spot_img
November 23, 2024, 1:29 pm
spot_img

ரோஸ் ஒயின், ரெட் ஒயின்,  ஒயிட் ஒயின், ஆல்கஹால் இல்லாத ஒயின்

ஒயின் என்பது புளித்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானம் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக ஒயினில் ஒயிட் ஒயின், ரெட் ஒயின், ரோஸ் ஒயின் என்ற வகைகள் உள்ளன. இதில் ரெட் ஒயின் உடலுக்கு நல்லது  என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது.  இது உண்மையா? என்பதை   அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

கிமு 7000 -ல்   சீனாவில்   காட்டு திராட்சை, அரிசி, தேன் மற்றும் ஹாவ்தோர்ன் பழங்களிலிருந்து ஒயினை தயாரித்து புளிக்க வைத்து மண்  ஜாடிகளில் சேமித்து வைத்துள்ளனர். அந்த காலகட்டத்தில் ஆர்மீனியா, ஈரான், எகிப்து, இஸ்ரேல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் சிசிலி ஆகிய நாடுகளில் ஒயின் தயாரிக்கப்பட்டதற்கான   சான்றுகள் உள்ளன.  கிரேக்க நாட்டில் முதன் முதலாக ரெட் ஒயின் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

பிளம், செர்ரி, மாதுளை, புளூபெர்ரி, திராட்சை வத்தல் மற்றும் எல்டர்பெர்ரி போன்ற பல்வேறு பழப் பயிர்களிலிருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது  சில ஒயின் தயாரிப்பாளர்கள் திராட்சையைத் தவிர வேறு பழங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் அந்த ஒயின்களில்  சுவைக்கக்கூடிய  சுவையானது பீனால்களிலிருந்து வந்தவை. ரசாயன கலவையான பீனால்கள்  ஒயினை சுவைக்கும் விதத்தை பாதிக்கின்றன.  நொதித்தல் முறையில் ஈஸ்ட் பழங்களில் உள்ள சர்க்கரையை உட்கொண்டு அதை எத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றி செயல்பாட்டில் வெப்பத்தை வெளியிட்ட பின்னர் குறைந்தது பத்து நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் ஒயின் தயாராகிறது. சர்க்கரையின் அளவைப் பொறுத்து ஆல்கஹாலின் அளவு ஒயினுக்கு ஒயின் மாறுபடும்.  

வெள்ளை திராட்சையை கொண்டு நொதித்தல் செயல்முறைக்கு முன்   திராட்சையின் தோல்களை சாற்றில் இருந்து பிரித்து வெள்ளை ஒயின்   தயாரிக்கப்படுகிறது,   அடர் சிவப்பு அல்லது கருப்பு திராட்சை மூலம்   நொதித்தல் செயல்பாட்டின் போது திராட்சையின் தோல்களை நீக்காமல் சிவப்பு ஒயின் தயாரிக்கப்படுகிறது.  சிகப்பு ஒயினை   உருவாக்க பயன்படுத்தப்படும் அதே செயல்முறையைப் பயன்படுத்தி ரோஸ் ஒயின்   தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், தோலில் இருந்து நிறம் வருவதால், தோலை ஊற வைக்கும் மெசரேட்டிங் செயல்முறை சுருக்கப்படுகிறது, இதனால் ரோஸ் ஒயின்    இளஞ்சிவப்பு நிறமாக உருவாகிறது. 

சிவப்பு ஒயின், ஒயிட் ஒயின் மற்றும் ரோஸ் ஒயின் ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வுக்கு வரும்போது, ரோஸ் ஒயின் ஆரோக்கியமான தேர்வாகும். ஆல்கஹால் இல்லாத ஒயின்     என்பது ஆல்கஹாலை வடிகட்டிய பின்னர் உருவாக்கப்படும் ஒயின் ஆகும்.  இதிலும் சிறிதளவு ஆல்கஹால் இருக்கக்கூடும்.

பொதுவாக 100 மில்லி அளவு சிகப்பு ஒயினில் தண்ணீர் 86.5 கிராம், ஆல்கஹால் 10-14  கிராம், கார்போஹைட்ரேட் 2.61 கிராம், சர்க்கரை 0.62 கிராம், சர்க்கரை 0.62 கிராம், பொட்டாசியம் 127 மில்லி கிராம், 4 சோடியம் மில்லி கிராம் உள்ளிட்டவை உள்ளன. 100 மில்லி அளவு சிகப்பு ஒயின் உட்கொள்ளும் போது 85 கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது.

திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், கேடசின், எபிகாடெசின் மற்றும் புரோந்தோசயனிடின்கள் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில்  ரெஸ்வெராட்ரோல் மற்றும் ப்ரோந்தோசயனிடின்கள்  சிவப்பு ஒயினின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிக அளவில் உள்ளது.

புரோந்தோசயனிடின்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவக்கூடும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு, வீக்கம் மற்றும் இரத்த உறைதலை எதிர்த்துப் போராடுவது, அத்துடன் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் தினமும் ஒருவருக்கு தேவைப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்  எந்த வகை   ஒயினிலும் இல்லை. மேலும் சிவப்பு ஒயின் எந்த நோய்க்கும் மருந்தல்ல. ரெட் ஒயினை குறைந்த அளவில் (120 மில்லி) அருந்துவது  சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கலாம். அதே வேளையில், ஒயினை அதிகமாக குடிப்பதும்  தினமும் குடிப்பதும் கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறைந்த அளவில் ரெட் ஒயினை அருந்துவது மற்ற மதுபானங்களை அருந்துவதை காட்டிலும் உடல் நலத்திற்கு பாதுகாப்பானதாக இருந்தாலும் ஒயின் உட்பட எந்த மதுபானங்களையும் அருந்துவது உடலுக்கு நல்லதல்ல.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்