நுகர்வோர் புகாரின் பேரில், ஜம்மு சட்ட அளவியல் துறை (Legal Metrology Department) சட்ட அளவியல் சட்டம், 2009 மற்றும் சட்ட அளவியல் (தொகுக்கப்பட்ட பொருட்கள்) விதிகள், 2011 ஆகியவற்றை மீறியதற்காக, ஹரியானாவைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் மீது கடந்த வாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு நகரத்தில் உள்ள காந்தி நகர் அப்சரா சாலையில் உள்ள ஒரு முக்கிய ஆடை விற்பனைக் கடையில், ஜம்முவின் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த, துணைக் கட்டுப்பாட்டாளர் தலைமையிலான, சட்ட அளவியல் அதிகாரிகளின் குழு ஆய்வு செய்தபோது, ”அல்வரோ காஸ்டாக்னினோ.” பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் கழுத்தில் கட்டப்படும் டைகள் (neckties) தொடர்பான தவறான நடைமுறைகளைக் கண்டறிந்தனர்.
“அல்வரோ காஸ்டாக்னினோ.” தயாரிப்பு முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகக் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பை ஆய்வு செய்ததில், இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனம், தயாரிப்பின் இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் ஆகிய இரண்டையும் பொய்யாகக் காட்டியது தெரியவந்தது. பிராண்ட் பெயர் வேண்டுமென்றே கவர்ச்சியாக ஒலிக்க மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது போல வைக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் நுகர்வோர் பாதுகாப்பு துணைக் கட்டுப்பாட்டாளர் வழங்கிய அறிவிப்பிற்கு பதிலளித்த நிறுவனம், அதன் லேபிளிங் குற்றங்களை ஒப்புக்கொண்டது. இதன் விளைவாக, விற்பனை நிறுவனத்திற்கு ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது,
ஜம்முவின் சட்ட அளவியல் துறை (நுகர்வோர் பாதுகாப்பு) துணைக் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்ட ஒரு கையேட்டில், ஏமாற்றும் நடைமுறையிலிருந்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க, முன்கூட்டியே தொகுக்கப்பட்ட பொருட்களின் துல்லியமான தயாரிப்புத் தகவலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்ட அளவியல் (தொகுக்கப்பட்ட பொருட்கள்) விதிகள், 2011 -ன்படி, உற்பத்தியாளர்கள், பேக்கேஜ் செய்பவர்கள், இறக்குமதியாளர்கள், சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளரின் முகவரி போன்ற, தாங்கள் வாங்கும் பொருட்கள் பற்றிய துல்லியமான தகவல்களை நுகர்வோர் பெற வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சட்ட அளவியல் என்பது அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகளுக்கான சட்டத் தேவைகளைப் பயன்படுத்துவதாகும். சட்ட அளவியல் சட்டம் 2010 ஜனவரி 13ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஏப்ரல் 1, 2011 முதல் அமலுக்கு வந்தது. எடை மற்றும் அளவிடும் கருவிகளுக்கான விவரக்குறிப்புகள் சட்ட அளவியல் (பொது) விதிகள், 2011 – ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொள்முதல் செய்யும் போது விழிப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு நுகர்வோர்களுக்கு சட்ட அளவியல் துறை அறிவுறுத்துகிறது. மேலும், இது தொடர்பான ஏதேனும் குறைகள் இருப்பின், அதன் நிவர்த்திக்காக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் சட்ட அளவியல் துறையை அணுகலாம்.