கடன்களை வசூலிப்பதற்காக வங்கிகளுக்கு உதவ கடந்த 2002 ஆம் ஆண்டு சர்ப்பசி சட்டம் (SARFAESI Act: Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act)என்பது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. கடன் ஒப்பந்தப்படி ஆறு மாதங்களுக்கு மேல் கடன் தொகையை செலுத்த தவறுவோர்களுக்கு சர்ப்பசி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை முதலில் வங்கியில் அனுப்ப வேண்டும்.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்கும் கடனை வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அல்லது கடன் ஒப்பந்தப்படி தவணைகளை செலுத்துவதில் (வரா கடன்) தவறினால், கடன் வாங்கியவர்களால் கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்டுள்ள கடன் வாங்கியவர்களின் சொத்துக்களை கடன் கணக்குக்கான செயல்படாத சொத்து (NPA: Non-Performing Asset) என வகைப்படுத்த வங்கிகளுக்கு சர்ப்பசி சட்டம் அதிகாரம் அளித்துள்ளது.
கடன் வாங்கியவரின் கடன் கணக்கு வரா கடனாக வங்கியால் அறிவிக்கப்பட்டால் கடன் வாங்கியவர் வங்கிக்கு ஈடாக கொடுத்துள்ளார் சொத்துக்களை நீதிமன்றம் மூலம் அல்லாமல் நேரடியாக வங்கியே சொத்தில் சொத்தின் சுவாதீனத்தை எடுக்கவும் அதனை ஏலம் மூலம் விற்பனை செய்யவும் அல்லது அதனை நிர்வகிக்க முகவர்களை நியமிக்கவும் அல்லது அந்த சொத்தை குத்தகைக்கு விடவும் வங்கிகளுக்கு சர்ப்பசி சட்டம் அனுமதி அளிக்கிறது.
உரிமைகள் (Rights)
சர்ப்பசி சட்டத்தால் ஒரு சொத்து கையகப்படுத்தப்பட்டு ஏல அறிவிப்பு செய்யப்பட்டு விட்டாலும் விற்பனை முடிவதற்குள் நிலுவை கடன் தொகையை செலுத்தி கடன் வாங்கியவர் செலுத்தினால் சொத்தின் விற்பனை நடைமுறை ரத்து செய்யப்பட்டு சொத்து கடன் வாங்கியவருக்கு வழங்கப்படும்.

வங்கியின் சர்பசி சட்டப்படி சொத்தை கையகப்படுத்தி விற்பனை செய்வதில் வங்கியின் அலுவலர் தவறு செய்தால் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடன் பெற்றவருக்கு உரிமை உண்டு.
சர்ப்பசி சட்டப்படி மேற்கொள்ளப்படும் சொத்தை கையகப்படுத்துதல், ஏலம் விடுதல் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி பரிகாரம் தேட கடன் பெற்றவர் டி.ஆர்.டி (DRT: Debt Recovery Tribunal) என அழைக்கப்படும் கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகலாம்.
ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி (Reconstruction)
சர்ப்பசி சட்டத்தின் கீழ் அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி பதிவு செய்யப்பட்டு இயங்க வழி வகுக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை இந்த நிறுவனங்களை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நெறிப்படுத்துகிறது.
அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களின் வேலை என்னவெனில் வங்கிகளில் வராக கடனாக உள்ள கடன் கணக்குகளை வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. பின்னர் கடன் வாங்கியவர்களிடம் தொடர்பு கொண்டு சட்டப்படி பணத்தை வசூலிக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லுவதில் கடன் செலுத்தாத கடன் கணக்குகளை வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றன.
விதிவிலக்கு (Exemption)
பர்சனல் லோன், தங்க நகை கடன், சொத்துக்களை அடமானம் செய்யாமல் பெறப்படும் கடன், பெற்ற கடனில் 80 சதவீதத்திற்கு மேல் திருப்பி செலுத்தப்பட்ட கடன் கணக்குகள் போன்றவற்றிற்கு சர்ப்பசி சட்டம் பொருந்தாது. விவசாய நிலங்களை கைப்பற்றி ஏலத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது சர்ப்பசி சட்டப்படி இயலாது. இருப்பினும் சம்பந்தப்பட்ட சொத்தில் விவசாயம் செய்யப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டியது கடன் பெற்றவரின் கடமையாகும்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: சர்ப்பசி சட்டம் சில நேரங்களில் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொதுவாக நிலவுகிறது. இதனை தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
