spot_img
March 12, 2025, 9:13 pm
spot_img

இளைஞருக்கு நேர்ந்த துயரம் – படிப்போரை கண்ணீரை வரவழைக்கும் உண்மை சம்பவம் – ரூ  ஒரு கோடி வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்

நாமக்கல்லில் கணேசபுரத்தில் வசித்து வருபவர் பாஸ்கரன் மகன் திபேன் (40). கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில்  பணியாற்றியவர். தற்போதைய உலகத்தில் பெரிய நிறுவனங்கள் முதல் சாதாரண மனிதர்கள் கூட பிரத்தியேகமாக தனக்கென ஒரு வெப்சைட்டை வைத்துக் கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த திபேனின் பணி வெப்சைட்களை வடிவமைப்பதும் ஆயிரக்கணக்கான வெப்சைட்களை பராமரிப்பதும் ஆகும். 

2020 செப்டம்பர் 5 – பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த திபேனுக்கு அன்றைய நாள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அன்று மாலை சுமார் நான்கு மணிக்கு பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார் திபேன். உடனடியாக, அவரது நண்பர்கள்  அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்த சென்னை வேளச்சேரியில் இருந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த நாள் கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமாக இருந்த காலகட்டம். இருப்பினும் திபேனின் உடல் நிலையின் தீவிரமான பிரச்சனையை உணர்ந்த மருத்துவமனை, அவருக்கு கொரோனா தொற்றை பரிசோதனையை மேற்கொண்டு அவருக்கு தொற்று இல்லை என்று கண்டறிந்ததும் அவரை உள்நோயாளியாக மருத்துவமனையில் அமைத்து அனுமதித்து உடனடி முதலுதவி சிகிச்சைகளை வழங்கியது.   அவரது உடல்நிலை மிகவும் உடலில் இடது பக்க கால் கை ஆகியவை செயலிழந்து உள்ளதாகவும் உடனடியாக நவீன சிகிச்சைகளுக்காக உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் திபேனின் நண்பர்களை அறிவுறுத்தியது அந்த மருத்துவமனை.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

சிகிச்சை வழக்கு காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது என்ற நிலையில் திபேனுக்கு முதலுதவி வழங்கிய மருத்துவமனைக்கும் அவரது அலுவலகத்துக்கும் அவரது வீட்டுக்கும் அருகாமையில் சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவமனையின் கிளை ஒன்று பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது என்பதை அறிந்த திபேனின் நண்பர்கள் திபேனை அந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர். நடைபெறும் சம்பவங்கள் எதனையும் தெரியாமல் சுய நினைவு இல்லாமல் திபேன் இருந்து வரும் நிலையில் சென்னையில் வீட்டில் உள்ள அவரது மனைவிக்கும் அவரது நாமக்கல்லில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு நண்பர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.  இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு சிகிச்சை வழங்குவதில் காம காலதாமதம் ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதால் பக்கவாதத்தால் ஒரு பக்க கையும் காலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்தனர். 

கொரோனா பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையில் திபேன் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை உடைகளுடன் மருத்துவர்களும் செவிலியர்களும் அவரது   அறைக்குள் நுழையும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக திபேனின் பெற்றோர்களிடமும் மனைவியிடமும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் கூறியதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

கொரோனா தொற்று இருந்து மீண்டு வந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தபோதும் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் படுக்கையில் இருந்ததால் அவரது திபேனுக்கு உடலின் பின்பக்க மத்தியில் கடுமையான படுக்கை புண் மிக ஆழமாக ஏற்பட்டு விட்டது. இதனால் கடுமையான துயரத்துக்கு உள்ளான அவருக்கு இதற்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. 

சுமார் 25 நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறிய போதிலும் அவரது மண்டை ஓட்டை மீண்டும் பொருத்தாமல் அதனை   பாதுகாப்பு பகுதியில் வைத்துக் கொண்டு மண்டை ஓட்டின் மேல் பிளாட்டினம் மெஸ் ஒன்றை பொருத்தி திபேன் வீடு திரும்பி உள்ளார். மீண்டும் 2020 அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை அதே மருத்துவமனையில்   உள்நோயாளியாக இருந்துள்ளார். மருத்துவமனையில் அவர் இறுதியாக அனுமதிக்கப்பட்ட போது மண்டை ஓட்டின் பகுதி அவரது தலையில் பொருத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பின்னரும் அவர் பூரண குணம் பெறவும் இல்லை. அவரது ஒரு பக்க கை கால்களின் இயக்கம் இயல்பு நிலைக்கு திரும்பவும் இல்லை என்பதுதான் வேதனையானது. வேலைக்கு செல்ல முடியாத நிலை என்பதோடு தன்னிச்சையாக எழுந்து அமரவோ, நடக்கவோ இயலாத நிலை திபேனுக்கு நிலவியது. இதனால் திபேனையும் அவரது மனைவியையும் கைக்குழந்தையும் சென்னையில் இருந்து சொந்த ஊரான நாமக்கல்லுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை விமலா வித்யா என அழைக்கப்படும் பாஸ்கரன் (75). அவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்.

திபேனின் பெற்றோர்களுக்கும் அவரது மனைவிக்கும் அவரை கவனிப்பதே முழு நேர வேலையானது. அவருக்கு தொடர் சிகிச்சை மற்றும் பிசியோதெரபி பயிற்சிகளுக்கு தொடர்ந்து செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது அவரது குடும்பம். கவனமுடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு பூரண நலம் ஏற்பட்டிருக்கும் என்று கருதினார் அவரது தந்தை மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்ட அலட்சியமான மருத்துவ சிகிச்சை குறித்து அலசி ஆராய்ந்தார். 

மருத்துவமனையில் வழங்கப்பட்ட அலட்சியமான சிகிச்சை விவரங்களை தயாரித்த பின்னர் மருத்துவமனையில் வழங்கப்பட்ட ரசீதுகளை பார்த்தபோது பாஸ்கரனுக்கு தூக்கி வாரி போட்டது. அவர் மருத்துவமனையில் மருந்துகளுக்கும் சிகிச்சைகளுக்கும் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் போதும் பணமாகவே (by cash) மருத்துவமனைக்கு அவர் செலுத்தியுள்ளார். ஆனால், ரசீதுகளில் உள்ள விவரங்களில் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தப்பட்டதாக இருந்துள்ளது.

மகனுக்கு ஏற்பட்ட கவனக்குறைவான மருத்துவ சிகிச்சை மற்றும் தவறான ரசீதுகள் வழங்கிய நேர்மையற்ற வர்த்தக நடைமுறை மீது நடவடிக்கை மேற்கொள்ள நாமக்கல்லில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்தார் பாஸ்கரன். இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று அவருக்கு தெரிந்த வக்கீல் நண்பர்கள் தெரிவித்தது அவருக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது.  ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும் சிகிச்சைக்கு செலவான நிலையில் அவரால் வக்கீல் வைத்து மருத்துவமனை மீது வழக்கு தாக்கல் செய்ய இயலவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றாலும் மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது எனக் கூறி மன்னித்து வழக்கை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கும் விண்ணப்பத்துடன் மருத்துவமனை மீது கடந்த 2023 டிசம்பரில் வழக்கை தாக்கல் செய்தார் மனம் தளராத பாஸ்கரன். காலதாமதத்தை மன்னிக்கும் மனுவை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2024 ஜூன் மாதத்தில் காலதாமதத்தை மன்னித்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் எவ்வித வழக்கறிஞர் கட்டணமும் இல்லாமல் வழக்கை நடத்தி தருவதாக பாஸ்கரனுக்கு உதவ முன் வந்தார் நாமக்கல் வழக்கறிஞர் எல். சுரேஷ்குமார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே சிகிச்சை வழங்காமல் காலதாமதம் செய்தது, தலையில் இருந்து பிரிக்கப்பட்ட மண்டை ஓட்டு பகுதியை (skull) அறுவை சிகிச்சை முடிந்ததும் பொருத்தாமல் நீண்ட காலம் கழித்து அதனை பொருத்தியது உள்ளிட்ட முறையற்ற மருத்துவ சிகிச்சை, தவறான சிகிச்சையால் ஏற்பட்ட படுக்கை புண் உள்ளிட்டவை அலட்சியமான மருத்துவ சேவை குறைபாடு என்று பாஸ்கரன் மற்றும் அவரது மகன் தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவமனை தரப்பில் நோயாளிக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளதாகவும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் வாதிடப்பட்டது. 

இரு தரப்பு சாட்சியங்கள் மற்றும் வாதங்களுக்கு பின்னர் தற்போது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தாக்கல் செய்தவர்களிடமிருந்து மருந்துகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் வசூலிக்கப்பட்ட தொகை ரூ 39,03,773/- ஐ    2020 அக்டோபர் மாதத்தில் இருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 9 சதவீத வட்டியுடன் பாஸ்கரன் மகன் திபேனுக்கு மருத்துவமனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கவனக்குறைவான மருத்துவ சிகிச்சை மற்றும் தவறான ரசீதை வழங்கி புரியப்பட்டுள்ள நேர்மையற்ற வணிக நடைமுறைக்காக ரூபாய் 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட மூத்த குடிமகன் பாஸ்கரன் அவர்களிடம் மருத்துவமனையின் பெயரை கேட்டபோது மகனின் பாதுகாப்பு கருதி மருத்துவமனையின் பெயரை வெளியிட விரும்பவில்லை எனக் கூறியதோடு தற்போதும் மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்யாமல் சமாதான முறையில் இழப்பீடு வழங்கினால் மகனின் மேல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். மருத்துவமனையின் சார்பில் எத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவரிடம் கேட்டபோது இன்னும் தீர்ப்பின் முழுமையான நகலை பெறவில்லைஎன்றும் நீதிமன்றத்தில் உள்ள தினசரி தைரியம் மூலமாகவே டைரி மூலமாகவே வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தை தெரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

மகனின் மன உறுதி (will power) உடல்நல குறைவிலும் திடமான மனநிலைக்கு அவரைகொண்டு வந்துள்ளது என்றும் தற்போதும் எழுந்து உட்கொரும் நேரம் முழுவதும் அமரும் நேரம் முழுவதும் கம்ப்யூட்டரே கதி என்று பலருக்கு வெப்சைட்களை வடிவமைப்பதற்கு உதவி புரிந்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். 

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:  திபேனின் மன உறுதியையும் அவரது தந்தையின் சட்ட போராட்டத்தையும் பாராட்டாமல் இருக்க இயலாது. மேல் முறையீடு உரிமையாக இருந்த போதிலும் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவமனை அவருக்கு இழப்பீடு வழங்குவது சரியானதாக இருக்கும். 


தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்