டெல்லியில் ஜனக்புரி பகுதியில் வசித்து வந்த ஐஸ்வர்யா ருத்ரா என்பவர் கண்ணட் பிளேஸில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். புதுடில்லியில் பஞ்சாபிபாக் என்ற பகுதியில் எம்.பி.ஏ படிப்புக்கான கேட் எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை (coaching class) பிட்ஜேஇஇ (FIIT JEE) என்ற நிறுவனம் நடத்தி வந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு பயிற்சி தொடர்பான விவரங்களை அறிய தந்தையுடன் அந்த மாணவி பிட்ஜேஇஇ பயிற்சி மையத்தை அணுகியுள்ளார். தாங்கள் இரண்டு ஆண்டு கால பயிற்சியை வழங்குவதாகவும் இரண்டு ஆண்டுகளுக்குரிய முழு பயிற்சி தொகையும் செலுத்த வேண்டும் என்று பயிற்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சி தொகை ரூ 1,34,015/- ஐ அந்த மாணவியின் தந்தை பயிற்சி மையத்தில் செலுத்தியுள்ளார்.
தினமும் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் இரண்டு முப்பது மணிக்கு வீட்டிற்கு வந்து அதன் பின்னர் பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சியை முடித்து ஐஸ்வர்யா தினமும் வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேல் ஆகி உள்ளது. இதனால் கல்லூரி பாடங்களை படிப்பது மற்றும் கல்லூரிக்கான அசைன்மெண்டுகளை எழுதுவது போன்ற வேலைகளை செய்வது ஐஸ்வர்யாவுக்கு சிரமமாக இருந்துள்ளது. பயிற்சி மையத்துக்கு இரண்டு மாதங்கள் சென்ற நிலையில் பயிற்சியை விட்டு விலகுவதாக ஐஸ்வர்யா பயிற்சி மையத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பயிற்சி மையத்தை அணுகி இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதால் படித்த காலத்துக்கு மட்டும் கட்டணத்தை எடுத்துக்கொண்டு மீதத்தொகையை தருமாறு கடிதம் வழங்கியுள்ளார். இதன் பின்னர் பலமுறை பயிற்சி மையத்துக்கு நேரில் சென்றுள்ளார். ஆனால், பயிற்சி மையத்தின் சார்பில் செலுத்திய பணத்தை திரும்ப வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
மன உளைச்சலுக்கான ஐஸ்வர்யாவின் தந்தை பயிற்சி மையத்தின் மீது டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மாணவி சமர்ப்பித்த சேர்க்கை விண்ணப்பத்தில் ஒரு முறை பணம் செலுத்தப்பட்டு விட்டால் திரும்ப வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனை உள்ளது என்றும் பயிற்சி மையத்திற்கும் மாணவ மாணவியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் மத்தியஸ்தர் (arbitrator) மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விண்ணப்பத்தில் நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பயிற்சியின் இடைப்பட்ட காலத்தில் மாணவி பயிற்சியை தொடராமல் விடும்போது தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் பயிற்சி கட்டணத்தை திரும்ப வழங்க இயலாது என்றும் பயிற்சி மையம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதித்துள்ளது வாதம் செய்தது.
பயிற்சி மையத்தின் வாதத்தை நிராகரித்து கடந்த 2014 பிப்ரவரி மாதத்தில் டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் மாணவி செலுத்திய பணத்தில் ஓராண்டுக்கான பயிற்சி தொகை ரூபாய் 60,750/- ஐ ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டியுடன் மாணவிக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் பயிற்சி மையம் புரிந்த சேவை குறைபாடுக்காக மாணவிக்கு ரூ 20,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பயிற்சி மையத்துக்கு டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2014 மார்ச் மாதத்தில் பயிற்சி மையம் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு (FA-249/2014) செய்தது இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு (19-12-2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் படிப்பு காலம் முழுமைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டால் முதலாம் ஆண்டு (year) அல்லது முதலாம் பருவ (semester) கட்டணத்தை மட்டும் கல்வி நிலைய நிர்வாகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீத தொகையை வங்கியில் செலுத்தி வைக்க வேண்டும் என்றும் அடுத்த கல்வியாண்டு அல்லது அடுத்த பருவம் எப்போது தொடங்குகிறதோ அந்த சமயத்தில் அந்த ஆண்டுக்கான அல்லது பருவத்துக்கான கட்டணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் படிப்பு அல்லது பயிற்சி முடிந்த பின்பு வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கு வங்கி வழங்கும் வட்டியை மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு ஐஸ்வர்யா பயிற்சி மையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்தி வைத்த கட்டணத்தை வங்கியில் நிரந்தர வைப்பீடாக பயிற்சி மையம் செலுத்தி வைக்கவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பயிற்சி மையம் பின்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிக்கு ஓராண்டு கல்வி கட்டணத்தை வட்டியுடனும் இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என பயிற்சி மையத்துக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியான தீர்ப்பு என்று டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: மாணவிக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்க பத்தாண்டுகள் காலம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதே போலவே, மேல்முறையீடும் மூன்று மாதத்தில் விசாரித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆசையாக உள்ளது.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |