spot_img
August 30, 2025, 4:50 am
spot_img

கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டதற்கு கோடிக்கணக்கிலும் தரமற்ற தீவனத்தை விற்றதற்கு லட்சக் கணக்கிலும் இழப்பீடு வழங்கவும் உற்பத்தி குறைபாட்டை நிரூபித்தவருக்கு இழப்பீடு வழங்கவும் தாமதம் செய்த நிறுவனத்துக்கு தண்டனை விதித்தும் நுகர்வோர் ஆணையங்கள் உத்தரவு.

தரமற்ற கோழி தீவனம் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாரமுல்லா (Baramulla) மாவட்டத்தில் லோன் கோழிப்பண்ணை மற்றும் கேஜிஎன் கோழிப்பண்ணை (Poultry) என்ற கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்தக் கோழிப்பண்ணை உரிமையாளர் மஹா ஃபீட்ஸ் அக்ரோடெக் என்ற தீவன உற்பத்தியாளரிடம் (feed manufactures) கோழிகளுக்கான தீவனத்தை வாங்கியுள்ளார். 

கோழி தீவனத்தை வாங்கும் போது, கோழிகளின் வளர்ச்சிக்கு அவசியமான 20% க்கும் அதிகமான புரத அளவு (Protein content) கோழி தீவனத்தில் இருப்பதாக தீவனத்தை விற்பனை செய்தவர்கள் (Sellers) உறுதியளித்தனர். ஆனால், அதற்கேற்ற வளர்ச்சி கோழிகளிடம் ஏற்படவில்லை. இதுகுறித்து தீவனத்தை விற்பனை செய்தவர்களிடம் கோழிப்பண்ணையாளர் கேட்டபோது தீவனத்தை ஆய்வுக்கு (lab test) உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.  ஸ்ரீநகரில் உள்ள பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்ததில் விற்பனை செய்யப்பட்ட தீவனத்தில் புரத அளவு 15.5% மட்டுமே இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னர் விற்பனையாளர்களை அணுகிய போது சரியான தீர்வை (Solution) விற்பனையாளர்கள் கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்கவில்லை. 

தீவன உற்பத்தியாளரால் தரமற்ற கோழி தீவனம் வழங்கப்பட்டதால் பல கோழிகள் இறந்ததாகவும் கோழிகளின் வளர்ச்சி குன்றியதாகவும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் தவறான தகவல் வழங்கப்பட்டு நியாயமற்ற வணிக நடைமுறை புரிந்துள்ளதாகவும் (Unfair trade practice) கூறி பாரமுல்லா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (Consumer Commission) தீவன உற்பத்தியாளர் மீது கோழிப்பண்ணையாளர் வழக்கு தாக்கல் செய்துள்ளார் (Consumer Complainant No: 12/2023).

விற்பனை செய்த கோழி தீவனங்கள் புரத அளவு குறித்து எவ்வித உத்திரவாதத்தையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் வேறு கோழி பண்ணைகளுக்கு வழங்கிய தீவனங்களில் எவ்வித புகாரும் வரவில்லை என்றும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட கோழி தீவன மாதிரிகள் தங்கள் முன்பு எடுக்கப்படவில்லை என்றும் கோழி தீவன உற்பத்தியாளர்கள் தரப்பில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS: Bureau Of Indian Standards) வழிகாட்டுதல்களின்படி, கோழித் தீவனப் பைகளில் ஊட்டச்சத்து விளக்கப்படத்தைக் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும், இது ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, நுகர்வோர் தயாரிப்பைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த உதவுகிறது. நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து கோழி தீவனத்தின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அந்த அறிக்கையிலும் விற்பனை செய்யப்பட்ட கோழி தீவனத்தில் 15.5 சதவீத அளவு இருந்ததாக கண்டறியப்பட்டது. 

இரு தரப்பிலும் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த 24 ஜூன் 2025 அன்று பாரமுல்லா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. விற்பனை செய்யப்பட்ட கோழி தீவன பைகளில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி காட்சிப்படுத்தப்பட (display) வேண்டிய ஊட்டச்சத்து (nutrition) குறித்த விவரம் இல்லை என்றும் உறுதியளிக்கப்பட்ட புரத அளவு விற்பனை செய்யப்பட்ட கோழி தீவனத்தில் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கோழி தீவன உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை புரிந்துள்ளார்கள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோழி பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட   கோழி தீவனங்களை விற்பனையாளர்கள் திரும்பவும் என்றும் பெற்றுக்கொண்டு பண்ணையாளர்கள் அதனை வாங்குவதற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ 4,11,473/- பண்ணையாளர்களுக்கு தீவன உற்பத்தியாளர் வழங்க வேண்டும் என்றும் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக ரூபாய் 5 லட்சமும் வழக்கின் செலவு தொகையாக ரூ  30,000/-மும் பண்ணையாளர்களுக்கு  தீவன உற்பத்தியாளர் வழங்க வேண்டும் என்றும் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை கட்டாயம் கோழி தீவன உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தீவன உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் விநியோகஸ்தரும் இழப்பீடு வழங்க உத்தரவு

கடந்த 25 ஜூன் 2025 அன்று தேசிய நுகர்வோர் ஆணையத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் ராயல் என்பீல்ட் உற்பத்தி நிறுவனமும் அதன் விநியோகஸ்தரும் உற்பத்தி குறைபாடான (manufacture defect) இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ததால் சேவை குறைபாடு புரிந்துள்ளனர் எனக் கூறி வாடிக்கையாளருக்கு இருசக்கர வாகனத்தின் என்ஜினை மாற்றி   தர வேண்டும் என்றும் அவ்வாறு மாற்றப்படும் என்ஜின் பொருத்தமானதாக இல்லாவிட்டால் வாடிக்கையாளருக்கு புதிய இருசக்கர வாகனம் தர வேண்டும் என்றும் சிரமங்களுக்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாகவும் ரூபாய் 75 ஆயிரம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் வழங்க வேண்டும் என்றும் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது (Revision Petition No. 1976 OF 2019)
வாகனத்தில் உற்பத்தி குறைபாடு உள்ளது என்பதை வாடிக்கையாளரை நிரூபிக்க வேண்டும் – டெல்லி நுகர்வோர் ஆணையம்

வால்வோ கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும் விநியோகஸ்தர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் உற்பத்தி குறைபாடு காரில் இருந்தது என்பதை நிபுணரின் அறிக்கை (Expert Report) மூலம் நிரூபிக்க வேண்டும். இதனை செய்ய தவறியதால் இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட புகாரை டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் கடந்த 2025 ஜூலை 7 அன்று தள்ளுபடி செய்துள்ளது (complaint case no. 50/2022).
வாடிக்கையாளருக்கு பிளாட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

வாடிக்கையாளருக்கு பிளாட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு சேவை குறைபாட்டிற்கு பர்ஸ்வநாத் டெவலப்பர்ஸ்தான் (House developer) பொறுப்பு என்று கடந்த 2025 ஜூலை 02  அன்று தில்லி மாநில நுகர்வோர் தீர்வு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. பில்டர்கள் ரூ.4,00,000 இழப்பீடு வழங்கவும், தாமதமான உடைமையை ஒப்படைக்கவும் ஒப்புக்கொண்டனர் (Complaint No. 782/2016).
புயலால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டதற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ஹுட்ஹுட் புயல் காரணமாக 14.10.2014 அன்று திட்டமிடப்பட்டிருந்த ‘ஒருநாள் சர்வதேச’ கிரிக்கெட் போட்டி (cricket match) ரத்து செய்யப்பட்டது தொடர்பான காப்பீட்டு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது தவறானது எனக் கூறி ஆந்திர கிரிக்கெட் அசோசியேஷன்க்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமானது ரூ 2,35,81,470/- வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2025 ஜூலை 7  அன்று வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது NC/CC/1676/2016.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் நுகர்வோர் தொடர்புடைய சட்டங்களை அறிந்து கொள்வதும் நுகர்வோர் நீதிமன்றம் மூலமாக தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும்.

விலைவாசி உயர்வுக்கும் வரி உயர்வுக்கும் ஊழல் முக்கியமான காரணம் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து – நுகர்வோர் பூங்கா

நல்லாட்சிக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் புத்தகங்கள் சிறந்த ஆயுதங்கள் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் கருத்து – நுகர்வோர் பூங்கா

மனித உரிமைகள் கமிஷனை பற்றி பெரும்பாலும் தெரியும். உங்கள் மாவட்டத்திலேயே உள்ள மனித உரிமை நீதிமன்றத்தை பற்றி தெரிந்துள்ளீர்களா? – பூங்கா இதழ்

பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கல்வி நிலையங்களில் ஊழல் ஒழிப்புக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல் – பூங்கா இதழ்

வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்