அமைதிக்கான உத்திகள் நிறுவன (Tranquility Strategies Pvt Ltd) வெளியீட்டுப் பிரிவில் (Publication Division) “நுகர்வோர் பூங்கா” என்ற இணைய இதழ் (visit: theconsumerpark.com) வெளியிடப்பட்டு வருகிறது. நுகர்வோர் பூங்காவில் மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டம் குறித்த செய்தி கட்டுரைகளும் மூன்றில் ஒரு பங்கு பொதுவான செய்தி கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன. அரசியல், நிர்வாகம், தொழில், விவசாயம், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல தலைப்புகளில் முழுமையான பொது கட்டுரைகளுடன் “பூங்கா இணைய இதழ்” வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வெளியாக உள்ளது. நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆங்கில பதிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தில் மேம்பாட்டு பிரிவு (Development Division), சமூக பொறியியல் பிரிவு (Social Engineering Division) ஆகியனவும் உள்ளன. இந்த நிறுவனத்தில் கீழ்காணும் திட்டங்கள் வரும் ஏப்ரல் முதல் நாளில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.
01. வணிக நிர்வாக முதுநிலை/பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டம் (M.B.A .,/PG Student Marketing Professional Internship Scheme)
02. இளம் வணிக நிர்வாக சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டம் (Young Business Administration – Marketing Professional Internship Scheme)
03. எம்.பி.ஏ., கற்பிக்கும் கல்லூரிகளுக்கும் அமைதிக்கான நிறுவனத்துக்கும் இடையே வணிக நிர்வாக சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கான ஒப்பந்தம் (Business Administration – Marketing Internship Scheme)
வணிக நிர்வாக சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி இணைய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சி திட்டம் குறித்த விவரங்களும் விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் பின்வருமாறு:
திட்ட அம்சங்கள்
01. இந்த பயிற்சி திட்டத்தின் கால அளவு: 2024 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2025 மார்ச் இறுதி தேதி வரையாகும். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எவ்வித பயிற்சி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
02. இந்த பயிற்சியின் போது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்கான உத்திகள் (Marketing Strategies) குறித்த பயிற்சி வழங்கப்படும். சந்தைப்படுத்துதலில் அடையும் இலக்குகளுக்கு தகுந்தவாறு மதிப்புமிகு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
03. எம். பி. ஏ., பட்டத்தை கற்பிக்கும் கல்லூரிகள் கீழ்காணும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி (internship) வழங்குவதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை (tie-up)) மேற்கொள்ளலாம்
தகுதிகள்
04. பொது தகுதி: தமிழ் மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். மின்னஞ்சல் தகவல் தொடர்பு, இணையதள பயன்பாடு போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழியை நன்கு பேச, படிக்க எழுத தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகும்.
05. வணிக நிர்வாக முதுநிலை/பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.ஏ.,/ பட்ட மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவராக இருக்க வேண்டும். இத்திட்டம் பிற மாவட்டங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும்.
06. இளம் வணிக நிர்வாக சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டத்துக்கு இணைய விற்பனை துறையில் ஆர்வம் உள்ள 25 வயதுக்கு மிகாத சுய தொழில் புரியும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் பிற மாவட்டங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
07. கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியில் விண்ணப்பத்தை 20-03-2024 ஆம் தேதிக்குள் [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும். இதிலிருந்து தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இணையதள வழியில் அல்லது நேரடி தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் வல்லுநர் பயிற்சிக்கான கடிதமும் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
08. தங்கள் மின்னஞ்சலில் பெறுநர்: திரு கே. பி. மனோகரன், நிர்வாக இயக்குனர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம் என்றும் மின்னஞ்சல் தலைப்பில் பயிற்சி திட்ட விண்ணப்பம் என்றும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.
09. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது. தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.
வணிக நிர்வாக முதுநிலை/பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான- இளைஞர்களுக்கான சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டம்
01. பெயர்,
02. பிறந்த தேதி :
(பத்தாம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி) :
03. பாலினம் :
04. தந்தை/காப்பாளர் பெயர், தொழில் :
05. படிக்கும்/படித்த பட்டம் மற்றும் ஆண்டு :
06. படிக்கும்/படித்த கல்லூரியின் பெயர், முகவரி :
07. நிரந்தர முகவரி :
08. வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்பவரா?
இல்லையெனில் எவ்வாறு? :
09. தொலைபேசி எண் :
மின்னஞ்சல் முகவரி :
10. எந்தத் திட்டத்தில் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள்? கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை டிக் (tick) செய்யவும்.
01. வணிக நிர்வாக முதுநிலை மாணவர்களுக்கான சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டம்
02. இளம் வணிக நிர்வாக சந்தைப்படுத்துதல் தொழில் வல்லுனர் பயிற்சி திட்டம்
தேதி விண்ணப்பதாரர் கையொப்பம்
வேண்டுகோள்: இத்திட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் இதனை படிப்பவர்கள் பலருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.