நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் மண்டப கூட்ட அரங்கில் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழ் தொடக்க விழா அமைதிக்கான உத்திகள் அமைப்பின் இயக்குனர் கே. பி. மனோகரன் தலைமையில் 01-01-2024 காலை 9 மணிக்கு நடைபெற்றது.
விரைவில் நுகர்வோர் பூங்காவின் ஆங்கில இணைய இதழும் பொது செய்தி கட்டுரைகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில இணைய இதழ்களும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான இணைய இதழும் அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட உள்ளது என்று தலைமையுரையின் போது கே பி மனோகரன் தெரிவித்தார்.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி தங்கராஜு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும் தமிழ்நாடு பார் கவுன்சில் இணைத் தலைவருமான என். மாரப்பன் நுகர்வோர் பூங்கா இணையத்தை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு பார் கவுன்சில் கௌரவ செயலாளருமான ஆர். அய்யாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும் நாமக்கல் மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞருமான டி.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நுகர்வோர் இணைய இதழில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட நிர்வாக அலுவலர், ஆசிரியர், துணை ஆசிரியர்கள் ஆகியோருக்கு நியமன ஆணைகளையும் சட்ட ஆராய்ச்சி பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தேர்வு கடிதங்களையும் அமைதிக்கான உத்திகள் அமைப்பின் இயக்குனர் கே. பி. மனோகரன் வழங்கினார்.
விழாவில் நாமக்கல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராஜவேலு, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, உள்ளிட்ட வழக்கறிஞர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் பூங்காவின் இணையத்தை வடிவமைத்த திபென் பாஸ்கரன் அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டார்
நுகர்வோர் பூங்காவின் ஆசிரியர் கே. கதிர்வேல், நுகர்வோர் பூங்கா ஆசிரியர் குழுவின் என். சின்னச்சாமி, ஏ.டி. கண்ணன், எம் சாஜ், கணக்கன்பட்டி சி. ஈஸ்வரன், பொன். ராஜதுரை ஆகியோர் விழா ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.