spot_img
November 23, 2024, 3:08 pm
spot_img

குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் சார்ந்த தேர்தல் அறிக்கை/கேள்விகள்! படியுங்கள்!  பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்! 

பல நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்கும் அவர்களது நலனுக்கும் சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டு சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதும் குற்றங்களைத் தடுப்பதும் அரசின் பணி என்ற நிலையில் மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டிய   குற்றங்களால் பாதிக்கபட்டோர் சார்ந்த தேர்தல் அறிக்கை/கேள்விகள்.

1. ஒரு குற்றம் நடைபெறுகிறது எனில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். சில நேரங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலுவதில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில்   விசாரணை நடைபெற்ற பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற்று விடுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.  எவ்வாறு இருப்பினும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அல்லது தகுந்த நிவாரணம் வழங்க சிறப்பு சட்டம் (law on victims of crimes) இயற்றப்படுமா? 

2. குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் நீதிமன்றத்தில் சாட்சியம் (witness protection) அளிக்க தகுந்த பாதுகாப்பும் செலவு தொகையும் வழங்கும் வகையில் சட்டம்  (Victims’ Assistance Act) கொண்டுவரப்படுமா?

3. சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற்று தரும் பணியை அரசே மேற்கொள்ளும் வகையில் சட்டம் (Victims’ Assistance Act) இயற்றப்படுமா?

4. உள்நாட்டு கலவரங்கள் வன்முறை போன்றவை ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவும் உதவும் வகையில் சட்டத்தின் மூலம் (Victims’ Assistance Act) திட்டம் கொண்டு வரப்படுமா?

5. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவும் உதவும் வகையில் சட்டத்தின் மூலம் (Victims’ Assistance Act) திட்டம் கொண்டு வரப்படுமா?

6. கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்றவற்றை முன்கூட்டியே தடுத்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசியல் கட்சிகள் தெரிவிப்பார்களா?

7. குற்ற செயலை புரிந்தவர்களை கண்டுபிடிக்க இயலாமல் போவதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீதான வழக்குகள் விடுதலை செய்யப்படுவதும்   அதிகரித்து உள்ள நிலையில் இத்தகைய நிலையை மாற்றுவதற்கு     தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முன்வைக்கும் திட்டம் என்ன?

8. அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவோர், மனித உரிமை மீறலால் பாதிக்கப்படுவோர் மற்றும் தேர்தல் குற்றங்களால்   பாதிக்கப்படுவோருக்கான உதவி திட்டங்கள் எவற்றை தேர்தல் கட்சிகள் முன்மொழிகின்றன?

9. அனைத்து வகையான குற்றங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இலவச சட்ட உதவி வழங்க  எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்?

10. குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் நலனுக்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும்   ஆணையங்கள் (Commission for the rights of victims of crimes) அமைக்க அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்