spot_img
January 7, 2025, 8:03 am
spot_img

நுகர்வோர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு மூலம் இன்சூரன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 12 லட்சம் இழப்பீடு

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ரூபாய் 12 லட்சம் வழங்க வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்புதல். இதன் விவரம் வருமாறு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் மனைவி கவிதா (53). இவரது மகன் சைலேஸ்வர் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் காரை ஓட்டிச் சென்றபோது பெருந்துறை அருகே விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த காருக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி) இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

மகனின் இறப்பிற்குப் பின்பு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கவிதா விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். அதிக வேகமாக ஓட்டிச் சென்றதால் கார் விபத்து உள்ளானதால் இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா கடந்த 2024 நவம்பர் மாதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)

இந்த வழக்கில் சமராச பேச்சுவார்த்தைக்காக வழக்கறிஞர் பி குமரேசனை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரச அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படையில் ஒரு மாத காலத்துக்குள்ளாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ 9.30,000/- வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் (02-01-2025) தீர்ப்பளித்துள்ளது.

இதை போலவே மற்றொரு வழக்கில், நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் வசித்து வரும் கே வி ராமசாமி மகன் கே ஆர் சுப்பிரமணியம் என்பவர் எல்ஐசி நிறுவனம் மீது தாக்கல் செய்திருந்த வழக்கில் சமராச பேச்சுவார்த்தைக்காக வழக்கறிஞர் ஆர். முரளி குமாரை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவிட்டார். சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்த கே. ஆர். சுப்பிரமணியத்துக்கு ரூ 2,83,336/- ஐ உடனடியாக (02-01-2025) பணம் (டிமாண்ட் டிராப்டாக) வழங்கப்பட்டது.

இன்று நான்நாளை நீ! – குட்டி கதை

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர்  இல்லத்தில் சேர்த்து விட்டார் அவரது மகன். மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். 

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.  வருடங்கள் பல கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். 

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “அம்மா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். இந்த முதியோர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக் கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. 

“பூங்கா இதழ்” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)
 
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்!  பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!  
 
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?
 
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு  

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புபிரச்சனை
தமிழகம்சேவை குறைபாடு
தேசம்நியாயமற்ற வர்த்தகம்
சர்வதேசம்குறைபாடான பொருட்கள்
சிறப்பு படைப்புகள்கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம்
கருத்துரைநியாயமற்ற ஒப்பந்தம்
நேர்காணல்அதிக விலை
அறிவு பூங்காஇருண்ட மாதிரி
 தவறான விளம்பரம்
பொது
சட்டம்தீர்ப்புகள்
நுகர்வோர் பாதுகாப்புவீட்டு உபயோகம்
உணவு பாதுகாப்புஉணவு
அத்தியாவசிய பொருட்கள்வீட்டு வசதி
தரநிலைகள்மருத்துவம்- மருந்துகள்
மருத்துவ-மருந்து கட்டுப்பாடுவங்கி/நிதி
வங்கி-நிதிகாப்பீடு
காப்பீடுபோக்குவரத்து
சட்ட அளவியல்அரசு
பொதுபொது
ஆய்வுகள்நாங்கள்
சந்தை ஆய்வுஎங்களைப் பற்றி
புலனாய்வுபுரவலர்கள்
திறனாய்வுஆதரிங்கள்
சவால்கள்பங்களியுங்கள்
ஒப்பீடு“பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆராய்ச்சி பூங்கா
கதம்பம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்