spot_img
December 17, 2025, 11:08 pm
spot_img

வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகிய அம்சங்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் –  தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

உடுமலைப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு சி. முருகானந்தம் தலைமையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.

Courtesy: Hindu Tamil

வாக்கு, வாக்காளர், மற்றும் தேர்தல்கள் (vote, voter and elections) ஜனநாயகத்தின் அடித்தளங்கள் ஆகும்.  வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றை குறித்த கல்வியே வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகிய அம்சங்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வாக்காளரியல் (Voterology) கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வது அவசியமானதாகும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும்.  வாக்காளர் விழிப்புணர்வு ஊழலை ஒழிக்க அவசியமான ஒன்றாகும் என்று ராமராஜ் தெரிவித்தார். 

பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் வாக்காளர் பட்டியல் பணிகளையும் தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடுதல் ஆகிய பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்கிறது. வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதைப் பெற்றுத் தரவும் வாக்காளரியல் (Voterology) கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் தேசிய அளவில் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Commission for Protection of Voters Rights) அமைக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் (Election Tribunals) அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Election Authorities) என அரசியலமைப்பில் வகைப்படுத்த வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

Courtesy: Dinamani

சட்டங்களை இயற்ற பாராளுமன்றமும் சட்டப்படி ஆட்சியை நடத்த அரசாங்கமும் சட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கும் ஆட்சி நடத்தும் அரசாங்கத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையே அதிகாரப் பிரிவினை (separation of power)) செய்யப்பட்டு ஒவ்வொரு அமைப்பும் சுதந்திரமாக செயல்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கும் ஆட்சி நடத்தும் அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது போன்ற இணையான அந்தஸ்தை தேர்தல் நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல்களை அகற்றவும் மக்களாட்சியை பாதுகாக்கவும் இயலும் என ராமராஜ் தெரிவித்தார்.

Courtesy Dinamalar

லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. லோக் ஆயுக்தா என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். இந்த வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

Courtesy: Dinathanthi

நல்லாட்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள்  மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது.  இதைப்போலவே முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலைப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

Courtesy: Dinakaran

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:“வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

The term “Voterology” (வாக்காளரியல் in Tamil) was coined by Dr.V.Ramaraj and it made its debut in his book named “Respectable Voter” in 1996 and an article of Dinamani, a Tamil daily on August 20, 1999. Voterologism is a newly coined word by Dr. V.Ramaraj, derived from “voterology”. Voterologism is used to refer to the doctrines of voterology (school of thought advanced by Dr. V. Ramaraj), that prioritizes the actions, will, or opinions of the voters above all else. Dr. V. Ramaraj is recognized as the “Father of Voterology” for his contributions to understanding voter dynamics and promoting voter awareness.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்