spot_img
November 21, 2024, 7:10 pm
spot_img

இளம் பட்டதாரிகள்  மற்றும் மாணவர்களுக்கான பத்திரிக்கையாளர்   மற்றும் வணிக நிர்வாக பயிற்சிக்கு மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம்

“நுகர்வோர் பூங்கா” (Consumer Park) என்ற இணைய இதழ் (visit: theconsumerpark.com) அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.  நுகர்வோர் பூங்காவில்  மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டம் குறித்த   செய்தி கட்டுரைகளும் மூன்றில் ஒரு பங்கு பொதுவான செய்தி கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன.  

அரசியல், நிர்வாகம், தொழில், விவசாயம், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம்    உள்ளிட்ட 36 தலைப்புகளில் முழுமையான பொது கட்டுரைகளுடன் “பூங்கா இணைய இதழ்” (News Park) வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வெளியாக உள்ளது.  நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆங்கில பதிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.  

அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தில் பதிப்பக பிரிவு (Publication Division), மேம்பாட்டு பிரிவு (Development Division), சமூக பொறியியல் பிரிவு (Social Engineering Division) ஆகியன  உள்ளன. அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் (Tranquility Strategies Pvt Ltd) சார்பில் கீழ்கண்ட பயிற்சி திட்டங்களுக்கு மாணவர்கள் மற்றும் இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

01.   இளம் பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு மற்றும் சட்ட மாணவர்களுக்கான செய்தியாளர்/ கட்டுரையாளர், பட வடிவமைப்பாளர்   பயிற்சி    (Online Reporter/Columnist, Image Designer  Professional Internship Scheme for  Graduates, PG Students, Law Students)

02. வணிக நிர்வாக முதுநிலை/பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான சந்தைப்படுத்துதல் பயிற்சி (Professional Marketing Internship Scheme for M.B.A.,/PG Students) 

திட்ட அம்சங்கள்

01.   பயிற்சி காலம்: பயிற்சியில் இணையும் நாளிலிருந்து ஓராண்டு காலமாகும்.  பயிற்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ்   வழங்கப்படும்.  பயிற்சியின் போது   இணையதளம், அலைபேசி வாயிலாக தகுந்த  பயிற்சிக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் (work from home). ஓராண்டு பயிற்சி காலத்தில் ஓரிரு   முறை மட்டும் நேரில் அழைப்பதற்கான வாய்ப்பு உண்டு.  

02.  மதிப்புமிகு ஊக்கத்தொகை: செய்தியாளர்/ கட்டுரையாளர், பட வடிவமைப்பாளர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எவ்வித பயிற்சி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதை போலவே பயிற்சியின் போது எவ்வித ஊக்க தொகையும் வழங்கப்படமாட்டாது. சந்தைப்படுத்துதல்  பயிற்சியின் போது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்கான உத்திகள் (Marketing Strategies) குறித்த பயிற்சி வழங்கப்படும்.   சந்தைப்படுத்துதலில்  அடையும் இலக்குகளுக்கு தகுந்தவாறு மதிப்புமிகு ஊக்கத்தொகை வழங்கப்படும். செய்தியாளர்/ கட்டுரையாளர், பட வடிவமைப்பாளர்   பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் விரும்பினால் சந்தைப்படுத்துதல் பயிற்சியையும் கூட்டாக தேர்வு செய்யலாம்.

03. பயிற்சி செய்தியாளர்கள்/கட்டுரையாளர்கள் சமர்ப்பிக்கும்   படைப்புகள் தகுதி வாய்ந்தவையாக இருப்பின் இணைய இதழ்களில் படைப்பாளரின் புகைப்படத்துடன் வெளியிடப்படும். பயிற்சி   பட வடிவமைப்பாளரின் படைப்பு தகுதி வாய்ந்ததாக இருந்தால் வெளியீட்டுக்கு தேர்வு செய்யப்படும்.

தகுதிகள்

04. பொது தகுதி:  தமிழ் மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.  மின்னஞ்சல் தகவல் தொடர்பு, இணையதள பயன்பாடு   போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.  ஆங்கில மொழியை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்திருப்பது   கூடுதல் தகுதியாகும்.

05. செய்தியாளர்/ கட்டுரையாளர், பட வடிவமைப்பாளர்   பயிற்சிக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில்   ஐந்தாண்டு சட்டப்   படிப்பில் மூன்றாம்   ஆண்டு (Third year LL.B.,)   மாணவராக இருக்க வேண்டும் அல்லது மூன்றாண்டு சட்ட படிப்பில் முதலாம் ஆண்டு  மாணவராக (First year LL.B.,) இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., (M.A., M.Sc., M.Com., M.B.A.,) படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும். இருபத்தைந்து வயதுக்கு   மிகாத    பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.  

06. வணிக நிர்வாக   சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள  கல்லூரிகளில் எம்.பி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு பட்ட மேற்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும். மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் இருபத்தைந்து வயதுக்கு மிகாத      பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் பிற மாவட்டங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

07. செய்தியாளர்/ கட்டுரையாளர் பயிற்சி பிரிவை தேர்வு செய்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினை  அல்லது ஏதேனும் ஒரு வகையில் வினோத தன்மை படைத்த கிராமம் குறித்த செய்தி தொகுப்பை  அல்லது இந்திய அரசியலமைப்பை எழுதியவர்கள்   அல்லது தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமம் குறித்த கட்டுரையை  (500 முதல் 1000 வார்த்தைகளுக்குள்) விண்ணப்பத்துடன்  சமர்ப்பிக்க வேண்டும்.  

08. பட வடிவமைப்பு பிரிவை தனியாகவோ அல்லது கூடுதலாகவோ தேர்வு செய்பவர்கள் width 1280 x height 720 pixels (png type) என்ற அளவில் விவசாயி அல்லது கனவு குறித்த ஒரு படத்தை உருவாக்கி    விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.  

09. வணிக நிர்வாக   சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது வணிக கனவு என்ன என்பது குறித்த கட்டுரையை  (500 முதல் 1000 வார்த்தைகளுக்குள்) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். 

10. இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி கட்டுரைகளை அல்லது படத்தை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை

11. விண்ணப்பம் மற்றும் அத்துடன் சமர்ப்பிக்கப்படும் கட்டுரை அல்லது படம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து  தேர்வு செய்யப்படும்  தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (short listed candidates) இணையதள வழியில் அல்லது நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  பயிற்சிக்கான கடிதமும் இணைய இதழின்  பெயருடன் அடையாள அட்டையும் வழங்கப்படும்.

இறுதி நாள்

12. 30-03-2024 ஆம் தேதிக்குள் [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  மாதிரியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.    எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும்  படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது.  இந்த  திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது. தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.  

விண்ணப்பம்

01.   பெயர்:

02.  பிறந்த தேதி :

03.  பாலினம் :

04.  தந்தை/காப்பாளர் பெயர், தொழில் :

05.  படிக்கும்/படித்த பட்டம் மற்றும் ஆண்டு :

06.  படிக்கும்/படித்த  கல்லூரியின் பெயர், முகவரி :

07.  நிரந்தர முகவரி :

08.  வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்பவரா? 

09.  தொலைபேசி எண் :

       மின்னஞ்சல் முகவரி :

10.  எந்தத் திட்டத்தில் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள்? கீழே உள்ளவற்றில்   ஏதேனும் ஒன்றை   கல்வி  தகுதிக்கு ஏற்ற வகையில் டிக் (tick) செய்யவும்.

01.  மாணவ செய்தியாளர்/ கட்டுரையாளர்   பயிற்சி

02.  பட வடிவமைப்பாளர் பயிற்சி

03.    வணிக நிர்வாக   சந்தைப்படுத்துதல் பயிற்சி 

04 .  மாணவ செய்தியாளர்/ கட்டுரையாளர் +    பட வடிவமைப்பாளர்    பயிற்சி

05. மாணவ செய்தியாளர்/ கட்டுரையாளர்   +    வணிக நிர்வாக   சந்தைப்படுத்துதல் பயிற்சி

06. பட வடிவமைப்பாளர்    +    வணிக நிர்வாக   சந்தைப்படுத்துதல் பயிற்சி

தேதி                                                                விண்ணப்பதாரர் கையொப்பம்

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டால் விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு பெறாதவர் எனில் பெற்றோர் அல்லது காப்பாளரின் சம்மத கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

வேண்டுகோள்: இத்திட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் இதனை படிப்பவர்கள் பலருக்கும்   அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்