நுகர்வோர் நீதிமன்றத்தில் எட்டு வருட வழக்கு 8 நாளில் தீர்வு: வாடிக்கையாளர்களுக்கு ரூ 6,12,896/- மற்றும் எட்டு வருட வட்டியை வழங்க கூட்டுறவு சங்கம் ஒப்புதல்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அளவாய்பட்டி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகன்கள் நவீன் குமார் (34), பிரவீன் குமார் (32). இவர்கள் இருவரும் மைனராக இருந்தபோது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 18 ஆயிரத்தை கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முருகேசனின் தந்தை கருப்பண கவுண்டர் அளவாய் பட்டியில் விநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்துள்ளார்.
டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு 15 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 3,06,448/- ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் வழங்குவதாக கூட்டுறவு சங்கம் டெபாசிட் சான்றிதழை வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு கருப்பண கவுண்டர் இறந்துவிட்டார். நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் 18 வயது நிறைவடைந்த நிலையில் டெபாசிட் காலம் முடிவடைந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தை அணுகி பணத்தை கேட்டுள்ளார்கள். ஆனால், 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஏழு சதவீத வட்டி வழங்க உத்தரவு இருப்பதால் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஏழு சதவீத வட்டி மட்டுமே வழங்குவோம் என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் பிரவீன் குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் மீது தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்கம் ஆஜராகாததால் ஒருதலை பட்ச தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கூட்டுறவு சங்கம் சார்பில் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் வழக்குகளை 2025 ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மூன்று மாதத்தில் தீர்ப்பு வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு மாநில நுகர்வோர் ஆணையம் இரண்டு வழக்குகளையும் அனுப்பி வைத்தது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜனவரி 20, 24, 27 ஆகிய மூன்று தினங்களில் சாட்சிகளை விசாரித்து இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ் தலைமையில் ஜனவரி 28 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டெபாசிட் சான்றிதழில் உள்ளவாறு ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3,06,448/- வழங்கவும் டெபாசிட் முதிர்ச்சி அடைந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ரூ 3,06,448/- க்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறு சதவீத வட்டி வழங்கவும் கூட்டுறவு சங்கம் ஒப்புக்கொண்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்ட நாளில் இருந்து எட்டு நாட்களுக்குள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையையும் முடித்து சமரச பேச்சுவார்த்தை மூலம் வழக்கு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் 2025 பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் முதிர்ச்சி தொகையும் அதன் பிந்தைய வட்டியையும் நவீன் குமாருக்கும் பிரவீன் குமாருக்கும் கூட்டுறவு சங்கம் வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ் தலைமையிலான அமர்வு (2025 பிப்ரவரி 04- ல்) உத்தரவிட்டது.
புத்திசாலிகள் வாதங்களில் ஈடுபட மாட்டார்கள்! தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நிமிட கதை
வாழ்க்கையில் குடும்பத்தில் ஆகட்டும், பொதுத் தளங்களிலாகட்டும், “தான்” என்ற ஈகோவைத். தலையிலே தூக்கி வைத்துக் கொண்டால். சச்சரவும் ,மனக் கிலேசமுமே தலை தூக்கி நிற்கும்! பிரச்சனைகள் வருகின்ற பொழுது காது கொடுத்துக் கேட்டு சிக்கல்களை உள்வாங்கி சிந்தித்து செயல் பட்டால் சரியான தீர்வு மலரும் !
பொதுவாக புத்திசாலிகள் வாதங்களில் ஈடுபட வே மாட்டார்கள். யாராவது ஒருவர் துணிச்சலாக ஹிட்லரிடம் சென்று, நீங்கள் ஏன் இத்தனை பேர்களை கொன்று குவித்தீர்கள் ?எனக் கேட்டால் அதற்கு அவர் தெளிவான விளக்கம் வைத்திருப்பார்! மேலும் அவர் நல்லவர் என்று விளக்க மும் அளிப்பார்,
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
அதே போல பின்லேடனிடம் சென்று ஏன் தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்தீர் எனக் கேட்டால். அதற்கு அவரும் சரியான விளக்கம் வைத்திருப்பார். அது மட்டுமல்ல அவர் நல்லவர் என்றும் உலகிற்கு நன்மையே செய்கிறார் என்றும் கூறுவார் !
ஹிட்லரும் சரி, பின் லேடனும் சரி, எப்பேர்ப் பட்ட கொலைகாரர்களாக இருந்தாலும் தாங்கள் செய்தது சரி என்பதற்கான ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள் ! அதே போலத்தான் நாம் எவ்வளவுதான் தரவுகளுடன் வாதிட்டாலும் கடினமானவராக இருந்தாலும் சரி, மென்மையானவராக இருந்தாலும் சரி, அறிவாளியாக இருந்தாலும் சரி, முட்டாளாக இருந்தாலும் சரி, அவர்கள் “தான்” சரி என்பதில் பிடிவாதமாகத்தான் இருப்பார்கள்.
எப்படியோ வாதத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்! அப்போது கூட உங்களை விட மாட்டார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் செய்த தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி உங்களை குறை கூறுவார்கள் .
புத்திசாலிகள் வாதங்களில் ஈடுபட மாட்டார்கள்! பிரச்சனைகள் உருவாகின்ற பொழுது வாதங்களைத் தவிர்த்து சிக்கல் முடிச்சுகளை அவிழ்த்து ஏற்புடைய தீர்வை வென்றெடுக்க முயல வேண்டும்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: சமரசத் தீர்வு எப்போதும் பல நன்மைகளைக் கொண்டது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.