2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
பண்டைக் காலத்தில் ரோமானியர்கள் உருவாக்கிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. ரோமானிய பேரரசர் மார்சியல் நினைவாக சூட்டப்பட்ட மார்ச் மாதத்தில் முதல் நாளை தான் ரோமானியர்கள் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.
ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் நினைவாக ஜனவரியஸ் என்ற மாதத்தையும் பிப்ரவரியஸ் என்ற மாதத்தையும் ரோமானிய மன்னரான போம்பிலியாஸ் உருவாக்கி ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
ஜூலியஸ் சீசர் ரோமானிய மன்னராக இருந்த காலத்தில் ஜூலியன் என்ற காலண்டரை உருவாக்கி ரோமானிய கடவுள் ஜனசை கௌரவிக்கும் விதமாக ஜனவரி முதல் தேதி என்பது ஆங்கில புத்தாண்டின் முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கி.பி. 1500 ஆம் ஆண்டு போப்கிரிகோரி என்பவர் லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை வெளியிட்டார். இதனை தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதனைப் பின்பற்றிய ஆங்கில காலண்டர் நடைமுறையில் உள்ளது.
2025 புத்தாண்டு தொடங்கும் முதல் இடம் பசிபிக் பெருங்கடலில் சிறிய தீவானகிரிபட்டி குடியரசில் உள்ள கிரிடிமதி (கிறிஸ்மஸ்) தீவு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணி). சிறிது நேரத்திற்குப் பிறகு, நியூசிலாந்தின் சத்தம் தீவுகள் (இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணி). அதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் (இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணி). பசிபிக் பெருங்கடலில் உள்ள பேக்கர் தீவு மற்றும் ஹவ்லேண்ட் தீவு இறுதியாக (2025) புத்தாண்டு பிறக்கிறது.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!