spot_img
October 18, 2024, 10:53 am
spot_img

ஆவணங்களை தொலைத்த வங்கி நுகர்வோருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் வசித்து வருபவர் மருத்துவர் எஸ். சுனில். இவர் ஸ்டேட் பேங்க் ஆப்   திருவாங்கூர், கஜக்கூட்டம் கிளையில் கடன் பெற்றுள்ளார். கடன் பெறும் போது சுனிலுக்கு சொந்தமான சொத்தின் அசல் ஆவணம், வில்லங்கச் சான்றிதழ், வரி ரசீதுகள், சுவாதீனச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வங்கியில் அடமானமாக ஒப்படைத்துள்ளார். வங்கியில் பெற்ற கடனையும் வட்டியையும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுனில் வங்கிக்கு திருப்பி செலுத்தி முடித்து விட்டார்.

கடனை செலுத்திய பின்னர் ஒப்படைக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்குமாறு வங்கியில் சுனில் கேட்டபோது அந்த ஆவணங்கள் காணாமல் போனதாக வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனால் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து தர தகுந்த நடவடிக்கையை வங்கி எடுக்க தவறியதன் காரணமாக வங்கியின் மீது கேரள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுனில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் செய்துள்ளார்.

நுகர்வோரின் புகாரை விசாரித்த கேரள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2017 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் வங்கி சேவை குறைபாடு புரிந்ததாக தெரிவித்து   நுகர்வோருக்கு ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடு வழங்குமாறு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வங்கியின் சார்பில் புது தில்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நுகர்வோர் சமர்ப்பித்த அசல் ஆவணங்களை கண்டுபிடிக்க வங்கியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் இருப்பினும் அவற்றை கண்டுபிடிக்க இயலாததால் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அசல் சொத்து ஆவணத்திற்கு பதிலாக நகல் பெற்று நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த அசல் ஆவணத்தை திருப்பி தராததால் நுகர்வோருக்கு எவ்வித சிரமமும் இழப்பும் ஏற்படவில்லை என்றும் அவ்வாறு ஏற்பட்டதற்கு எவ்வித சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் இந்த பிரச்சனை சிக்கலானது என்பதால் இந்த பிரச்சனை குறித்து சிவில் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என்றும் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு இல்லை என்றும் மேல்முறையீடு செய்த வங்கியின் தரப்பில் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வாதிடப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் 2024 ஆகஸ்ட் 19 அன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அசல் ஆவணங்களை தாங்கள் தொலைத்து விட்டதாக வங்கியின் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அசல் ஆவணங்களுக்கு பதிலாக பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின்  ஆவண நகலை பெற்று தருவதால் ஆவணம் தொலைக்கப்பட்டு விட்டது என்பதற்கு என்பதை ஈடு செய்ய முடியாது என்றும் ஆவணங்களை இழப்பது ஒரு சிறிய மற்றும் அற்பமான விஷயம் அல்ல என்றும் அடமானமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கக் கூடிய பாதுகாவலர் என்ற முறையில் வங்கி அசல் ஆவணங்களை தொலைத்ததற்கு முழு பொறுப்பு வங்கிதான் என்றும் வங்கியின் இத்தகைய செயல் சேவை குறைபாடு என்றும் தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கியின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்துவிட்ட உத்தரவிட்ட தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்திரவிட்டது. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுப்படி நுகர்வோருக்கு  வங்கியானது ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடாகவும் வங்கிக்கு எதிராக   2017 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சத்துக்கு ஆண்டொன்றுக்கு 12 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என்று வங்கிக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ள

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்