புத்தர் ஒருபோதும் கடவுளை நம்பியதில்லை. கடவுளைப் பற்றி ஒரு சூத்திரமும் எழுதியதில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது புத்தர் பரம நாத்திகர். அவர் எப்போதும் கடவுளை நம்பியதில்லை. கடவுள் குறித்த சிந்தனைகள் எல்லாம் மனிதன் எட்டுக்கட்டிய கற்பனைக் கதைகள்.
ஒவ்வொரு மாதமும் சொர்க்கத்தில் இருக்கும் புனித பீட்டரும், நரகத்தின் அதிபதியான சாத்தானும் சந்தித்து, வந்திருக்கும் புதிய ஆவிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்வது வழக்கம். அன்று புதிதாக வந்த ஓர் ஆவியைப் பார்த்து புனித பீட்டர் கேட்டார், “உன் பெயர் என்ன?” வெள்ளைத்தாடியுடன் இருந்த அந்த ஆவி அமைதியாகச் சொன்னது,,,
காரல் மார்க்ஸ்.
“ஆஹா… நீ நாத்திகவாதியாயிற்றே, அதனால் நீ நரகத்துக்குத்தான் போக வேண்டும்.” ஒரு மாதம் கழிந்தது. அடுத்த மாத சந்திப்பு. சாத்தான் தாமதமாக வந்தது. அதன் கொம்பு ஒன்று முறிந்திருந்தது. வால் கருகியிருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“என்ன ஆயிற்று உனக்கு?” புனித பீட்டர் பதட்டத்தோடு கேட்டார். எல்லாம் இந்த காரல் மார்க்ஸ்ஸால்தான். அவன் வந்ததிலிருந்து நரகம் வெப்பமாக மாறி விட்டது. அவன் அங்கு பிரச்னைகளை உருவாக்குகிறான். நரகத்தில் போதிய காற்றேட்டம் இல்லை; சுகாதாரம் இல்லை என்று ஒரே புகார்.
இதனால் சில வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், பேரணிகள். எனவே அவன் வைத்த கோரிக்கைகளை நான் ஏற்க வேண்டியதாயிற்று. இப்போது நரகம் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. சித்திரவதை நடக்கும் போது நடுவே ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் இடைவேளை தர வேண்டியிருக்கிறது. அந்த இடைவெளியில் வலி தெரியாமல் இருக்க மசாஜ் போன்ற வசதிகள், அதற்கு இயந்திரங்கள் நிறுவியிருக்கிறேன்.
எனக்கு கிறுக்கு பிடித்து விடும் போல் இருக்கிறது. நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும். ஒரு மாதம் அவரை சொர்க்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,, பிளீஸ்,, என்றது சாத்தான். புனித பீட்டர் மறுத்து விட்டார். “என்ன விளையாடுகிறாயா? தேவதைகள், கடவுளுக்கு நடுவே நாத்திகவாதியா? சிரமமாயிற்றே” என்றார். “ஒரே ஒரு மாதம், பிளீஸ்” என்ற சாத்தானின் விடாப்பிடியான வேண்டுகோளால், வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் புனித பீட்டர்.
ஒரு மாதம் கழிந்தது. அடுத்த கூட்டத்தில் சாத்தான் ஆவலாக கேட்டது, “கார்ல் மார்க்ஸ்ஸால் என்ன தொந்தரவு?” “சேச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை. அவன் மிகவும் நல்லவன் என்றார் புனித பீட்டர்.” உங்களை எதிர்த்து வேலை நிறுத்தம், புரட்சி ஏதும் செய்யவில்லையா?” என்று சாத்தான் கேட்டது. இல்லை. நாங்கள் பல முறை சந்தித்து பேசினோம். என்ன அழகாக ஆணித்தரமாகப் பேசுகிறான். அவன் நாகரீகம் தெரிந்த நல்ல பண்பான மனிதன்.
அப்படியா? சரி. போகட்டும். இவனைப் கடவுள் என்ன சொல்கிறார்?” சாத்தான் கேட்டது. கடவுளா? அப்படி யாரும் இல்லையே? கடவுள் என்று எவரும் இருந்தது கிடையாது என்று உனக்கே தெரியுமே, சாத்தானே ” என்றார் புனித பீட்டர். சாத்தான் இருந்த இடத்திலேயே மயங்கி விழுந்தது. புத்தர் கடவுளைப் பற்றி சூத்திரங்கள் எதுவும் எழுதவில்லை. உலகத்தில் முதன் முதலில் தோன்றிய பக்குவமான ஞானி புத்தர்தான் – கார்ல் மார்க்ஸ் பற்றி ஓஷோ
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நியாயமான போராட்டங்கள் எப்போதும் நாம் வாழும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் என்பதில் மாற்றமில்லை!