spot_img
September 25, 2025, 2:38 am
spot_img

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் பாதுகாப்பில் ஊழலை அகற்றவும் முடியும். லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகர்வோர் சங்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் எஸ். சுதா அவர்கள் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக மட்டுமே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் உரிமைகளை பாதிக்கும் ஊழல்களை தடுக்கவும் இயலும் என்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார். மேலும், அவர் பேசியதாவது.

ஒவ்வொரு மனிதரும் பிறந்தது முதல் இறப்பு வரை ஏதாவது வகையில் நுகர்வோராகவே இருக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர். அதே சமயத்தில் நுகர்வோர் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சிக்கு இணையான அம்சமான மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு அவசியமானதாகும்

இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பாதிக்கப்படும் நூறு நுகர்வோர்களில் ஐந்து நுகர்வோர் மட்டுமே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உற்பத்தியாளர், விற்பனையாளர், சேவை புரிபவர் மீது வழக்கு தாக்கல் செய்வதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், பணம் கொடுத்து பொருளை அல்லது சேவையை வாங்கும் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகாமல் இருப்பதற்கான காரணம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருப்பதே காரணமாகும் என்று ராமராஜ் தெரிவித்தார்.

நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு சென்றால் நேரம் மற்றும் பணம் செலவாவதோடு வழக்கு முடிய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களில் ரூபாய் 5 லட்சம் வரை நிவாரணம் கேட்பதற்கு எவ்வித நீதிமன்ற கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ரூபாய் 5 லட்சத்துக்கு மேலாக நிவாரணம் நிவாரணம் கேட்கும் போதும் பெயரளவிலான கட்டணமே நீதிமன்ற கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நுகர்வோர் தாக்கல் செய்யும் புகார்களை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜ் பேசினார்  

2019 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதிக வழக்குகளை விரைவில் விசாரித்து முடித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர், விற்பனையாளர், மற்றும் சேவை புரிவோரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நுகர்வோரும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும் வகையில் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவ நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ராமராஜ்  கேட்டுக் கொண்டார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிகளில் மாணவ நுகர்வோர் சங்கங்கள் திறம்பட செயல்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவ நுகர்வோர் சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பேரூராட்சிகளிலும் நகரங்களிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பாகவும் நுகர்வோர் உரிமைகள் குறித்தும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் எங்கு எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பலகையை உள்ளாட்சி அமைப்புகள் நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்

இணையதளம் மூலமாக வணிகம் அதிகரித்துள்ள நிலையில் இணையதளங்களில் இருண்ட வணிக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன இதனால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுவதை விழிப்புணர்வின் மூலமாகவே தடுக்க முடியும்.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் பாதுகாப்பில் ஊழலை அகற்றவும் முடியும் என்று ராமராஜ் தெரிவித்தார்.

முன்னதாக பேராசிரியர் சண்முகம் வரவேற்புரை  ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் விழிப்புணர்வும் நுகர்வோர் பாதுகாப்பும் இணையான இரு கோடுகள். இதன் மூலமே மக்களிடம் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்