நாம் அனைவரும் மேற்கொள்ளும் பேருந்து பயணம் பலர் வாழ்க்கையில் மிக முக்கியமான கற்றலை ஏற்படுத்துகிறது. பயணத்தில் நாம் பல விதமான மனிதர்களை கடக்கிறோம். இவ்வாறான பயணங்களில் நிகழ்ந்த சில சுவாரசியமான மனிதர்களின் கதைகளைக் கேட்க சில நிமிடங்கள்…
பேருந்து போக்குவரத்து வரலாறு
மர வியாபாரத்தில் சேமித்த பணத்தில், சுந்தரம் ஐயங்கார் 1911 -ல் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து, 1912 -ல் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் பேருந்து சேவையைத் தொடங்கினார். பேருந்துகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை வழித்தடங்களில் இயங்கின. பின்னர் அரசு பேருந்து சேவைகள் 1968 -ல் சென்னை முதல் ஆரணி வரை தொடங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
நிகழ்வு – 1
பேருந்து ஒன்றில் திருச்சியிலிருந்து சென்னைக்கு தனது மகனுடன் ஒரு அம்மா வந்து கொண்டிருந்தார். திருச்சியில் இருந்து தொலைபேசியில் விளையாட்டை விளையாடிக்கொண்டே சிறுவன் வர, ஏற்கனவே இந்த தொலைபேசியை (மொபைல் ஃபோனை) உபயோகிக்க கூடாதுன்னு டாக்டரும் உன்னை சொல்லி இருக்காங்க . இப்படியே பண்ணிட்டே இருந்தா உன்னோட கண்ணு போயிடும் என சொல்லி திட்டினார். அந்த சிறுவன் தனது கவனத்தை தொலைபேசி விளையாட்டில் இருந்து சற்றும் திருப்பிக் கொள்ளவில்லை. சில நேரம் பொறுத்துக் கொண்ட அந்தப் பெண் அந்த சிறுவனை அடித்து அவனிடமிருந்து தொலைபேசியை பிடுங்கினாள். இதன்மூலம் தற்போது அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொலைபேசிக்கு அடிமையாக உள்ளனர் என்பதை உணர முடிந்தது. ஒரு மனிதனால் சில நிமிடம் கூட தொலைபேசி இல்லாமல் இருக்க முடியவில்லை. தற்கால மனிதனால் ஒரு நாளாச்சும் தொலைபேசியை வைத்துவிட்டு தன்னை சுற்றி உள்ள விஷயங்களை காணமுடிகிறதா! நாம் அனைவருமே டிஜிட்டல் போதைக்கு அடிமையாக உள்ளோம், நம்மாலையே இதிலிருந்து மீள முடியாது இந்த பொழுதில், எவ்வாறு ஒரு பள்ளிப் பயிலும் சிறுவனால் அதிலிருந்து அவனை தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, முடிந்தவரை பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொலைபேசியை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்த மட்டுமே கொடுத்து பழக்க வேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நேர கட்டுப்பாட்டையும் சிறுவயதிலேயே பெற்றோர்கள் தனது பிள்ளைகளிடம் சொல்லித் தர வேண்டும். பிள்ளைகளுக்கு இணையாக பெற்றோர்களும் டிஜிட்டல் மீடியா , தொலைபேசியில் தங்களை தொலைக்காமல் இருத்தல் நன்று.
நிகழ்வு – 2
ஒரு வயதான பெண்மணி பேருந்தில் இருமிக் கொண்டே பயணித்தார் அவர் பார்ப்பதற்கு உடல் நலத்துடன் இருப்பது போன்று காட்சியளித்தார் ஆனால் குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஓட்டுனரை கண்டு தனது சத்தத்தை எழுப்பிக் கொண்டே பயணித்தால் எனக்கு குழப்பமாக இருந்தது அவரிடம் பேசிய போது எனக்கு வியப்பாக இருந்தது அவரின் செயலை எண்ணி உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? என கேட்டேன் அதற்கு விடை என்னவாக இருந்தது தெரியுமா எனக்கு உடல்நலம் பாதிப்பு எதுவும் இல்லை! நான் நன்றாக தான் உள்ளேன் நான் திருச்சியில் இருந்து இப்படி ி அங்க தூங்கிட்டே வண்டி ஓட்டுற ஓட்டுனரை எழுப்பிக் கொண்டு இருக்கமா இந்த ஓட்டுனருக்கு உடல்நலம் சரியில்லையா! இல்ல ஓவர் டியூட்டியா இல்ல இரவு முழுவதும் பேருந்தை ஓற்றாரான்னு தெரியல ஆனா, நல்ல தூக்கம் வருது, கண் மட்டும் சொக்கி கிட்டே இருக்கு இதுவரை இரண்டு இடத்தில் கொஞ்சம் வழி தவறிட்டாருடு நான் வயசானவ என்ன ஆனாலும் பரவால்ல ஆனா, இந்த பேருந்தில் சின்ன வயதில் இருந்து எல்லாம் பயணிக்கிறாங்க அதான் நான் இப்படி அவருக்கு கண் சொக்குரப்ப திரும்பி அவரை விளிக்க வைக்க கூறினார் அந்த பெண்மணி இந்த பெண்ணின் செயல் வியப்பாக இருந்தது
பணி சுமையா அல்லது அதிக நேர வேலை என தெரியவில்லை என்னவாக இருந்தாலும் சற்று கவனத்தோடு பேருந்து ஓட்டுநர்கள் செயல்பட்டால் பல விபத்துகளை தடுக்க முடியும் சில நேரங்களில் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது அதை கருத்தில் கொண்டு அவர்கள் சில நேரங்களில் போட்டி போட்டு பிற பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு செல்லுதல் நிறுத்த வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் செல்வது போன்ற ஈடுபடுகின்றனர், இவற்றை தவிர்த்தல் அனைவருக்கும் நன்று பயணிகளும் பேருந்தில் சாப்பிட்டு மிஞ்சுவதையும், குப்பைகளையும் இறங்கும் இடத்தில் குப்பை தொட்டில் போட்டு விட்டால் பேருந்து எவ்வளவு சுத்தமாக இருக்கும்?
கருத்து -1
சில பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசைகள் போடப்படுகின்றன. சிலர் பேருந்தில் பயணிக்கும் போது புத்தகங்களை படிக்க விரும்புவார்கள், சிலர் கல்லூரி தேர்வுக்காக முக்கியமான வினாக்களை பேருந்தில் செல்லும் போது படிக்கலாம் என நினைப்பார்கள், சிலர் நல்லா உறங்க வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால் அந்த அதீத சத்தம் கொண்ட பாடல் அதை அனைத்தையும் செய்ய விடாமல் செய்து விடுகின்றன. பேருந்துகளில் போடப்படும் பாடல்கள் யாருக்காக போடப்படுகின்றன என்பது ஒரு வினாவாக எழுதுகிறது. ஓட்டுனர் நடத்துனர்காகவா! என்றால் அவர்களுக்கு மட்டும் கேட்கும் அளவில் அந்த பாடலை இசைத்தால் மிக நன்று.
கருத்து -2
சில ஆண்கள் பேருந்தில் தங்களின் ஆதிக்கத்தை காட்டும் விதமாக நடந்து உள்ளனர் என சில தோழிகள் கூறினர். பேருந்தில் பயணிக்கும் போது பெண்களிடம் அத்துமீறி நடப்பது,அவர்களை பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அவர்களை தொட முயற்சிப்பது, பின்தொடர்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். கேள்வி என்னவென்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்கள் ஒருபோதும் நிற்காதா? அந்த அத்துமீறும் மனிதனின் செயலை சக பயணிகள் கேள்வி கேட்பார்களா? நம் நாட்டில் பெண்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறார்களா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கான சில உதாரணமே இங்கே. பெண்களே! நீங்கள் மோசமாக நடத்தப்படும் போது சமூகம் குருடாக இருக்கும், பாதிக்கப்பட்ட பிறகு அதே சமூகம் உங்களைக் குறை கூறும். எனவே தைரியமாக இருங்கள், உங்கள் குரலை முதலில் உங்களுக்காக உயர்த்துங்கள் பெண்களே!

தரமான சேவை என்பது நுகர்வோர் அனைவரின் உரிமை. சின்ன சின்ன முயற்சிகள் கூட பெரிய மாற்றத்தை தருமல்லவா? நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நல்ல கருத்துக்களை எடுத்துரைத்துள்ள கட்டுரையாளரான சட்டக் கல்லூரி மாணவிக்கு நுகர்வோர் பூங்காவின் வாழ்த்துக்கள்!