spot_img
January 8, 2026, 4:47 am
spot_img

அதிகார அமைப்புகளை பார்வையிட்ட நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவர்கள்

நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ்அவர்களோடு நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவர்கள்

நவீன், ரம்யா, ஜீவிதா, ஞானிதா, கீர்த்தனா, தேவதர்ஷினி உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் நாமக்கல் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்கள். நாட்டின் அரசு எப்படி இயங்குகிறது? அதன் அதிகார அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன? என்பது குறித்து அறிய இரண்டு நாட்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா (05, 06, ஜனவரி 2026)  சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு சட்டக் கல்லூரி மாணவரும் நாட்டை இயக்கும் அமைப்புகளையும் அரசின் அதிகார அமைப்புகளையும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்த சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். 

சட்டமன்றம், சட்டப்படி ஆட்சி நடத்தும் தலைமைச் செயலகம் மற்றும் அதன் துறைகள், சட்டப்படி நீதி வழங்கும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நேரில் கண்டறிந்து அவை செயல்படும் விதங்கள் பற்றி முதல் நாளில் மாணவர்கள் தெரிந்து கொண்டனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசு பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தகவல் உரிமைச் சட்டத்தின் காவலனாக விளங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாநில சட்ட ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து அதன் நடைமுறைகள் குறித்து இரண்டாம் நாளில் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

மாநில தகவல் ஆணையர் நடேசன், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் (முன்வரிசை மத்தியில்), மாநில தகவல் ஆணையர் இளம் பரிதி

நாடு எப்படி ஆட்சி செய்யப்படுகிறது என்றும் சட்டம் இயற்றும் அமைப்புகள், செயல் துறை அரசின் துறைகள் மற்றும் அதன் அதிகார அமைப்புகள், நீதித்துறை குறித்த விரிவான உரையை கேட்டோம். மேலும் வெற்றிக்கு விதி செய்வோம் என்பதன் அடிப்படை அம்சங்களை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைத்தது என சட்டக் கல்லூரி மாணவிகள் ஜீவிதா, ரம்யா, ஞானிதா ஆகியோர் தெரிவித்தனர்.

டாக்டர் வீ. ராமராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில சட்ட ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை பார்வையிட்டோம். பின்னர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு சென்று டாக்டர் வீ. ராமராஜ் அவர்களின் நண்பரான மாநில தகவல் ஆணையர்கள் இளம் பரிதி மற்றும் நடேசன் ஆகியோரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தது. மேலும் தகவல் ஆணையரின் விசாரணையை நேரில் கண்டறிந்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து தகவலையும் பெற்றோம். இவ்வாறு எங்கள் கல்விச் சுற்றுலா அறிவார்ந்த முறையில் சென்றது.மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC), ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், குழந்தைகள் ஆணையம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவற்றை பார்வையிட உள்ளோம் என சட்டக் கல்லூரி மாணவிகள் தேவதர்ஷினி, கீர்த்தனா மற்றும் மாணவர்  நவீன் ஆகியோர் தெரிவித்தனர்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்