூரன்ஸ் செய்துள்ளார். அப்போது தனிநபர் விபத்து காப்பீட்டுக்காக கூடுதலாக ரூபாய் 275 செலுத்தி உள்ளார். கடந்த 2021- ல் ஆண்டு அண்ணாமலையின் வாகனத்தை அவரது மகன் ஓட்டுச் சென்ற போது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார். தனிநபர் காப்பீட்டு திட்டப்படி பிரிமியம் செலுத்தியுள்ளதால் மகனின் இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், உரிமையாளரே வாகனத்தை ஓட்டி சென்றால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று கூறி அவரது கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது.

இதனால் அதிர்ச்சியுற்ற அண்ணாமலை இழப்பீடு கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  2024 டிசம்பர் மாதத்தில், இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தீர்ப்பளித்துள்ளார். 

“பூங்கா இதழ்” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

வழக்கு தாக்கல் செய்தவர் தனிநபர் விபத்து காப்பீட்டுக்காக கூடுதலாக ரூ 275/- பிரிமியம் செலுத்தியுள்ளார். இந்த பணமானது உரிமையாளர் மற்றும் ஓட்டுனருக்கு தனிப்பட்ட விபத்து காப்பீடு என்ற தலைப்பின் கீழ் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் வாகனத்தின் உரிமையாளரை தவிர மூன்றாவது நபர் வாகனத்தை ஓட்டும் போதும் பொருந்தும் என்பதால் வழக்கு தாக்கல் செய்தபவருக்கு தனிநபர் இன்சூரன்ஸ் தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசிபடி ரூபாய் 15 லட்சத்தை வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம்வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: இந்த இரண்டு தீர்ப்புகளும் தனிநபர் விபத்து காப்பீட்டுக்கு பிரீமியம் செலுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்!  பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!  
 
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?
 
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு  

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புபிரச்சனை
தமிழகம்சேவை குறைபாடு
தேசம்நியாயமற்ற வர்த்தகம்
சர்வதேசம்குறைபாடான பொருட்கள்
சிறப்பு படைப்புகள்கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம்
கருத்துரைநியாயமற்ற ஒப்பந்தம்
நேர்காணல்அதிக விலை
அறிவு பூங்காஇருண்ட மாதிரி
 தவறான விளம்பரம்
பொது
சட்டம்தீர்ப்புகள்
நுகர்வோர் பாதுகாப்புவீட்டு உபயோகம்
உணவு பாதுகாப்புஉணவு
அத்தியாவசிய பொருட்கள்வீட்டு வசதி
தரநிலைகள்மருத்துவம்- மருந்துகள்
மருத்துவ-மருந்து கட்டுப்பாடுவங்கி/நிதி
வங்கி-நிதிகாப்பீடு
காப்பீடுபோக்குவரத்து
சட்ட அளவியல்அரசு
பொதுபொது
ஆய்வுகள்நாங்கள்
சந்தை ஆய்வுஎங்களைப் பற்றி
புலனாய்வுபுரவலர்கள்
திறனாய்வுஆதரிங்கள்
சவால்கள்பங்களியுங்கள்
ஒப்பீடு“பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆராய்ச்சி பூங்கா
கதம்பம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்