25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து முதல் பரிசாக ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.
அதில்_ஒரு_தம்பதியினரில் மனைவி ”அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க” என்ற படி கணவரிடம் சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில்..போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள்,, கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலையே சொன்னார்கள்!
அதில்_ஒரு_தம்பதி சொன்ன பதில்கள்,, அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது. அவர்கள்_தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு_மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும், மிகக் குறைவாக பூஜ்ஜியம்_மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.
பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை. வரும்_போதே_சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள். ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.
எத்தனை குழந்தைகள் என்றதற்கு.? இரண்டு என்றார்கள்,, திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு..? 35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், அவமானம்_தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.
போட்டியின்_நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ_மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்…எல்லாவித மனப் பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. எந்த_ஒரு_மன_ஒற்றுமையும்_புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே, இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.
இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையிலும் தன் கணவனை/மனைவியை விட்டு பிரியாத இதுவும் ஒரு வகையான அன்புதான்.
இரண்டாவது பரிசு மற்றொரு தம்பதிக்கு வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் ஆனவுடன் தேனிலவுக்கு சிம்லா சென்றுள்ளார்கள். அங்கு குதிரையில் செல்ல விருப்பப்பட்டு குதிரையில் மனைவி ஏறியுள்ளார் குதிரை கீழே தள்ளிவிட்டது ஃபர்ஸ்ட் வார்னிங் என்று குதிரையைப் பார்த்து கத்தியுள்ளார். இரண்டாவது முறையும் குதிரை கீழே தள்ளி விட்டது. லாஸ்ட் வார்னிங் என்று குதிரையை பார்த்து கத்தியுள்ளார். மூன்றாவது முறையும் குதிரை கீழே தள்ளிவிட்டது உடனே கையில் இருந்த துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார்.
தேனிலவு முடிந்து வந்த பின்னர் சில நாட்களில் ஏதோ ஒரு பிரச்சனைக்கு கணவரை பார்த்து ஃபர்ஸ்ட் வார்னிங் என்று மனைவி கூறியுள்ளார். சில நாட்களில் மற்றொரு பிரச்சனைக்கு லாஸ்ட் வார்னிங் என்று கணவரிடம் மனைவி தெரிவித்துள்ளார். அடுத்த வார்னிங் வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்ட கணவர் அடுத்த வார்னிங் வராமல் தற்போது வரை மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு தான் ஒற்றுமையான தம்பதிகள் என்று இரண்டாவது பரிசு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறு தாங்கள் இருவரும் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் காரணமாக ஒரு தம்பதிக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. திருமணம் ஆனவுடன் நான் என் கணவரிடம் பேசி வேலைகளை பாகப்பிரிவினை செய்து கொண்டோம். அதன்படி பெரிய விஷயங்களை கணவர் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முடிவு செய்யப்பட்டது. வேலை பிரிவினைப்படி சரியாக வாழ்வதால் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார் மனைவி. சின்ன விஷயம் என்றால் என்ன? பெரிய விஷயம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மனைவி அளித்த பதில் இன்னும் ஆச்சரியமூட்டியது. வரும் வருமானத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விட வேண்டும். செலவு செய்வது, வீட்டில் சமையல் செய்வது, சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்வது போன்ற சின்ன விஷயங்கள் குறித்து நான் முடிவு செய்து கொள்வேன். இலங்கை பிரச்சனை, பாகிஸ்தான் பிரச்சனை, இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகள் போன்ற தேச அளவிலான பெரிய விஷயங்களை என் கணவர் கூறும் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்வேன் என்றார் அவர்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நாட்டின் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு தம்பதியும் புரிதலுடன் வாழ வேண்டும் என்பதே நுகர்வோர் பூங்காவின் கருத்தாக உள்ளது
அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது!
‘‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டான். அவனுக்கு கடனாகப் பணம் கொடுத்தவன் கொடுமையானவன். பல தடவை வணிகன், தவணை சொன்னான். இதனால் கோபம் அடைந்த பணம் கொடுத்தவன், வணிகனின் வீட்டுக்குத் திடீரென்று ஒருநாள் சென்றுவிட்டான். அப்போது வணிகன் தன் ஒரே மகளுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
தோட்டத்தின் நடைபாதையில் கூழாங்கற்கள் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆங்காங்கே கிடந்தன. உள்ளே நுழைந்த பணம் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து மரியாதை இல்லாமல் கத்தினான். ‘உடனே கடனைத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்’ என்று மிரட்டினான். அதைக் கண்டு வணிகன் பயந்து நடுங்கினான். அது, மன்னர் ஆட்சிக் காலம். ஆகவே, கடன் கொடுத்தவன் மன்னரிடம் புகார் செய்தால் கடன் வாங்கியவனுக்குத் தண்டனை நிச்சயம்.
இந்தநிலையில், வணிகனுக்கோ வயது 70. அவனால், சிறைக்குப் போகவும் முடியாது; போனால், அவன் மகளைக் காப்பாற்றவும் யாருமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தான். அப்போது, பணம் கொடுத்தவனின் பார்வை வணிகனின் மகள் மீது விழுந்தது.
அழகின் வடிவமாக இருந்த அவளைப் பார்த்த பின்பு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், பணம் கொடுத்தான். பிறகு, வணிகனைப் பார்த்து அவன் கூறினான். ‘வணிகனே… நான் சொல்வதைக் கேள். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் ஓர் ஏற்பாட்டுக்கு நீ சம்மதிக்க வேண்டும். நான், ஒரு பையில் இங்கே கீழே கிடக்கும் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றையும், வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றையும் போடுவேன். அதிலிருந்து, உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் கல், வெள்ளை நிறக் கல்லாய் இருந்தால்… நீ கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.
அதன்பிறகு நான் உன்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், கறுப்பு நிறக் கல்லாய் இருந்தால்… உன் மகளை எனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும். இதற்குச் சம்மதமா?’ என்று வணிகனைக் கேட்டான்.
வணிகனுக்கு வேறு வழி தெரியவில்லை. பின்னர், தயங்கி… தயங்கி ‘சரி’ என்றான். கீழே தரையில் கிடந்த இரண்டு நிறக் கற்களையும் எடுத்து பைக்குள் போட்டான். ஆனால், திருட்டுத்தனமாக இரண்டு கறுப்பு நிறக் கற்களையும் பைக்குள் போட்டுவிட்டான். வணிகன், இதை கவனிக்கவில்லை. ஆனால், வணிகன் மகள் இதை கவனித்துவிட்டாள். பை, அவள் முன் கொண்டு வரப்பட்டது. உள்ளே இருக்கும் இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள். அவற்றில் அவள், எதை எடுத்தாலும் பணம் கொடுத்தவனை கல்யாணம் செய்தே ஆக வேண்டும். தந்தையோ கண்ணீர் சிந்தியபடி நிற்க…
பணம் கொடுத்தவனின் மோசடித்தனத்தை எப்படிச் சொல்வது? அப்படியே உண்மையைச் சொன்னாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
இந்தச் சவாலை எப்படிச் சந்திப்பது என்ற முடிவோடு வணிகன் மகள் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒரு கல்லை வெளியே எடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லை நழுவவிட்டாள்.
கல் விரைந்து ஓடிப்போய் கற்குவியலோடு சேர்ந்துகொண்டது. வணிகன் மகள் கல்லை நழுவவிட்டதற்காக… பணம் கொடுத்தவனிடம் வருத்தம் தெரிவித்தாள். பிறகு அவனிடம், ‘இப்போது பையில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல், கறுப்பு நிறமாக இருந்தால்… நான் எடுத்தது வெள்ளை நிறக் கல். அப்படியென்றால், நாங்கள் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. நான், உங்களை மணம் புரியவும் அவசியம் இல்லை. கல், வெள்ளை நிறமாக இருந்தால்… நான் எடுத்தது கறுப்பு நிறக் கல். அப்படி என்றால், நான் உங்களை மணந்துகொள்ளத்தான் வேண்டும். ஆகவே, பையில் என்ன நிறக் கல் இருக்கிறது என்று பார்க்கலாமா’ என்று கேட்டாள் வணிகனின் மகள்.
திணறிப் போனான் பணம் கொடுத்தவன். எடுத்த கல் போக பைக்குள்ளே இருக்கும் ஒரு கல், கறுப்பு நிறக் கல்லாகவே இருக்கும். அவன் போட்ட இரண்டு கற்களும் கறுப்பு நிறக் கற்கள்தானே? அப்படியென்றால், அந்தப் பெண் எடுத்த கல் வெள்ளை நிறம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம் கொடுத்தவனின் தந்திரம் பலிக்கவில்லை. இதனால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டான்.
மகள், வெற்றிப் புன்னகை பூத்தாள். இந்தக் கதை எதனைக் காட்டுகிறது… இதிலிருந்து என்ன தெரிகிறது? அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது. எப்படிப்பட்டவரும் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும்கூட பெண்கள் அதை வென்றுவிடுவார்கள்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் மட்டுமே. வாய்ப்பு மட்டும் கிடைத்து விடுமேயானால் பெண்கள் எந்தத் துறையிலும் வெல்வார்கள். ஆண்களுக்கு சமமாக… ஏன்? ஆண்களைவிடவும் அதிகம் வெற்றி பெற முடியும்.
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here! |