spot_img
March 12, 2025, 9:27 pm
spot_img

இட்லி சாப்பிட கடைக்கு போறீங்களா? உஷார்! வாட்டர் பாட்டிலுக்கு ரூ ஒன்பது கூடுதல் வசூல் செய்த ஓட்டலுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம்!  – உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி

இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். 

“தெலுங்கானா மாநிலத்தில் காக்கிநாடாவில் (Kakinada) கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் கோவ்வாடா. இவர் ஹைதராபாத்துக்கு (Hyderabad) சென்றிருந்தபோது ஹோட்டல் டூலிப்ஸ் கிராண்ட்-ல் மூன்று ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்கள் (water bottle) மூன்று வாங்கி உள்ளார். அதன் விலை ஒவ்வொன்றும் ரூ 20/- மட்டுமே. ஆனால், ரூ 60/- வசூலிக்க வேண்டிய ஹோட்டல் நிர்வாகம் அவரிடம் ஒவ்வொரு பாட்டலுக்கும் ரூ 9/- ஒன்பது அதிகமாக (excessive price) மொத்தம் ரூ  87/- வசூலித்துள்ளது. 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் காக்கிநாடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (district consumer court) ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு அனைத்தையும் அனுப்பியும் ஹோட்டல் நிர்வாகம் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்கவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியத்தையும் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு காக்கிநாடா நுகர்வோர் நீதிமன்றம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாட்டர் பாட்டலுக்கு ரூபாய் மூன்று கூடுதலாக வசூலித்த ஹோட்டல் நிர்வாகம் வாடிக்கையாளருக்கு ரூ 25,000/- இழப்பீடும் (compensation) தெலுங்கானா மாநில முதலமைச்சர் நிதிக்கு CM’s relief fund) ரூபாய் 25 லட்சமும் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் உள்ள காகிநாடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. 

“ஹைதராபாத்தில் வாட்டர் பாட்டில் வாங்கியதற்கு காக்கிநாடாவில் எப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியும் சாமி” என்றேன் நான். “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி பொருளை வாங்கிய இடத்திலும் வழக்கு தாக்கல் செய்யலாம் அல்லது வாடிக்கையாளர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யலாம்” எனக் கூறிவிட்டு அடுத்த செய்தியை கூறத் தொடங்கினார் நுகர்வோர் சாமி.

“கர்நாடக மாநிலத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் (Food safety officers) இட்லி விற்பனை செய்யும் 254 கடைகளில் சமீபத்தில் சோதனை (raid) நடத்தப்பட்டது. இதில் 51 கடைகளில் இட்லி பாத்திரத்தில் துணியை வைத்து அதன் மீது இட்லி (idly) மாவை ஊற்றி இட்லி தயாரிப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்துள்ளனர். இத்தகைய முறையில்   தயாரிக்கப்படும் இட்லி உண்பதால் கேன்சர் (cancer) வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதைப்போலவே தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் பிளாஸ்டிக் பேப்பரை இட்லி தட்டில் பயன்படுத்தி இட்லி தயாரிப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக தகுந்த சோதனைகளை நடத்த வேண்டும்” என்றார் நுகர்வோர் சாமி.

“ஏற்கனவே ரெடிமேடு இட்லி (readymade idly)  தொடர்பாக நுகர்வோர் பூங்காவில் கட்டுரை வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது சாமி” என்றேன் நான். எனது பதிலை கண்டும் காணாமல் அடுத்த செய்திக்கு தாவினார் நுகர்வோர் சாமி.

“நீதிமன்றம் முதல் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் அந்த தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா? என்பது மிக முக்கியமானதாகும். இந்த வகையில் தீர்ப்புகள் நிறைவேற்றப்படாததால் அதனை நிறைவேற்றித் தருமாறு உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை பல்லாயிரக்கணக்கான நிறைவேற்றுகை மனுக்கள் (execution petitions) நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை நிறைவேற்றி தருமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கீழ் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை நிலுவையில் ஆறு மாதங்களுக்கு மேலாக உள்ள நிறைவேற்றுகை மனுக்களின் விவரங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போலவே, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களிலும் பல வருடங்களாக நிறைவேற்றி மனுக்கள் நிறைவேற்றுகை மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதனையும் கொஞ்சம் உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.

“நீதிமன்றங்கள் சொன்ன தீர்ப்பை நிறைவேற்றாமல் இருந்தால் நுகர்வோர் என்ன செய்வார்கள்? சாமி” என்றேன் நான். 

“மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் உரை தீர்மானம் குறைதீர் ஆணையம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி உரிய சம்பளமும் இதர படிகளும் (salary and allowances) வழங்கப்படுவதில்லை என்பது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அடங்கிய இந்த வழக்கு  கடந்த வாரம் விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

அமலில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர்   குறைதீர் ஆணையம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் படிகளை வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழங்க தவறினால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution of India) கோட்பாடு 142 -ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்போம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து இந்த வழக்கானது வரும் ஏப்ரல் எட்டாம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது”

“மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மாநில அரசின் துணை செயலாளர் சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் அவர்களுக்கு துணைச் செயலாளருக்கு வழங்கப்படும் படிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்று தெரிகிறது சாமி. அதனையும் மாநில அரசுகள் வழங்குவது அவசியம்.” என்றேன் நான். 

“மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர்களுக்கு மாவட்ட நீதிபதி சூப்பர் டைம் ஸ்கேல்படி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கிறது. இந்த சம்பளத்தை வட இந்தியாவில் சில மாநிலங்கள் வழங்குவதில்லை என தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இவர்களுக்கு மாவட்ட நீதிபதி சூப்பர் டைம் ஸ்கேல்படி சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது நீதித்துறை சம்பள கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதன்படி அருகாமையில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்திலும் வேறொரு மாநிலத்திலும் சம்பளம் வழங்கப்படுகிறது ஆனால், தமிழகத்திலும் அருகாமையில் உள்ள ஓரிரு மாநிலங்களிலும் இரண்டாவது நீதித்துறை சம்பள கமிஷனின் பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் பணியாற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிபதிகளுக்கு இரண்டாவது நீதித்துறை சம்பள கமிஷனின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. 

“ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி (Nugarvor samy)” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: ரெடிமேட் இட்லி, பிளாஸ்டிக் இட்லி என வகை வகையாக தென்னிந்திய மக்களின் பிடித்தமான உணவான இட்லி  விற்பனையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தக்க முறையில் நடவடிக்கையை எடுத்து மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்