கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் வசித்து வசித்து வரும் வியாபாரி பங்கேஷ் ஜெயின். மைனர் குழந்தை ஒருவரின் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்த போது தந்தையின் பாஸ்போர்ட்டை சரி பார்ப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலர்கள் பெற்றுள்ளார்கள். பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் தவறுதலாக இவரது பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட் ரத்து செய்வதாக (cancellation stamp) முத்திரை பதித்து விட்டனர். பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும்போது தவறான முத்திரை பதிக்கப்பட்டதை பங்கேஷ் ஜெயின் கவனிக்கவில்லை.
அவரது மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகளோடு துபாய் சென்று வருவதற்காக பங்கேஷ் ஜெயின் நான்கு விமான பயண சீட்டுகளை வாங்கியுள்ளார். ஜெயின் குடும்பத்தினர் நால்வரும் மும்பை விமான நிலையத்துக்குச் சென்று துபாய்க்கு விமானம் ஏறுவதற்கு முன்பான சோதனைகளில் பாஸ்போர்ட் ரத்து செய்து இருப்பதை பார்த்த அதிகாரிகள் விமானத்தில் பங்கேஷ் ஜெயின் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக மும்பையில் இருந்து பயணம் செய்ய முடியாமல் மும்பையில் பங்கேஷ் ஜெயின் குடும்பத்தினர் தங்கி உள்ளார்கள். உறவினர் மூலமாக பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அவர்களால் புரியப்பட்ட தவறு சரி செய்து தரப்பட்டுள்ளது. இதன் பின்பு அவரது குடும்பம் துபாய் சென்று திரும்பி வந்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் தங்குவதற்கும் விமானத்தில் பயணம் செய்வதற்கும் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மேலும், துபாயில் இரண்டு நாட்கள் இருக்க வேண்டிய பயணத்திட்டமும் முன்னேற்பாடுகளும் வீணாகி உள்ளது.
பாஸ்போர்ட் அலுவலகம் புரிந்த சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் மீது பங்கேஷ் ஜெயின் தார்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். பாஸ்போர்ட் சட்டப்படி பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று பாஸ்போர்ட் அலுவலகம் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இன்று ஒரு பிரமுகரை அறிவோம்! |
Advt |
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
இருதரப்பு விசாரணை முடிவடைந்த பின்னர் ஓரிரு தினங்களுக்கு முன்பு தார்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாஸ்போர்ட் அலுவலர்கள் தவறு புரிந்துள்ளார்கள் என்பதும் இந்த தவறின் காரணமாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு சிரமமும் செலவுகளும் ஏற்பட்டுள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சேவை குறைபாடுக்காக ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடும் புதிய விமான பயண சீட்டுக்கான கட்டணம், தங்குமிடச் செலவுகள், பாஸ்போர்ட் அலுவலகத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏற்பட்ட செலவுகள் ஆகியவற்றிற்காக ரூ 62,876/- ஆகியவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் பங்கேஷ் ஜெயினுக்கு வழங்க வேண்டும் என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் வாடிக்கையாளரின் கேள்வி எப்படி இருக்கு பாருங்கள்!
வங்கி மேலாளரிம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?” அந்த பெண் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்”
அந்த பெண் சொன்னார்.“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?” அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”. “என்ன செய்யறது…பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மேலாளர் யோசித்தார். இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள் …’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றார்.
அந்த பெண் கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்….”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க”
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: சேவை குறைபாடுகள் குறித்த வடிவங்களை அறிந்து கொள்ளுங்கள் பிரச்சனைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.