ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார மையமாக விளங்குவது அதன் பாதுகாப்பு குழுவாகும். இந்தக் குழுவில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் ஏதேனும் ஒன்று இந்த குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த தீர்மானத்தை பாதுகாப்பு சபையால் நிறைவேற்ற இயலாது (வீட்டோ பவர்). இத்தகைய நடைமுறைகளைக் கொண்ட பாதுகாப்புக் குழு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.
உலக நாடுகளின் முதலாவது சங்கமாக கடந்த 10 ஜனவரி 2021 அன்று சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தில் அமெரிக்கா இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சங்க பாதுகாப்பு குழுவில் தொடக்கத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாகவும் இருந்தன. 1926 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் ஜெர்மனியும் ஜப்பானும் இந்த குழுவில் இருந்து வெளியேறினர். 1934 ஆம் ஆண்டில் சர்வதே சங்கத்தில் இணைந்த ரஷ்யாவுக்கு பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட்ட போதும் பின்னர் ரஷ்யா சர்வதே சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. தொடக்கத்தில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக இருந்த நிலையில் 1922 ஆம் ஆண்டில் ஆறாகவும் 1926 ஆம் ஆண்டில் ஒன்பதாகவும் 1933 ஆம் ஆண்டில் பத்தாகவும் 1936 ஆம் ஆண்டில் பதினொன்றாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்வாறு சர்வதேச சங்கத்தின் பாதுகாப்பு குழுவில் நிரந்தரமற்ற தன்மை நீடித்தது இந்த சங்கம் வீழ்ச்சி அடைய ஒரு காரணமாக அமைந்தது.
தற்போது பாதுகாப்பு குழுவில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா உட்பட ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பூகோள அடிப்படையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பத்து நாடுகள் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களாகவும் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட 1945 ஆம் ஆண்டில் இக்குழுவில் நான்கு நிரந்தர உறுப்பினர்களும் ஐந்து உறுப்பினர்களும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களும் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு சீனாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டதோடு நிரந்தரமில்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் ஏற்பட்டு 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் சர்வதேச அரங்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு குழுவை மாற்றி அமைக்காவிட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களை வெற்றிகரமாக இயலாது.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மகத்தான பங்கை கடந்த 75 ஆண்டுகளாக ஆற்றியுள்ளது. உலகில் மிகுந்த ராணுவ வலிமையும் அறிவியல் திறனும் பெற்ற நாடுகளில் ஒன்றாகவும் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகவும் இந்தியா திகழ்கிறது. சுமார் 800 கோடி மக்கள் வசிக்கும் இந்த உலகில் 142 கோடி மக்களை கொண்ட இந்தியாவிற்கு பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவது அவசியமானதாகும். முப்பது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையை சீரமைத்து தங்களுக்கு பாதுகாப்பு குழுவின் நிரந்தர இடம் வேண்டும் என்று இந்தியா கேட்டு வருகிறது. இதே போலவே ஜெர்மனி பிரேசில் ஜப்பான் போன்ற நாடுகளும் நிரந்தர உறுப்பினர் தகுதியை பாதுகாப்பு குழுவில் கேட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியலமைப்பின் திருத்தத்தை கொண்டு வருவதன் மூலமே பாதுகாப்பு குழுவின் அமைப்பை மாற்ற இயலும். இதற்கான திருத்தத்தை கொண்டு வர பொதுச் சபையில் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஐந்து நாடுகளின் ஆதரவும் தேவை. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்க ஆதரவளித்த முதல் நாடு ரஷ்யா. இங்கிலாந்தும் பிரான்சும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னும் உறுதியானதாக இந்தியாவிற்கு ஆதரவாக தெரிவிக்கப்படவில்லை சீனா இதுகுறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு குழுவில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் வழங்க பூடான், வியட்நாம், லாவோஸ், சைப்ரஸ், சிலி, மொரிசியஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர் இருப்பினும் பொது சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற பாகிஸ்தான் இந்தியாவிற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் தகுதியை பெறுவதற்கு முழு தகுதி இந்தியாவிற்கு உள்ள நிலையில் அதனை பெற இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிகான வேண்டிய தருணம் இதுவாகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகுந்த அங்கீகாரம் கிடைத்ததாக இந்திய அரசு கூறிவரும் நிலையில் இந்தியாவை பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் ஆக்குவதில் இந்திய அரசு சாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்