அம்மாவுக்கு இணை யாரும் இல்லை
ஊரையே குளிர் பதன பெட்டியில் வைத்தது போல இருந்தது. ஆபீஸில் எனக்கு வேலையே ஓடவில்லை. இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் டிகிரி காபியுடன்… நினைக்கும் போதே மனம் பரவச நிலையில்.
உடனடியாக அலுவலகத்தில் அனுமதி கேட்டுமழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன். மனமெங்கும் “பக்கோடா அதுவும் டிகிரி காபியுடன்… ” எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்… வந்ததே கோபம் அவளுக்கு…
செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! |
“என்ன நினைச்சுட்டுருக்கீங்க…கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் காஃபியாம்… அதெல்லாம் ஒரு மண்ணும் முடியாது… சொல்லிட்டேன்…”
எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன். சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது. ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது… அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் “தனிக்குடித்தனம்” வசிக்கின்றனர். அவர்களால் எங்களுடனும், எங்களால் அவர்களுடனும் அட்ஜஸ்ட் செய்து இருக்க முடியாமல் போனதால் அம்மாவும் அப்பாவும் சுயமரியாதையுடன் தனியே வசிக்கின்றனர்.
கருத்துக்களை வரவேற்கிறோம்! “ஆன்லைன் உணவு உபயோகத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். |
அம்மாவைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அப்பாவின் கெஞ்சல் குரல் கேட்டது. அப்பாவுக்கு “ரவா உப்புமா ” ரொம்ப பிடிக்கும். அதைத்தான் அம்மாவிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார். நச்சரிப்பு என்பது அம்மாவின் பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ அதேபோல அம்மா அப்பாவை திட்டிக் கொண்டிருந்தார். கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி செம டோஸ்…
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை தாங்களும் “நுகர்வோர் பூங்கா இணைய இதழுக்கு” [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்….” என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே… பேரனை பார்த்து நாளாச்சுடா… ஏன் கூட்டிண்டுவரல்ல ?”. ” அம்மா, அவனுக்கு இந்த மழைலயும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா ” என்று சமாளித்தேன். அது பொய்யென்று அம்மாக்குத் தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டு கொள்ளவில்லை ” சரி, சரி உட்காரு. அப்பாட்ட பேசிட்டுரு.. இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்…”
அப்பா முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார். பாவமாயிருந்தது.. ” அம்மா, எனக்கு பக்கோடா வேண்டாம், உன் கைப்பக்குவத்தில் இன்னிக்கு ‘ரவா உப்புமா’ சாப்பிடணும் போல இருக்கு…” ” அவ்ளோதானே.., இதோ பத்தே நிமிஷம்”. அப்பாவின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென்பட்டது.
என்னுடன் சேர்ந்து ரவா உப்புமாவை ஆசையாக சாப்பிட்ட அப்பா, நான் அடைந்த பக்கோடா பரவசத்தை உப்புமா பரவசமாக அனுபவித்தார்… சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.. மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பஜ்ஜியை ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்.. எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு பஜ்ஜியாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நீதி: நம் நாட்டுப் பெண்கள் மிகச் சிறந்த தாய்மார்கள் (வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது)
சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் – அம்மா பாடம்
திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தாயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள். இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார். அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.
சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள். முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார். கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார். காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.
அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது. இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது. மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது என்று கூறினார் தாய். உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது. எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் (வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது).
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: “அம்மா அம்மாதான்” இதைவிட அம்மாவை பெருமையாக பேச வார்த்தைகள் கிடையாது.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்