spot_img
November 23, 2025, 10:57 am
spot_img

“எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” என்பது வாக்காளரிலிசம் (Voterologism).  தேர்தல் ஆணையர்கள் நியமன முறையில் மாற்றங்கள் தேவை – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

கோவை சட்டக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமையில் “இந்திய குடியரசு @75 – மைல்கற்கள் மற்றும் முன்னால் உள்ள சவால்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.

ஒரு நாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய உள்ளடக்கங்கள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தின் சூழல் மற்றும் உருவாக்கியவர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன.  அரசியலமைப்புச் சட்டமானது எல்லா காலத்திலும் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஒத்ததாக அல்லது உருவாகும் புதிய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. இதன் காரணமாகவே, மக்களின் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பில் 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராமராஜ் தெரிவித்தார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பில் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அமெரிக்க அரசியலமைப்பை திருத்துவதில் உள்ள கடினத் தன்மை காரணமாக அவசியமான அரசியலமைப்பு திருத்தங்களை கூட அமெரிக்க அரசியலமைப்பில் மேற்கொள்ள இயலவில்லை. தேவைக்கு ஏற்ற திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் நெகிழும் தன்மையில் உள்ளதால்தான் இந்திய அரசியலமைப்பு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என ராமராஜ் தெரிவித்தார்.

வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். மக்களுக்கு நலன் வழங்கும் மக்களாட்சி உருவாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.

ஜனநாயகத்தில் உச்ச அதிகாரமான வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலக அரசியல் போக்குகளையும் வாக்கு மட்டுமே தீர்மானிக்கிறது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது, ஜனநாயகம் தொடங்குகிறது. ஜனநாயகத்தின் மூன்று அம்சங்களான வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழல் தொடங்கினால், ஊழல் இல்லாத ஜனநாயக ஆட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்பு (shared responsibility) குடிமக்களுக்கு உள்ளது என்றார் ராமராஜ்.

ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் நடத்த தனி அமைப்பு இருப்பதைப் போல வாக்காளரியல் கல்வியை வழங்கவும் வாக்காளர்களது உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர் ஆணையம் தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Election Authorities) என வகைப்படுத்தி அவற்றிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. ஜனநாயகத்தின் தூண்களான சட்டம் இயற்றும் அமைப்புகளும் அரசும் நீதித்துறையும் உள்ளதை போல தேர்தல் நிறுவனங்களும் ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகும் என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.

பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது. இந்தக் தேர்வு குழு மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நியாயமான திறமையான நபர்களை தேர்தல் ஆணையராக நியமிக்குமாறு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம். இரு தரப்பு வாதங்களைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தேர்தல் ஆணையர்களை இறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தற்போதைய அரசியலுக்கு உகந்ததாகும் என ராமராஜ் கருத்து தெரிவித்தார்.

கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக துணை பேராசிரியர் எஸ். துர்கா வரவேற்புரையும் இறுதியாக துணை பேராசிரியர் முகமது அலி நன்றிஉரையும் ஆற்றினார்கள்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்”  கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

“Voters above all else” is the central idea of ​​voterologism. Changes are needed in the appointment system of Election Commissioners – Tamil Nadu Lokayukta Member Dr. V. Ramaraj

A seminar on the topic “Republic of India @75 – Milestones and Challenges Ahead” was held at Coimbatore Law College, presided over by the College Principal K. S. Gopalakrishnan, in which Tamil Nadu Lokayukta Member Dr. V. Ramaraj participated and spoke.

The main contents of the Constitution adopted by a country reflect the context of the time when the Constitution was made and the wishes of the framers. It cannot be said that the Constitution will always be in line with the wishes of the majority of the people or will be suitable for the new environment that emerges. Due to this, 106 amendments have been made to the Indian Constitution in the last 75 years in accordance with the wishes and needs of the people, said Ramaraj.

More than a hundred attempts have been made in the past to amend the American Constitution, which was made two hundred years ago, according to the needs of the time. However, due to the rigidness in amending the US Constitution, even the necessary constitutional amendments could not be made in the US Constitution. The Indian Constitution continues to grow because of its flexibility to make necessary amendments, Ramaraj said.

Voterology is the study and analysis of votes, voters, and elections. Voterology should be taught to all voters to create a democracy that benefits the people. The central idea of ​​Voterologism is “Voters above all else.” and the work of Voterologism is to spread the doctrines of Voterology, Ramaraj said.

The right to vote, which is the supreme power in a democracy, lies with the voters. Only the vote determines the nature of a democratic government and the political trends of the world. Democracy begins when voters vote in elections. If corruption starts from the three aspects of democracy – votes, voters, and elections, we cannot expect a democratic government free of corruption. Ramaraj said that citizens have a shared responsibility to eradicate corruption from the vote, voters and elections, which are the foundation of democracy.

Just as every country has a separate organization to conduct elections, a National Commission for Protection of Voters’ Rights and Education should be set up to provide voter education and protect the rights of voters, and special election tribunals should be set up to hear and dispose election cases within six months. The Election Commission, the Voters’ Commission and the Election Tribunal should be classified as election authorities and given constitutional status. It is the need of the hour to make the necessary constitutional amendments for this. Ramaraj opined that election institutions are important pillars of democracy, just as the legislative bodies, the government and the judiciary are pillars of democracy.

In most countries, it is normal for the selection committee to appoint Election Commissioners to have more representatives from the ruling party and fewer representatives from the opposition parties. Instead of appointing Election Commissioners through this selection committee, the ruling party and the opposition party can recommend to the Apex Court of the country to appoint reasonably competent persons as Election Commissioners. Ramaraj opined that constitutional amendments are suitable for the current politics so that the Constitution Bench of the Supreme Court finalizes the Election Commissioners after hearing the arguments of both sides.

Hundreds of law students and professors attended the seminar. Earlier, Assistant Professor S. Durga delivered the welcome address and finally, Assistant Professor Mohammed Ali delivered the vote of thanks.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்