அஸ்ஸாமில் வசித்து வரும் பல்லப் பௌமிக் என்பவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஆதித்யா பிர்லா வணிக நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படும் லூயிஸ் பிலிப் ஆடை விற்பனை இணையதளத்தில் ஒரு ஆடையை தேர்ந்தெடுத்து அதற்காக ரூ 4,000/- நெட் பேங்கிங் மூலமாக அந்த நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளார். வாங்கிய ஆடையில் திருப்தி அடையாததால் அதனை அவர் திருப்பி அனுப்பி விட்டார்.
இந்நிலையில் செலுத்திய பணத்தை பெறுவதற்கு ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் முயற்சித்த போது, பிலிப் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவு அலுவலர் என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பல்லப் பௌமிக்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது பணத்தை திரும்ப பெற ஒரு குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மோசடி நபர் பௌமிக்கிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பௌமிக் குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து முடித்ததும் அவரது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் இருந்த ரூ 94,204/- பெடரல் வங்கியில் ஒரு மோசடியாளரின் கணக்குக்கு மாற்றப்பட்டு விட்டது. சில நிமிடங்களில் பெடரல் வங்கியில் இருந்து அந்த பணமானது ஜுபிட்டர் நியோ சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்பட்டு இணைய வழியில் செயல்படும் பல பேமென்ட் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு விட்டது.
தமது கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொண்ட பௌமிக் உடனடியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சினையை தெரிவித்துள்ளார். வங்கியின் தரப்பில் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் ஆன்லைன் பேங்கிங் உடனடியாக முடக்கப்பட்டது. பின்னர் அவர் ஜலுக்பரி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அஸ்ஸாம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவுக்கு மூன்று புகார்களை அளித்தார். உள்துறை அமைச்சகத்தின் தேசிய சைபர் கிரைம் அறிக்கை இணையதளத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இழந்த பணத்தைப் பெற வங்கி ஆம்பூட்ஸ்மேன் அமைப்பில் பௌமிக் புகார் செய்தபோது அதனை அந்த அமைப்பு தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பௌமிக் கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். எஸ்பிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கூகுள் பே மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ பரிந்துரைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கூகுள் பே போன்ற மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது ஏற்படும் இழப்புக்கு வாடிக்கையாளரே பொறுப்பு என்று நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!
வங்கியின் வாதத்தை நிராகரித்து, பாதிக்கப்பட்டவருக்கு இழந்த பணத்தை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனை எதிர்த்து வங்கியின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கௌஹாத்தி உயர்நீதிமன்ற அமர்வு வங்கியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் கௌஹாத்தி உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஜனவரி 2025 அன்று தீர்ப்பளித்துள்ளது.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
அங்கீகரிக்கப்படாத மற்றும் மோசடியான பரிவர்த்தனைகளை பொருத்தவரையில் வங்கி விழிப்புடன் இருக்க வேண்டும் தற்போது சிறந்த தொழில்நுட்பத்தை வங்கி கொண்டுள்ளதால் அங்கீகரிக்கப்படாத மற்றும் மோசடியான பரிவர்த்தங்களை தடுக்க இயலும் பாதிக்கப்பட்டவர் உடனடியாக வங்கியில் மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள் புகார் செய்துள்ளார் இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் கௌகாத்தி உயர் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு சரியானது என்றும் இத்தகைய மோசடிகளுக்கு வங்கி பொறுப்பாகும் என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வங்கியில் கணக்கு வைத்துள்ள பல கோடி மக்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது அதே வேளையில் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:
கூகுள் ப், பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் மற்ற இணையதளங்களில் பணப் பரிவர்த்தனை செய்யும் போதும் மக்களின் பணம் சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு கடுமையாக மேற்கொள்வது அவசியமானதாகும். இதைப்போலவே, மக்களும் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்க தகுந்த கவனத்துடன் செயல்படுவதும் அவசியமாகும்.
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) | |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) | |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் | |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon | |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) | |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் | |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் | |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் | |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் | |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் | |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் | |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம் | |
நாட்டு நடப்பு | பிரச்சனை |
தமிழகம் | சேவை குறைபாடு |
தேசம் | நியாயமற்ற வர்த்தகம் |
சர்வதேசம் | குறைபாடான பொருட்கள் |
சிறப்பு படைப்புகள் | கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் |
கருத்துரை | நியாயமற்ற ஒப்பந்தம் |
நேர்காணல் | அதிக விலை |
அறிவு பூங்கா | இருண்ட மாதிரி |
தவறான விளம்பரம் | |
பொது | |
சட்டம் | தீர்ப்புகள் |
நுகர்வோர் பாதுகாப்பு | வீட்டு உபயோகம் |
உணவு பாதுகாப்பு | உணவு |
அத்தியாவசிய பொருட்கள் | வீட்டு வசதி |
தரநிலைகள் | மருத்துவம்- மருந்துகள் |
மருத்துவ-மருந்து கட்டுப்பாடு | வங்கி/நிதி |
வங்கி-நிதி | காப்பீடு |
காப்பீடு | போக்குவரத்து |
சட்ட அளவியல் | அரசு |
பொது | பொது |
ஆய்வுகள் | நாங்கள் |
சந்தை ஆய்வு | எங்களைப் பற்றி |
புலனாய்வு | புரவலர்கள் |
திறனாய்வு | ஆதரிங்கள் |
சவால்கள் | பங்களியுங்கள் |
ஒப்பீடு | “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
ஆராய்ச்சி பூங்கா | |
கதம்பம் |