spot_img
March 13, 2025, 12:55 am
spot_img

இ பைக் வாங்கியவர் இழப்பீடாக 100 கோடி கேட்டு வழக்கு. அதிரடி உத்தரவை பிறப்பித்த நுகர்வோர் நீதிமன்றம்! ஆடிப்போன ஓலா நிறுவனம்! உத்தரவை நிறைவேற்ற 24 மணி நேரத்தில் செய்த காரியம் என்ன தெரியுமா?

நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் நாமக்கல் வழக்கறிஞர் குணசேகரனின் மகன் சுதேஸ்வரன் (27) ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளிப்கார்ட் இணையதளம் மூலமாக  கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மாத இறுதியில் ரூ 87,548/- ஐ   சுதேஸ்வரன்  செலுத்தியுள்ளார். இவருக்கான ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் இடத்தில இருந்து நாமக்கல்லில் உள்ள ஓலா ஷோரூமுக்கு 2024 அக்டோபர் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ள சுதேஸ்வரன் ஷோரூம் சென்றபோது அதனை வழங்க தாங்கள் சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என்றும் வாகனத்தை ஒப்படைக்க நிறைவேற்ற கட்டணமாக (fulfilment) ரூ 4,280/- வழங்க வேண்டும் என்றும் ஷோரூம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெலிவரி கட்டணம் உட்பட முழு பணத்தையும் செலுத்தி விட்டதாக சுதேஸ்வரன் தெரிவித்த போதும் வாகனத்தை வழங்க ஷோரூம் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். வாகனத்தை பெற காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், வேறு வழியின்றி 2024 நவம்பர் மாத இறுதியில் ரூ 4,280/- செலுத்தி அவர் வாகனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நாமக்கல் ஓலா ஷோரூமில் இருந்து தொலைபேசியில் சுதேஸ்வரனை அழைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கான மானிய தொகை பெறுவதற்கு நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிபந்தனை எதுவும் வாகனத்தை வாங்கும் போது தெரிவிக்கப்படவில்லை என சுதேஸ்வரன் கூறியதால் கோபமடைந்த ஓலா நிறுவனத்தினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஓலா நிறுவனத்திடம் உள்ள சென்சார் கட்டுப்பாடு மூலம் வண்டியை லாக் செய்து விட்டனர். ஸ்கூட்டரில் சுதேஸ்வரன் சென்று கொண்டிருந்தபோது வாகன இயக்கம் லாக் செய்யப்பட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் இன்றி சுதேஸ்வரன் தப்பியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பிளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (17 பிப்ரவரி 2025) வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

ஓலா நிறுவனத்தின் நேர்மையற்ற வணிக நடைமுறையால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ5,00,000/- இழப்பீட்டை சுதேஸ்வரனுக்கு ஓலா நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அவரைப் போல பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 100 கோடியை ஓலா நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரூபாய் 100 கோடி  இழப்பீட்டைப் பிரித்து வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கேட்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு பின்னர், 48 மணி நேரத்தில் சுதேஸ்வரனின் ஸ்கூட்டர் இயங்கும்படி சென்சார் லாக்கை நீக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.  இழப்பீடு வழங்குவது குறித்த புகாருக்கு பதில் வழங்க ஓலா, பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை பெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக ஓலா நிறுவனத்தின் சார்பில் சென்சார் மூலம் லாக் செய்யப்பட்டிருந்த சுதேஸ்வரனின் ஸ்கூட்டர் லாக் ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: துணிவாக சட்டப் போராட்டத்தை தொடங்கிய சுதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்!

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்