நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் “நுகர்வோர் பூங்கா” படியுங்கள்!   ●   செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்!   ●   கட்டணமில்லாமல் படிக்க பொதுத்தளமாக வெளியிடப்படும் “பூங்கா இதழ்” மற்றும் “நுகர்வோர் பூங்கா” - இணையதள இதழ்களுக்கு ஆதரவு தாருங்கள்! விவரங்களுக்கு “நாங்கள்” பகுதியை படியுங்கள்!
spot_img
February 27, 2026, 7:29 am
spot_img

வாக்காளரியலின் தந்தை திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவர் என்பது தமிழகத்துக்கு பெருமை – கல்லூரி முதல்வர் பெருமிதம்

அரசியலமைப்பு, வாக்காளரியல் கல்வியை படிப்பதும் பரப்புவதும் அனைவரின் கடமையாகும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து

அரசியலமைப்பை அறிவோம்! வாக்காளரியலை பரப்புவோம்! என்ற தலைப்பில் ஒட்டன்சத்திரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. 1996- ல் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து வாக்காளரியல் எதற்காக தனி கல்வி பிரிவாக கற்பிக்கப்பட வேண்டும்? என்பதற்கான பத்து காரணங்களுடன் பத்து வாக்காளரியல் கோட்பாடுகளையும் கற்றலுக்கான பத்து பாட பிரிவுகளையும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ்.  வகுத்துள்ளார் என கல்லூரி முதல்வர் பிரேமா பேசினார் 

கூகுளில் ஓட்டராலஜி ராமராஜ் (Voterology Ramaraj) எனத் தேடினால் அவர் வாக்காளரியலின் தந்தை என கூகுள் மட்டுமல்லாது   இணையதளங்களும் செயற்கை நுண்ணறிவு தளங்களும் தெரிவிக்கின்றன. பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களின் பெயர்களையே நாம் படிக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த கணக்கன்பட்டி ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும் என கருத்தரங்கில் பேசிய அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே ஒட்டன்சத்திரம் வட்டத்தில்தான் அருகாமையில் பெரிய நகரங்கள் எதுவும் இல்லாத ஒரு கிராமத்தில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் பல்வேறு தலைப்புகளில் நடத்துவது மாணவர்களின் அறிவை திறனை மேம்படுத்தும். நாடு எப்படி ஆட்சி செய்யப்படுகிறது? என்பதை அறிந்து கொள்ள நாட்டின் அரசியலமைப்பை ஒவ்வொருவரும் படிப்பது அவசியமானதாகும் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு லோக்ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேசினார்.

வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் பற்றிய முறையான, அறிவியல்பூர்வமான கற்றல் மற்றும் ஆய்வு செய்தலே “வாக்காளரியல்” ஆகும் ஜனநாயக நிறுவனங்களின் மதிப்புகள் மற்றும் தரங்களைப் பாதுகாப்பதிலும், உண்மையான ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் உலகளாவிய அமைதியை உறுதி செய்வதிலும், வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளிலும் “வாக்காளரியல்” கவனம் செலுத்துகிறது. வாக்காளரே அனைவருக்கும் மேலானவர் என்பது உள்ளிட்ட வாக்காளரியல் கொள்கைகளை பரப்புவதே வாக்காளரிலிசம் என டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். 

அரசியலமைப்புக் கல்வியும் வாக்காளரியல் கல்வியும் நல்லாட்சியும் அமைதியையும் வழங்கும் கருவிகள் ஆகும். தனி கல்வி பிரிவாக எந்த பல்கலைக்கழகங்களிலும் வாக்காளரியல் போதிக்கப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டங்கள் கற்பிக்கப்பட வேண்டும் இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வுத்தாளாக அரசியலமைப்பு கல்வியும் வாக்காளரியல் கல்வியும் இருக்க வேண்டும். இத்தகைய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்த இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார். 

கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு திருத்தங்கள் மூலமாகவும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவும் இந்திய அரசியலமைப்பு சிறந்த வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை பண்புகளை பாதுகாக்கவும் அரசியலமைப்பு கல்வியை படிப்பதும் பரப்புவதும் அனைவரின் கடமையாகும்.  என்று மாணவர்களை டாக்டர் வீ. ராமராஜ் கேட்டுக்கொண்டார். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

Courtesy: Dinakaran
Courtesy: Tamil Murusu
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்