கலப்பட பாலை (adulterated milk) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். செயற்கை பாலை (synthetic milk) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆய்வகத்தில் (லேப்) உற்பத்தி செய்யப்படும் பாலைப் (lab milk) பற்றி கேள்விப்பட்டு உள்ளோமா?
உத்திர பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் என்ற கிராமத்தில் செயற்கை பால் உற்பத்தி செய்யப்படுவதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Fassi) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கடந்த வாரத்தில் கிடைத்துள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன்னர் புலந்த்ஷாஹரில் அகர்வால் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை உணவு பாதுகாப்ப அதிகாரிகள் சோதனையிட்டனர் (ரெய்டு).
அகர்வால் ட்ரேடர்ஸ் உரிமையாளரான அகர்வால் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக செயற்கை பாலை தயாரித்து புலந்த்ஷாஹர் கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர்கள் பால் விற்பனையையும் செயற்கை பால் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பன்னீர் விற்பனையையும் செய்து வந்துள்ளது சோதனையின் போது அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கடையில் சோதனை நடந்த அதே நேரத்தில் அகர்வாலுக்கு சொந்தமான நான்கு குடோன்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனையின் போது குடோன்களில் செயற்கை பாலை தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட காஸ்டிக் பொட்டாஷ் ரசாயனங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட ரசாயன பொருட்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உபயோகத்துக்கு தகுதியற்றது என காலாவதியானவை ஆகும். இந்த குடோன்களில் மோர் பவுடர், சர்பிடால், பால் பெர்மீட் பவுடர், சுத்திகரிக்கப்பட்ட சோயா கொழுப்புகள் ஆகியனவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் ரசாயன கலவையின் மூலம் 500 லிட்டர் செயற்கை பாலை அகர்வால் உற்பத்தி செய்து வந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அசல் பாலின் சுவையை தருவதற்காக சர்பிடால் என்ற ரசாயனமும் சோயா கொழுப்பு போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு சொட்டு அசல் பால் கூட இல்லாமல் ரசாயன மூலம் செயற்கையாக பாலை தயாரிக்கும் முறையை வேறு சில நபர்களுக்கும் அகர்வால் வழங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செயற்கை பாலை தயாரிக்க அகர்வால் பயன்படுத்திய முறையை (formula) தற்போது வரை விசாரணையில் அகர்வால் அதிகாரிகளிடம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், ஒரு சொட்டு அசல் பால் கூட இல்லாமல் ரசாயன மூலம் செயற்கையாக பாலை தயாரிக்கும் முறையை வேறு சில நபர்களுக்கும் அகர்வால் வழங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் அகர்வால் தயாரித்த செயற்கை பால் மற்றும் பால் பொருட்கள் எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது? என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர் மட்டுமா? இவருக்கு பின்னால் பெரிய கூட்டம் உள்ளதா? ஒரு சொட்டு பால் இல்லாமல் செயற்கை பாலை தயாரிக்கும் முறை எங்கெங்கு பரவியுள்ளது? என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கடமை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு உண்டு. பால் என நினைத்து பணம் கொடுத்து இரசாயனத்தை வாங்கி சாப்பிட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். பாலில் தண்ணீரை கலப்படம் செய்வதையும் பாலை தரும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன பொருட்களை கலப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது செயற்கை பால் என்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பால் இயற்கையானதா? தூய்மையானதா? தர விதிகளின்படி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறதா? என்பதை போர்க்கால அடிப்படையில் சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையல்ல.
இயற்கையாகவே பசுவின் பாலில் சேரும் பாலூட்டி ஸ்டெம் செல்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவைச் சேர்த்து, அதை மரபணு மாற்றப்பட்ட ஈஸ்டில் செருகுவதன் மூலம் ஆய்வகப் பால் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய ஆய்வக பாலும் விரைவிலேயே விற்பனைக்கு அங்கீகரிக்கப்படலாம் என தெரிகிறது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: இந்தப் பிரச்சினையில் ஒருவரை கைது செய்வதோடு விசாரணையை முடித்துக் கொண்டு விடக்கூடாது நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலின் தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு பாதுகாப்பான பால் கிடைக்க உறுதியான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா? விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரிப்பு – காரணம் என்ன? தங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் 13 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் பூங்கா இதழில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். தங்களது கருத்துக்களுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். |
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories)