spot_img
March 12, 2025, 4:42 pm
spot_img

வருகிறது வழக்கறிஞர்கள் திருத்த சட்டம்! வந்த பின்பு போராடாதீர்கள்! விபத்தில் காலை இழந்தும் சாதித்துக் காட்டிய தனோவா!  – உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி

இந்தக் கட்டுரையின் ஆசிரியரும் பூங்கா இதழ் ஆசிரியருமான நா சின்னச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். 

“இன்று காலை ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 200 மீட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. 

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன். சில நிமிடங்களுக்கு பிறகு எங்களுக்கு 20 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரை கடந்தும் விட்டேன். எனக்குள் “அவரை கடந்து விட்டேன்”, என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு  நான் அவருடன் போட்டி போட்டது கூட தெரியாது.

நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை. 1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை. 2. என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன். 3. என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன். 4. தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2, 3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும். அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால், நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள். சிலர் தங்கள் கவனத்தை, அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? எங்கே செல்கின்றார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள். கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள். மற்றவரை கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்” என்றார் நுகர்வோர் சாமி. 

“என்ன சாமி, தத்துவம் பலமாக இருக்கிறது. செய்திகளை கேட்டால் தத்துவத்தை சொல்கிறீர்கள்” என்றேன் நான். அதனை கவனிக்காதது போல் பேசத் தொடங்கினார் நுகர்வோர் சாமி.

“கடந்த 2010 ஆகஸ்ட் 17 அன்று, சண்டிகாரில் இருந்து தாது மஜ்ரா செல்வதற்காக நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் 16 வயது மாணவரான ஹர்மன் சிங் தனோவா. சாலையில் தவறான பக்கத்தில் அதிவேகமாக வந்தது ஒரு ட்ரக் (லாரி). கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவன் விபத்துக்குள்ளானான் (accident). அவனது வாழ்க்கையே மாறிப்போனது உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் (bone fractures). சண்டிகாரில் உள்ள கமெண்ட் மருத்துவமனையில் 173 நாட்கள் சிகிச்சை பெற்றார் சிகிச்சை முடிந்து வெளியில் வரும் போது டாக்டர்கள் சொன்னது வாழ்க்கை முழுவதும் இவருக்கு ஒருவர் உதவிக்காக (Attendant) இருக்க வேண்டும் என்பதுதான் வேதனையான விஷயம்.

தற்போதும் ஊனமுற்றவராக (permanent disability) 40 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தனோவா. ஆனால் சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டை (compensation) வழங்கவில்லை. இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் கடந்த 2013 அக்டோபர் மாதத்தில் அவருக்கு இழப்பீடாக ரூ 7,62,000/- வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் லாரிக்கு இன்சூரன்ஸ் வழங்கியிருந்த நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு (insurance company) உத்தரவிட்டது. ஆனால், அந்த கம்பெனி, பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

விபத்தால் இடது காலை இழந்து பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தனோவாவுக்கு உயர் நீதிமன்றத்திலும் துரதிஷ்டம் காத்திருந்தது. அவரது வழக்கு கோப்பு உட்பட பல தீ விபத்தால் (fire accident) நாசமானது பின்னர் புதிய கோப்பு (file) தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பின்பு சில நாட்களுக்கு முன்பு அவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு (victim of motor accident) நீதி வழங்குவதில் சட்ட அமைப்பு தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.31 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தனோவா? விபத்தால் உடல் ஊனமுற்றவராக மாறினாலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்விலேயே வெற்றி பெற்று ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவ்வாறு பணியாற்றிக் கொண்டே இன்ஜினியரிங்கில் பட்டமும் படித்து முடித்து விட்டார். ஆனால், திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையில் வலிகள் ஓயவில்லை. தற்போது சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்றார் நுகர்வோர் சாமி.

“வழக்கறிஞர்கள் சட்டம் 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில் வழக்கறிஞர்கள்  திருத்தச் சட்டம், 2025 கொண்டு வரப்பட உள்ளது. இதன் வரைவு நகலை மத்திய சட்ட அமைச்சகத்தின் இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மீதான கருத்துக்களை பொதுமக்களும் வழக்கறிஞர்களும் வழக்கறிஞர் சங்கங்களும் இம்மாத இறுதிவரை தெரிவிக்கலாம். வழக்கறிஞர்கள் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சட்ட தொழில் கம்பெனிகளையும் இந்தியாவில் பணிபுரிய  அனுமதிக்கும் அதிகாரம் பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது.  சட்ட திருத்தம் வந்த பின்பு போராட்டங்களை முன்னெடுப்பதை விட  உடனடியாக திருத்த சட்டத்தின் மீதான கருத்துக்களை வழக்கறிஞர்கள் சங்கங்கள் தெரிவிப்பதே சரியானது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. 

“ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் கதையை சொல்லி உள்ளார் நுகர்வோர் சாமி. தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக் கூடாது என்றும் கூறுகிறார். விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துரைக்கிறார் நுகர்வோர் சாமி.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்