தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பழனி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் பொருளாளர் பி சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நிகழ்த்திய உரைகளின் சில பகுதிகள்.
இளைஞர்கள் வரமாகவோ சாபமாகவோ மாறுவது….அவர்களது கரங்களில்தான் உள்ளது. – சிவ கணபதி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர்
இன்று பழனியில் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் மாண்புமிகு டாக்டர். வீ. இராமராஜ் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மனிதரைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் எனக்குள் ஒரு பூரிப்பு மலரும். எந்தவிதமான பின்புலமும் இன்றி தன் கையை தானே ஊன்றி இன்றைய தினம் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
எல். ஐ. சி. முகவராக தனது வாழ்க்கையை துவக்கியவர். அரிதின் முயன்று எவராலும் முட்டுக் கொடுக்கப்படாது, கரம்பிடித்து தூக்கி விடப்படாது. இன்றைய நிலைக்கு தன்னைப் பொருத்தமாக்கி இணைத்துக் கொண்டவர். சிறு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் வழக்கறிஞராக வரும்போது தந்தை இறந்து விட்டார். 12 ஆம் வகுப்புக்கு பின்னர் இவரது படிப்புக்கு இவரே சுய தொழிலை தேடிக்கொண்டார்
உழைப்பு, உழைப்பு, உழைப்பு, தன்னம்பிக்கை இவை மட்டுமே அவருக்கு துணை நின்ற சக்திகள், ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு இலக்கணமாக திகழும் உன்னத செயல்பாடு. கிட்டிய வாய்ப்பைச் “சிக்” எனப் பற்றி…. செயற்கரிய செயலால் சீர்மை பெற்றவர். நுகர்வோர் மன்ற நீதிபதியாக இருந்த போது பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கலங்கரை விளக்கமாக ஒளி விளக்காய் திகழ்ந்து நீதி வழுவா நெறிமுறையில் நின்று அவர்களின் விழி வழிந்த கண்ணீரைத் துடைத்தவர் .
ஆம் நண்பர்களே! இளமை என்பது இயற்கை கொடுத்த அற்புத வாய்ப்பு சிலர் அதை பயன்படுத்தி சிறந்த மனிதர்களாக மாறுகிறார்கள். சிலரோ குழம்பிப்போய் உபயோகமற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் மாற முடியாத அளவுக்கு கடினமாக உறைந்து விடுகிறார்கள். இளைஞர்கள் வரமாகவோ சாபமாகவோ மாறுவது அவர்களது கரங்களில்தான் உள்ளது. நாம் அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். ஒரே மண்ணிலேதான் உலாவுகிறோம். ஒரே மாதிரியான உணவைத்தான் உண்கிறோம். ஆனால் எதையெல்லாம் சேகரித்து நம் உள்ளடக்கத்தை அமைத்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்துதான் நாம் மதிப்பு வெளிப்படும்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் என்பது …உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவிக்கு சமமானது. கணக்கன்பட்டியிலே எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு லட்சிய வெறியோடும் விவேகத்தோடும் இலக்கை குறிவைத்து நகர்ந்தவரின் ஆசை அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. இன்னும் பல உயரங்களை அவர் தொடுவார். அதன்மூலம் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தேசத்திற்கும் பல நல்ல பணிகளை ஆற்றுவார்.
பழனியில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தை உருவாக்கி முதலாவது தலைவராக பணியாற்றியவர் – பழனி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் பொருளாளர் பி சின்னராஜ் அவர்களது வரவேற்புரையில் இடம் பெற்ற வரிகள்
நமது லோக் ஆயுக்தா நீதிபதி மாண்புமிகு டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் நீதி நிர்வாகத்தில் டாக்டர் பட்டமும் காவல் நிர்வாகத்தில் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளார். அரசியலமைப்பு சட்டம், சர்வதேச சட்டம், நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களில் முதுநிலை சட்ட பட்டங்களை பெற்றுள்ளார். ஜர்னலிசம், கிரிமினாலஜி, சர்வதேச உறவுகள், குற்றவியல் நீதி, பொது நிர்வாகம், மனித உரிமைகள், அரசியல் அறிவியல், குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் எம். ஏ., பட்டங்களை பெற்றுள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கும் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கும் வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்து சர்வதேச சட்ட மாநாடுகளில் பங்கேற்றவர் நமது மாண்புமிகு வீ. ராமராஜ்.
இவரது ஆராய்ச்சி கட்டுரை ஒன்று போபாலில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மையமான தேசிய நீதித்துறை அகடமியில் பாடமாக (study matrial) வைக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச சட்ட ஆராய்ச்சி இதழ்களில் எழுதியுள்ளார். நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கு சட்ட மேற்படிப்பை படிப்பதற்காக ஆராய்ச்சி வழிகாட்டியாக பணியாற்றியுள்ளார்.
மதிப்பிற்குரிய வாக்காளர் என்ற புத்தகத்தை எழுதி 1996 ஆம் ஆண்டு வெளியிட்டார். தினமணி, இந்தியா டுடே உள்ளிட்ட பத்திரிகைகளில் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்ட சமூக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கமிஷனில் சட்ட உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களை அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தியதோடு பல்வேறு குழந்தைகள் இல்லங்களிலும் குழந்தைகள் தொடர்பான இடங்களிலும் பள்ளிகளிலும் காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியுள்ளார். கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தை நல குழுக்களின் செயலாளர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக திறபட பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். கடந்தாண்டு இந்தியாவிலேயே மிக அதிகமான வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் முடித்த ஒரே மாவட்ட ஒருவர் நீதிமன்ற என்ற பெருமையை நாமக்கல்லுக்கு இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பணி நிறைவு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் முதலமைச்சர் தலைமையிலான, எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் அடங்கிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு மாநில ஆளுநர் ஆளுநரால் வீ. ராமராஜ் அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்திலான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளது நமக்கு பெருமை அளிக்கிறது.
முதலமைச்சர், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ், அதிகாரிகள் முதல் அனைத்து அரசின் ஊழியர்களையும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் மாநில உயர் அமைப்பானது லோக் ஆயுக்தா என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை பழனி எல்ஐசி முகவராக பழனி கிளையில் பணியாற்றியவர் என்பது நமக்கு பெருமையான ஒன்றாகும். அந்த காலகட்டத்தில் எல்ஐசி ஏஜெண்டுகளிடையே ஒற்றுமையின்மையும் நிர்வாகத்தில் ஏஜெண்டுகளிடையே பாரபட்சமும் காட்டப்பட்டு வந்த நிலையில் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி முகவர்களை ஒருங்கிணைத்து கடந்த 1991 ஆம் ஆண்டு பழனியில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தை உருவாக்கி முதலாவது தலைவராக பணியாற்றியவர் நமது டாக்டர் வீ. ராமராஜ் என்பது நமக்கு பெருமையாகும்.

Tamil Nadu Lokayukta
பழனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும் ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆலோசகராகவும் வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் தேசிய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். டி. என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தில் ஐந்து ஆண்டுகள் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரது மனைவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாண்புமிகு டாக்டர் வீ. ராமராஜ் இன்னும் உயர் பதவிகளை பெற்று நமது சமூகத்திற்கும் நமது மண்ணிற்கும் பெருமை சேர்ப்பார் நம் மண்ணின் மைந்தர்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: இவர் வாக்காளரியலின் தந்தை என்று பாராட்டு பெற்றவர்.வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)